India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
பரத் நடிக்கும் ‘ஒன்ஸ் அபான் எ டைம் இன் மெட்ராஸ்’ (Once Upon A Time In Madras) திரைப்படம் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. பிரசாத் முருகன் இயக்கும் இந்தப் படத்திற்கு, ஜோஸ் ஃப்ராங்க்ளின் இசையமைத்துள்ளார். கதையின் நாயகிகளாக விருமாண்டி அபிராமி, அஞ்சலி நாயர் மற்றும் பவித்ரா லட்சுமி ஆகியோர் நடித்துள்ளனர். ஹைப்பர் லூப் திரில்லர் கதைக்களத்தில் உருவாகும் இப்படத்தின் டீசர் விரைவில் வெளியாகவுள்ளது.
மக்களவைத் தேர்தலையொட்டி ‘விக்சித் பார்த் சம்பர்க்’ என்ற பெயரில் மத்திய பாஜக அரசு வாட்ஸ் அப் மெசேஜ் அனுப்பி வருகிறது. இந்த நிலையில், இதே பெயரை பயன்படுத்தி சைபர் கிரைம் குற்றவாளிகள் மோசடி செய்ய வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. குறிப்பாக, மக்களிடம் கருத்து கேட்பது போல, அவர்களது செல்போனில் உள்ள தகவல்கள் மற்றும் பணத்தை திருடுவதாகவும் புகார் எழுந்துள்ளது. உங்களுக்கு இந்த மெசேஜ் வந்ததா?
மலையாள நடிகர் ஃபகத் பாசில் நடிக்கும் 2 புதிய படங்களின் அறிவிப்பு வெளியாகியுள்ளது. சித்தார்த்தா நாதெல்லா இயக்கும் படத்திற்கு ‘ஆக்சிஜன்’ எனவும், ஷஷாங்க் யெலேட்டி இயக்கும் படத்திற்கு ‘டோன்ட் டிரபிள் தி டிரபிள்’ (Dont Trouble The Trouble) எனவும் பெயரிடப்பட்டுள்ளது. இயக்குநர் ராஜமௌலி தயாரிக்கும் இந்த இரு படங்களின் படப்பிடிப்பும் இந்தாண்டே தொடங்க உள்ளதால், ரசிகர்கள் ஆவலுடன் உள்ளனர்.
தமிழகத்தில் இன்று அதிகபட்சமாக சேலம் மாவட்டத்தில் 38.8 டிகிரி செல்சியஸ் வெயில் பதிவாகியுள்ளது. கோடைகாலம் தொடங்கிவிட்ட நிலையில், நாளுக்கு நாள் வெப்பம் அதிகரித்து கொண்டே செல்கிறது. நாளை முதல் அடுத்த 3 நாட்களுக்கு தமிழகத்தின் ஒருசில இடங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதனால் கடும் வெயிலால் அவதிப்பட்டு வந்த மக்கள், பெருமூச்சு விட்டுள்ளனர்.
கிரிக்கெட் வீரர்களுக்கான ஊதிய ஒப்பந்தப் பட்டியலில் ஷர்ஃப்ராஸ் கான், துருவ் ஜூரல் சேர்க்கப்பட்டுள்ளனர். இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட்டில் இருவரும் சிறப்பாக விளையாடினர். இந்த நிலையில், கிரிக்கெட் வாரிய உயர்மட்ட ஆலோசனை கூட்டத்தில் ஷர்ஃப்ராஸ், துருவ் ஆகியோரை ஊதியப் பட்டியலில் சேர்க்க முடிவு செய்யப்பட்டது. முன்னதாக ஊதிய ஒப்பந்தத்தில் இருந்து ஸ்ரேயஸ் ஐயர், இஷான் கிஷன் நீக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
மக்களவைத் தேர்தல் நடைபெற இருப்பதால் UPSC CSE தேர்வுத் தேதிகள் தள்ளி வைக்கப்பட்டுள்ளன. மே 26ஆம் தேதி நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டிருந்த முதன்மைத் தேர்வு (Prelims) ஜூன் 16ஆம் தேதி நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. மே 26ஆம் தேதி நடப்பதாக இருந்த வனத்துறை தேர்வுகளுக்கான Screening ஜூன் 16ஆம் தேதிக்கு தள்ளி வைக்கப்பட்டுள்ளது.
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் வருடாந்திர தெப்போற்சவம் நாளை தொடங்கி 24ஆம் தேதி வரை 5 நாட்கள் நடைபெற உள்ளது. நாளை முதல் நாளில், இரவு உற்சவர்களான ராமச்சந்திரமூர்த்தி, சீதா, லட்சுமணர், ஆஞ்சநேயர் ஆகியோர் தெப்பத்தேரில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள் பாலிக்க உள்ளனர். 20, 21ஆம் தேதிகளில்- சகஸ்ர தீபலங்கார சேவை, 22, 23, 24ஆம் தேதிகளில்- ஆர்ஜித பிரம்மோற்சவம், சகஸ்ர தீபலங்கார சேவை ரத்து செய்யப்படுகின்றன.
பாசிசத்தை வீழ்த்த வேண்டும் என்ற இலக்குடன் ஒன்றுபட்டு நிற்போம்! வென்று காட்டியே தீருவோம்! என முதல்வர் ஸ்டாலின் சூளுரைத்துள்ளார். இது தொடர்பாக வெளியிட்டுள்ள அறிக்கையில், 10 ஆண்டுகளாக ஆட்சி செய்த, மக்கள் விரோத பாஜக அரசை விரட்ட வேண்டும் என வலியுறுத்தியுள்ளார். மேலும், நாற்பதும் நமதே! நாடும் நமதே! என்ற வகையில் இந்தியா கூட்டணி மகத்தான வெற்றி அடைய அனைவரும் ஒத்துழைக்குமாறு அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
எஸ்பிஐ வங்கியில் ப்ரோபேஷனரி ஆபீஸர்களை தேர்வு செய்வதற்கான இறுதி முடிவுகள் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளன. மொத்தம் 2000 காலிப் பணியிடங்களுக்கான தேர்வுகள் பல கட்டங்களாக நடைபெற்றன. இறுதியாக, ஜனவரி 21ஆம் தேதிக்கு பிறகு நேர்காணல் மற்றும் நேர்முகத் தேர்வுகள் நடைபெற்றன. அதில் தேர்ச்சி பெற்றவர்களின் விவரங்களை <
இந்தியாவின் முன்னணி உணவு டெலிவரி நிறுவனமான ஜொமாட்டோ, சைவ உணவுக்கென தனி ஆட்களை நியமித்திருக்கிறது. இவர்கள் பச்சை வண்ண உடை உடுத்திக் கொண்டு சைவ உணவகங்களுக்கு மட்டும் சென்று, சைவ உணவுகளை மட்டுமே டெலிவரி செய்வார்கள் என்று சொல்லப்பட்டுள்ளது. உணவில் வேற்றுமையை ஒழிக்க வேண்டும் என்று ஒருபுறம் போராட்டங்கள் நடைபெற்று வரும் நிலையில் ஜொமாட்டோ நிறுவனத்தின் செயல்பாடு அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
Sorry, no posts matched your criteria.