News March 19, 2024

SBI PO முடிவுகள் வெளியானது

image

எஸ்பிஐ வங்கியில் ப்ரோபேஷனரி ஆபீஸர்களை தேர்வு செய்வதற்கான இறுதி முடிவுகள் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளன. மொத்தம் 2000 காலிப் பணியிடங்களுக்கான தேர்வுகள் பல கட்டங்களாக நடைபெற்றன. இறுதியாக, ஜனவரி 21ஆம் தேதிக்கு பிறகு நேர்காணல் மற்றும் நேர்முகத் தேர்வுகள் நடைபெற்றன. அதில் தேர்ச்சி பெற்றவர்களின் விவரங்களை <>இந்த லிங்க்-ஐ<<>> க்ளிக் செய்து அறியலாம்.

Similar News

News April 10, 2026

ஜன நாயகன் லீக்.. பொங்கிய சிவகார்த்திகேயன்

image

‘ஜன நாயகன்’ படம் முழுவதுமே இணையத்தில் கசிந்ததற்கு நடிகர் சிவகார்த்திகேயன் கண்டனம் தெரிவித்துள்ளார். படத்தை கசியச் செய்தவர்கள் மீது நிச்சயம் நடவடிக்கை எடுக்க வேண்டுமென சிவகார்த்திகேயன் வலியுறுத்தியுள்ளார். ஒவ்வொருவரும் திரைத்துறையினரின் கடின உழைப்புக்கும், திரைத்துறைக்கும் உரிய மரியாதை அளிக்க வேண்டும் எனத் தெரிவித்த அவர், அனைவரும் படத்தை தியேட்டரில் பார்க்குமாறு கேட்டுக் கொண்டார்.

News April 10, 2026

பிஹாரின் அடுத்த முதல்வர் யார்?

image

தேசிய அரசியலுக்குள் <<19614648>>நிதிஷ் <<>>நுழைந்துவிட்டதால், பிஹாரின் அடுத்த முதல்வர் யார் என்ற பெரும் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. இதுதொடர்பாக, பாஜக மூத்த தலைவர்கள் தீவிரமாக ஆலோசித்து வருகின்றனர். தற்போது முதல்வர் ரேஸில் பாஜகவின் சாம்ராட் சௌத்ரி, விஜய் குமார் சின்ஹா இடையே போட்டி நிலவுவதாக கூறப்படுகிறது. டெல்லி தலைமையின் ஆதரவு உள்ளதால் சாம்ராட் சௌத்ரிக்கு வாய்ப்பு அதிகம் உள்ளதாக பேசப்படுகிறது.

News April 10, 2026

மகளிர் உரிமைத் தொகை.. NEW UPDATE

image

மாநில அளவிலான அனைத்து நலத் திட்டங்களுக்கும் ஆதார் அடிப்படையிலான சரிபார்ப்பு முறையை தமிழக அரசு அறிமுகப்படுத்தியுள்ளது. அதன்படி, மகளிர் உரிமைத் தொகை, முதியோர் பென்சன் உள்ளிட்ட பயனாளிகளின் தரவுகள் சரிபார்க்கப்படும். மகளிர் உரிமைத் தொகை பெற்று வருபவர்கள் வேறு திட்டத்தில் பயனாளிகளாக இருந்தால், அவர்களுக்கு உரிமைத் தொகை நிறுத்தப்படும். அரசின் திட்டங்கள் சரியான பயனாளிகளை சென்றடைவதே இதன் நோக்கம்.

error: Content is protected !!