News March 20, 2024
அதிமுகவை பலவீனப்படுத்த பாஜக திட்டமிடுகிறதா?

எதிர்கால நலனைக் கருத்தில் கொண்டு, அதிமுகவை பலவீனப்படுத்த அரசியல் சதுரங்கத்தில் பாஜக காய்களை நகர்த்தி வருகிறது. பாஜக – பாமக கூட்டணியால், வெற்றி வாய்ப்புகளை உறுதி செய்துவிட முடியாது. இருப்பினும், பாமகவை தங்கள் பக்கம் இழுத்ததன் மூலம் வட தமிழகத்தில் N.D.A கூட்டணியின் வாக்கு வங்கியை உயர்த்துவதோடு, அதிமுகவை பலவீனப்படுத்தி 3ஆம் இடத்திற்கு தள்ளும் ராஜதந்திர அரசியலை பாஜக நேர்த்தியாக செய்திருக்கிறது.
Similar News
News February 11, 2026
தமிழ்மொழித் தேர்வை கட்டாயமாக்குக: சீமான்

பிறமொழி பயிலும் மாணவர்களுக்கு 10-ம் வகுப்பு பொதுத் தேர்வில் கட்டாயத்தமிழ் பாடம் தேர்வெழுத TN அரசு விலக்கு அளித்துள்ளதற்கு சீமான் கண்டனம் தெரிவித்துள்ளார். தமிழ்மொழித் தேர்வை கட்டாயமாக்கி அரசாணை வெளியிட்டு 10 ஆண்டுகளாகியும், அதனை நடைமுறைப்படுத்தாதது அன்னை தமிழுக்கு செய்யும் பெருந்துரோகம் என்றும், நடப்பு கல்வியாண்டு முதலே தமிழ்மொழித் தேர்வை கட்டாயமாக்க வேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளார்.
News February 11, 2026
சிவ ராத்திரி, வார விடுமுறை.. சிறப்பு பஸ்கள் அறிவிப்பு

மகா சிவராத்திரி, வார விடுமுறையையொட்டி, மக்கள் நெரிசலின்றி ஊர்களுக்குச் செல்ல ஏதுவாக, சிறப்பு பஸ்களை போக்குவரத்துத் துறை அறிவித்துள்ளது. அதன்படி, சென்னை உள்ளிட்ட முக்கிய நகரங்களில் இருந்து நாளை(பிப்.12) முதல் 3 நாள்களுக்கு சுமார் 750 பஸ்கள் கூடுதலாக இயக்கப்பட உள்ளன. இதுவரை 5,000-க்கும் மேற்பட்டோர் முன்பதிவு செய்துள்ளனர். tnstc இணையதளம் மற்றும் செல்போன் செயலியில் டிக்கெட்டை புக் செய்யுங்கள்.
News February 11, 2026
வந்தே மாதரம்… இனி நீக்கப்பட்ட வரிகளையும் பாட உத்தரவு!

வந்தே மாதரம் பாடலில் நாட்டை பெண் தெய்வங்களுடன் ஒப்பிடும் வரிகள் இருப்பதால் சிறுபான்மையினரின் உணர்வுகளைக் கருத்தில் கொண்டு, 1937-ல் முதல் இரண்டு பத்திகளை மட்டும் தேசியப் பாடலாக காங்., அங்கீகரித்தது. அது 1950-ல் அதிகாரப்பூர்வமானது. இந்நிலையில், இதற்கு எதிர்ப்பு தெரிவித்து வந்த பாஜக அரசு, தற்போது நீக்கப்பட்ட வரிகளையும் சேர்த்தே வந்தே மாதரத்தை இசைக்கவேண்டும் என உத்தரவிட்டுள்ளது.


