India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
பிப்ரவரி மாதத்தில் அஸ்தமனமான சனி பகவான் இன்று (மார்ச் 18) கும்ப ராசியில் உதயமாகியுள்ளார். இதனால் மேஷம், ரிஷபம், மிதுனம், சிம்மம் ஆகிய ராசியினருக்கு பண மழை கொட்டப்போகிறது. புதிய முதலீடுகள், வியாபாரத்தில் லாபம், நீண்ட நாள் நிலுவையில் உள்ள கடன் பாக்கி வசூலாவது, பல நாள் கனவு கைகூடுவது, வெளிநாடுகளில் பணி வாய்ப்பு போன்ற பல்வேறு சுப பலன்களை மேற்கண்ட ராசியினர் அனுபவிக்க உள்ளனர்.
பாஜக – பாமக கூட்டணி உறுதியான நிலையில் இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை பாமக நிறுவனர் ராமதாஸ் நாளை காலை அறிவிக்க உள்ளார். இன்று தைலாபுரத்தில் நடைபெற்ற பாமக உயர்நிலை செயல்திட்ட குழு கூட்டத்தில், பாஜக கூட்டணியில் இணைவது தொடர்பாக நிர்வாகிகளிடம் பேசி இறுதி முடிவெடுக்கப்பட்டது. பாஜக கூட்டணியில் பாமகவுக்கு 10 முதல் 14 தொகுதிகளும், ஒரு மாநிலங்களவை இடமும் வழங்கப்பட அதிக வாய்ப்புள்ளது.
2024 ஐபிஎல் தொடரில் பங்கேற்க கே.எல்.ராகுல் நல்ல உடற்தகுதியுடன் இருப்பதாக NCA அறிவித்துள்ளது. இங்கிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் பங்கேற்ற அவர், காயம் காரணமாக மற்ற 4 போட்டிகளிலும் பங்கேற்கவில்லை. லண்டனில் தீவிர சிகிச்சை பெற்று வந்த அவர், தற்போது முழுவதும் குணமடைந்தார். இதனைத் தொடர்ந்து, ஐபிஎல் தொடரின் தொடக்க போட்டிகளில் கீப்பராக இருக்க வேண்டாம் எனவும் NCA அறிவுறுத்தியுள்ளது.
சென்னை அருகே திமுக நிர்வாகி ஆராவமுதன் கொல்லப்பட்ட வழக்கில் வண்டலூர் ஊராட்சி மன்ற தலைவி முத்தமிழ் செல்வி கைது செய்யப்பட்டுள்ளார். பிப்ரவரி 29ஆம் தேதி வண்டலூர் அருகே நாட்டு வெடிகுண்டுகளை வீசி ஆராவமுதன் கொல்லப்பட்டார். இந்த வழக்கில் இதுவரை 10 பேர் கைதாகியுள்ளனர். இந்த நிலையில், கொலைக்கு மூளையாக செயல்பட்டதாக முத்தமிழ் செல்வி, அவரது கார் ஓட்டுநர் துரைராஜ் ஆகியோரை தனிப்படை போலீசார் இன்று கைது செய்தனர்.
வாழ்க்கை முறை மாற்றத்தினால் இன்றைய தலைமுறையினர் பலர் இரவில் தூக்கமின்றி தவிக்கின்றனர். அதனை சீர் செய்ய இந்த டிப்ஸ்களை முயற்சித்து பாருங்கள்
* தினமும் ஒரே நேரத்தில் தூங்கி, ஒரே நேரத்தில் எழுந்திருங்கள்
* படுக்கையறையை இருட்டாகவும், அமைதியாகவும், குளிர்ச்சியாகவும் வைத்துக் கொள்ளுங்கள்
* தூங்குவதற்கு ஒரு மணி நேரத்திற்கு முன் செல்ஃபோன், கம்ப்யூட்டர்களில் இருந்து விடுபடுங்கள்
மக்களவைத் தேர்தல் தமிழகத்தில் ஏப்ரல் 19ஆம் தேதி நடைபெற உள்ளது. திமுக தலைமையிலான கூட்டணி ஏற்கெனவே தொகுதிப் பங்கீட்டை முடித்துவிட்டது. ஆனால், அதிமுக நிலை என்னவென்று தெரியாமல் தொண்டர்கள் குழம்பி வருகின்றனர். புதிய தமிழகம் போன்ற சிறு கட்சிகள் அதிமுகவில் இணைந்துள்ள நிலையில், தேமுதிக இணையுமா என்ற சந்தேகம் நிலவுகிறது. இதனால், இந்த தேர்தலில் அதிமுக தனித்து விடப்பட்டதாக அரசியல் நோக்கர்கள் கருதுகின்றனர்.
நீண்ட இழுபறிக்கு பிறகு பாஜகவுடன் கூட்டணி சேர்வதாக பாமக அறிவித்துள்ளது. இதனால், பாஜகவுக்கு அதிகப்படியான பலன்கள் இருப்பதாக விமர்சகர்கள் கருதுகின்றனர். அதிமுகவுடனான கூட்டணியை முறித்திருப்பதால், தமிழகத்தில் வாக்கு சதவீதத்தை உயர்த்திக் காட்ட வேண்டிய நிர்பந்தத்தில் இருக்கிறது பாஜக. பாமகவின் வாக்கு சதவீதம் இணையும் போது பாஜகவுக்கு அது மிக சாதகமான முடிவுகளை கொடுக்கும்.
ரிஷப் பண்ட் பழைய மாதிரி அதிரடியாக விளையாடுவது கொஞ்சம் கடினம் என்று கவாஸ்கர் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக பேசிய அவர், “ரிஷப் பண்ட் முட்டிப் பகுதி இன்னும் பலம் பெற்று இருக்காது. விக்கெட் கீப்பராக பணியாற்றுவது சிரமமாக இருக்கும். எனவே ஐபிஎல் தொடரின் ஆரம்பப் போட்டிகளில் நாம் உண்மையான ரிஷப் பண்டை பார்க்க முடியாது. அதற்காக சில ஆட்டங்கள் நாம் காத்திருக்க வேண்டிய தேவை நிச்சயம் இருக்கும்” என்றார்.
தற்கொலை செய்வது போல நாள்தோறும் கனவு வந்ததை தாங்க முடியாத 12ஆம் வகுப்பு மாணவி, தற்கொலை செய்துகொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சென்னையைச் சேர்ந்த மாணவி, பல நாட்களாக இந்த பிரச்னையை சந்தித்துள்ளார். இது குறித்து கடிதம் எழுதியுள்ள அவர், அடிக்கடி வரும் கனவால் தன்னால் எதுவும் செய்ய முடியவில்லை. எனவே ‘3’ படத்தில் வருவது போல தற்கொலை செய்து கொள்கிறேன் எனக் கூறியுள்ளார். தற்கொலை எதற்கும் தீர்வல்ல.
போதைப் பொருட்களின் தலைமை இடமாக குஜராத் உள்ளதாக முத்தரசன் குற்றம் சாட்டியுள்ளார். போதைப் பொருட்கள் இந்தியா முழுவதும் குஜராத்தில் இருந்து தான் இறக்குமதி செய்யப்படுகிறது. குஜராத்தில் போதைப் பொருட்களை தடுத்து நிறுத்திவிட்டால், இந்தியா முழுவதும் போதைப் பொருட்கள் விநியோகம் செய்யப்பட வாய்ப்பே இல்லை. எனவே, மத்திய பாஜக அரசு குஜராத்தில் தீவிரம் காட்டி போதைப் பொருட்களை ஒழிக்க வேண்டும் என அவர் கூறினார்.
Sorry, no posts matched your criteria.