news

News March 20, 2024

பாஜக கூட்டணியில் இருந்து வெளியேறும் JD(S)?

image

கர்நாடகாவில் பாஜக கூட்டணியில் இருந்து JD(S) வெளியேற வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கர்நாடகாவில் மொத்தமுள்ள 28 மக்களவைத் தொகுதிகளில் பெங்களூரு, மண்டியா உள்ளிட்ட 5 தொகுதிகளை JD(S) கேட்டதாக தெரிகிறது. அதில் 4 தொகுதிகளில் பாஜக வேட்பாளர்களை அறிவித்தது. இதனால் அதிருப்தி அடைந்த JD(S) தலைவர் குமாரசாமி, பாஜக கூட்டணியில் இருந்து வெளியேறும் மனநிலைக்கு வந்துள்ளதாக கூறப்படுகிறது.

News March 20, 2024

திமுக வேட்பாளர்கள் பட்டியல் வெளியானது (2)

image

*நீலகிரி – ஆ.ராசா, *தூத்துக்குடி – கனிமொழி, *திருவண்ணாமலை – அண்ணாதுரை, *ஆரணி – தரணிவேந்தன், *தருமபுரி – ஆ.மணி, *சேலம் – செல்வகணபதி, *தஞ்சாவூர்- ச.முரசொலி, *தென்காசி – ராணி, *கோவை – கணபதி ராஜ்குமார், *பொள்ளாச்சி – ஈஸ்வரசாமி, *ஈரோடு – பிரகாஷ், *கள்ளக்குறிச்சி – மலையரசன் உள்ளிட்டோர் திமுக சார்பில் நேரடியாக போட்டியிட உள்ளனர்.

News March 20, 2024

இந்தியாவை பாஜக அரசு பாழாக்கி விட்டது

image

இந்தியாவை மத்தியில் ஆளும் பாஜக அரசு பாழாக்கி விட்டதாக திமுக தலைவரும், தமிழ்நாட்டின் முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் குற்றம்சாட்டியுள்ளார். சென்னை தேனாம்பேட்டையில் உள்ள திமுக தலைமையகத்தில் திமுக தேர்தல் அறிக்கையை வெளியிட்டு அவர் பேசினார். அப்போது, “நாட்டை பாஜக அரசு பாழ்படுத்தி விட்டது. தேர்தலில் கொடுத்த வாக்குறுதிகள் எதையும் பாஜக நிறைவேற்றவில்லை” என்று விமர்சித்தார்.

News March 20, 2024

திமுக வேட்பாளர்கள் பட்டியல் வெளியானது (1)

image

*வட சென்னை – கலாநிதி வீராசாமி, *மத்திய சென்னை – தயாநிதி மாறன், *தென் சென்னை – தமிழச்சி தங்கப்பாண்டியன், *ஸ்ரீபெரும்புதூர் – டி.ஆர்.பாலு, *காஞ்சிபுரம் – செல்வம், *அரக்கோணம் – ஜெகத்ரட்சகன், *வேலூர் – கதிர் ஆனந்த், பெரம்பலூர் – அருண்நேரு, தேனி – தங்கதமிழ்ச்செல்வன்

News March 20, 2024

அதிமுகவை பலவீனப்படுத்த பாஜக திட்டமிடுகிறதா?

image

எதிர்கால நலனைக் கருத்தில் கொண்டு, அதிமுகவை பலவீனப்படுத்த அரசியல் சதுரங்கத்தில் பாஜக காய்களை நகர்த்தி வருகிறது. பாஜக – பாமக கூட்டணியால், வெற்றி வாய்ப்புகளை உறுதி செய்துவிட முடியாது. இருப்பினும், பாமகவை தங்கள் பக்கம் இழுத்ததன் மூலம் வட தமிழகத்தில் N.D.A கூட்டணியின் வாக்கு வங்கியை உயர்த்துவதோடு, அதிமுகவை பலவீனப்படுத்தி 3ஆம் இடத்திற்கு தள்ளும் ராஜதந்திர அரசியலை பாஜக நேர்த்தியாக செய்திருக்கிறது.

News March 20, 2024

தேர்தல் அறிக்கையை வெளியிட்டார் ஸ்டாலின்

image

மக்களவைத் தேர்தலுக்கான திமுகவின் தேர்தல் அறிக்கையை முதல்வர் ஸ்டாலின் வெளியிட்டுள்ளார். அதில் புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து வழங்கப்படும். மகளிர் உதவித் தொகை ரூ.1000 இந்தியா முழுவதும் விரிவுப்படுத்தப்படும். நாடு முழுவதும் அரசு பள்ளிகளில் காலை உணவு திட்டம் விரிவுப்படுத்தப்படும். மகளிர் சுய உதவி குழுக்களுக்கு ரூ.10 லட்சம் வட்டியில்லா கடன் வழங்கப்படும். இலங்கை தமிழர்களுக்கு குடியுரிமை வழங்கப்படும்.

News March 20, 2024

புதிய தமிழகம் தென்காசியில் போட்டி

image

மக்களவைத் தேர்தலில் அதிமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள புதிய தமிழகம் கட்சிக்கு தென்காசி தனித் தொகுதி ஒதுக்கப்பட்டுள்ளது. கடந்த 2019ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தலில் இந்த தொகுதியில் பு.த.க சார்பில் கிருஷ்ணசாமி போட்டியிட்டு தனுஷ் எம் குமாரிடம் தோல்வியடைந்தார். இந்த முறை பு.த.க சார்பில் கிருஷ்ணசாமியே மீண்டும் போட்டியிடுவார் எனத் தெரிகிறது.

News March 20, 2024

BREAKING: கூட்டணியை அறிவித்தது தேமுதிக

image

மக்களவைத் தேர்தலில் அதிமுகவுடன் கூட்டணி அமைத்து போட்டியிடுவதாக தேமுதிக அறிவித்துள்ளது. அதன்படி, அதிமுக கூட்டணியில் தேமுதிகவுக்கு 5 தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. எனினும், அவை எந்தெந்த தொகுதிகள் என்பது குறித்து அறிவிக்கப்படவில்லை. அதேபோல், தேமுதிக கட்டாயம் கேட்ட மாநிலங்களவை சீட் குறித்த அறிவிப்பும் வெளியாகவில்லை.

News March 20, 2024

அதிமுக முதற்கட்ட வேட்பாளர்கள் (2)

image

9. ஆரணி – கஜேந்திரன் 10. அரக்கோணம் – விஜயன் 11. விழுப்புரம் – பாக்யராஜ் 12. சேலம் – விக்னேஷ், 13. ஈரோடு – ஆற்றல் அசோக்குமார் 14. நாகை – சுர்ஜித் சங்கர் 15. வடசென்னை – ராயபுரம் மனோ 16. ராமநாதபுரம் – ஜெயபெருமாள் உள்ளிட்டோர் போட்டியிடுகின்றனர்.

News March 20, 2024

அதிமுக முதற்கட்ட வேட்பாளர்கள் (1)

image

மக்களவைத் தேர்தலில் அதிமுக நேரடியாக போட்டியிடும் 16 பேர் கொண்ட முதற்கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. 1. தென்சென்னை – ஜெயவர்தன் 2. காஞ்சிபுரம் – ராஜசேகர் 3. நாமக்கல் – தமிழ்மணி 4. கரூர் – கே.ஆர்.என்.தங்கவேல் 5. மதுரை – சரவணன் 6. தேனி – நாராயணன் 7. சிதம்பரம் – சந்திரசேகரன், 8. கிருஷ்ணகிரி – ஜெயபிரகாஷ் ஆகியோர் போட்டியிடுகின்றனர்.

error: Content is protected !!