News May 7, 2025

ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்த முடிவு

image

நாட்டில் ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்த மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பாக பேசிய அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ், ஜாதிவாரி கணக்கெடுப்புக்கு காங்கிரஸ் எப்போதும் எதிராகவே நின்றிருக்கிறது என்று குற்றம்சாட்டினார். எனினும், ஜாதிவாரியான மக்கள் தொகை கணக்கெடுப்பின் முக்கியத்துவம் கருதி அதனை நடத்த அமைச்சரவை முடிவெடுத்திருப்பதாக அவர் கூறினார்.

Similar News

News July 6, 2025

சாக்ரடீஸ் பொன்மொழிகள்

image

*மனநிறைவு என்பது இயற்கையாக நம்மிடம் உள்ள செல்வமாகும். ஆடம்பரம் என்பது நாமே தேடிக்கொள்ளும் வறுமை. * உங்களை நீங்களே அறிவதுதான் ஞானத்தின் உச்சம்.
*உங்களுக்கு எதுவும் தெரியாது என்பதை அறிவதே உண்மையான ஞானமாகும். *வாழ்க்கையில் உண்மையான ஆபத்து மரணமல்ல, ஒரு தீய வாழ்க்கையை வாழ்வதே ஆகும். *எல்லா போர்களும் செல்வத்தைக் கைப்பற்றுவதற்காகவே நடத்தப்படுகின்றன.

News July 6, 2025

வேற லெவல்… அஜித் அப்படியே இருக்காரே..

image

கார் பந்தயத்தில் தீவிர ஆர்வம் கொண்ட நடிகர் அஜித், ‘ஃபாஸ்ட் அண்ட் பியூரியஸ்’ மற்றும் F1 படங்களின் அடுத்த பாகங்களில் நடிக்க அழைத்தால் நிச்சயம் நடிப்பேன் எனத் தெரிவித்துள்ளார். பந்தயங்களில் பங்கேற்றாலும், முழுநீள ரேஸ் படத்தில் நடிக்காத அஜித்தின் இந்த ஆசை ரசிகர்களை உற்சாகப்படுத்தியுள்ளது. சமூக வலைத்தளங்களில் ரசிகர்கள் எடிட் செய்து கொண்டாடி வருகின்றனர்.

News July 6, 2025

₹8,000 கோடியில் புதிய கன்டெய்னர் துறைமுகம்

image

சென்னை துறைமுகத்தின் வடக்கு பகுதியில் 2 கிமீ தூரத்துக்கு புதிய கன்டெய்னர் துறைமுகம் அமைப்பதற்கான சாத்தியக் கூறு ஆய்வு நடந்து வருவதாக துறைமுகத் தலைவர் சுனில் பாலிவால் தெரிவித்தார். இது ₹8,000 கோடியில் அமைக்கப்படவுள்ளது என்றும், சரக்கு வாகனங்கள் நிறுத்தம், கப்பல் பழுதுபார்ப்பு நிலையம் உள்ளிட்டவை இடம்பெற உள்ளதாகவும் கூறினார். இதன்மூலம் கூடுதலாக சரக்குகளைக் கையாள முடியும் என்றார்.

error: Content is protected !!