India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
கோயம்பேடு சந்தையில் காய்கறிகள் விலை இன்று கடும் சரிவைக் கண்டுள்ளது. ஆந்திரா, கர்நாடகா மாநிலங்களிலிருந்து 800 வாகனங்களில் 9,000 டன் காய்கறிகள் விற்பனைக்கு வந்துள்ளன. இதனால் 1 கிலோ தக்காளி- ₹8, பீட்ரூட்- ₹10, பீன்ஸ்- ₹20, பூண்டு- ₹90, தேங்காய்- ₹20, கத்திரிக்காய், சுரைக்காய் தலா ₹10க்கு விற்பனையாகிறது. இது, பொதுமக்களுக்கு மகிழ்ச்சியை அளித்தாலும் விவசாயிகள், வியாபாரிகளை கவலையில் ஆழ்த்தியுள்ளது.
சாதி ஆணவப் படுகொலைகளுக்கு சுப.வீரபாண்டியனும், திருமாவளவனும் தான் காரணம் என்று நேற்று எச்.ராஜா பேசியது பெரும் சர்ச்சையானது. இதுகுறித்து சுபவீ., எச்.ராஜாவுக்கு மனநலம் சரியில்லையோ என தோன்றுகிறது. அவர் நாகரிகமாக பேசினால்தான் ஆச்சரியம்; அநாகரிகமாக பேசி பேசியே அழிந்துவிட்டார் என்று பதிலடி கொடுத்துள்ளார். மேலும், மனுநீதியால் ஏற்பட்ட சாதிய ஏற்றத்தாழ்வுகள் தான் ஆணவப் படுகொலைகளுக்கு காரணம் எனவும் சாடினார்.
மதுரையில் காவலர் கொலை வழக்கில், சினிமா பாணியில் ஒருவரை போலீசார் சுட்டுப்பிடித்துள்ளனர். விருதுநகரை சேர்ந்த காவலர் மலையரசன் கடந்த 19ம் தேதி எரித்துக்கொலை செய்யப்பட்டார். இந்த வழக்கில் வில்லாபுரத்தை சேர்ந்த மூவேந்திரனை பிடிக்க முயன்றபோது அவர், போலீசாரை தாக்க முயன்றதால் சுட்டுப் பிடித்ததாகக் கூறப்படுகிறது. மேலும், பணத்திற்காக இந்த கொலையை செய்ததாக மூவேந்திரன் வாக்குமூலம் கொடுத்துள்ளார்.
சுஷாந்த் சிங் தற்கொலையில் ரியா சக்ரவர்த்திக்கு எந்த தொடர்பும் இல்லை என ஆரம்பத்தில் இருந்தே கூறி வருவதாக அவரது வழக்கறிஞர் மனேஷிண்டே விளக்கமளித்துள்ளார். சுஷாந்த் இறக்கும்போது 2 -3 வேலைக்காரர்கள் வீட்டில் இருந்தனர். பிரேத பரிசோதனை அறிக்கையிலும் மரணத்திற்கான காரணம் மூச்சுத்திணறல் என குறிப்பிடப்பட்டிருந்தது. அப்படி இருந்தபோதிலும் ரியாவை சுஷாந்த் குடும்பத்தினர் சிக்க வைத்ததாக குற்றம் சாட்டினார்.
<<15867785>>அண்ணாமலையை <<>>டூப் போலீஸ், லஞ்சப் பேர்வழி என்றுகூட கூறுவேன் என சேகர் பாபு பதிலடி கொடுத்துள்ளார். ஒருவர் மீது குற்றச்சாட்டு வைத்தால் அதற்கு ஆதாரம் வேண்டும் என தன்மீதான விமர்சனத்திற்கு விளக்கம் கொடுத்த அவர், அண்ணாவால் வளர்க்கப்பட்டவர்கள் கூண்டுக்கிளியல்ல, கூவும் குயில்கள்; திமுகவினர் சிறைக்கு அஞ்சாத சிங்கங்கள். ஊசிப்போன பண்டமாக இருக்கும் பாஜகவை 2026இல் மக்கள் தூக்கி எறிவார்கள் என்று தெரிவித்துள்ளார்.
ரவுடி சரித்திரப் பதிவேட்டில் இருந்தவர் அமைச்சர் சேகர்பாபு என்று அண்ணாமலை குற்றம் சாட்டியுள்ளார். திமுகவில் யாரும் படித்து அதிகாரத்துக்கு வரவில்லை என விமர்சித்த அவர், மக்கள் பணத்தை கொள்ளையடித்தவர்கள், கள்ளச்சாராயம் காய்ச்சியவர்கள் எல்லாம் சேர்ந்துகொண்டு கல்விக் கொள்கையை பற்றி பேசிக் கொண்டிருக்கின்றனர். சேகர்பாபு போல் அமைச்சர்களாக இருந்தால் நாடு விளங்குமா? என்றும் கடுமையாக சாடியுள்ளார்.
‘உழவரை தேடி’ வேளாண் நலத்துறை திட்டம் மே மாதத்தில் செயல்படுத்த முடிவெடுக்கப்பட்டுள்ளது. 17,116 வருவாய் கிராமங்களிலும் ஓராண்டுக்குள் திட்டம் அமலாகவுள்ளது. இத்திட்டத்தின்படி, அனைத்துத் துறைகளின் அதிகாரிகள் கொண்ட குழு, விவசாயிகளை சந்தித்து பயிர் பாதுகாப்பு, சாகுபடி, மகசூல் குறித்து விளக்கமளிக்கும். மாதம் 2 முறை தேர்ந்தெடுக்கப்பட்ட கிராமங்களில் இதற்கான முகாம் நடக்கும்.
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை தொடர்ந்து 3ஆவது நாளாகக் குறைந்துள்ளது. இன்று (மார்ச் 24) சவரனுக்கு ₹120 குறைந்துள்ளதால் 22 கேரட் ஒரு கிராம் ₹8,215க்கும், சவரன் ₹65,720க்கும் விற்பனையாகிறது. கடந்த 4 நாள்களில் சவரனுக்கு ₹760 குறைந்துள்ளது. அதேநேரம் வெள்ளி விலையில் இன்று மாற்றமின்றி ஒரு கிராம் ₹110க்கும், பார் வெள்ளி ஒரு கிலோ ₹1,10,000க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
TNல் தேர்தல் தொடர்பான பிரச்னைகளுக்கு தீர்வு காணும் விதமாக, அனைத்துக் கட்சி ஆலோசனைக் கூட்டம் தலைமைச்செயலகத்தில் இன்று நடைபெறுகிறது. தமிழக தலைமை தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் தலைமையில் நடக்கும் இக்கூட்டத்தில், ஒரே நபர் 2 வாக்காளர் அட்டைகள் வைத்திருப்பது, இறந்தவர்களின் பெயர் நீக்காதது உள்ளிட்ட விவகாரங்கள் குறித்து ஆலோசிக்கப்பட உள்ளது. இதில் திமுக, அதிமுக உள்ளிட்ட 14 கட்சிகள் பங்கேற்கின்றன.
இந்தியாவில் பெரும்பாலான பகுதிகளில் அடுத்த 4 நாள்களில் வெப்பநிலை 4 டிகிரி செல்சியஸ் வரை அதிகரிக்கும் என்று IMD எச்சரித்துள்ளது. குறிப்பாக, தமிழ்நாட்டில் இன்று இயல்பை விட 3 டிகிரி செல்சியஸ் வரை வெப்பநிலை அதிகமாக பதிவாகும் என்பதால், நண்பகல் 12 முதல் 3 மணி வரை வீட்டை விட்டு வெளியே வர வேண்டாம். அத்தியாவசிய தேவைகளுக்கு வெளியே சென்றால், குடை மற்றும் தொப்பிகளை பயன்படுத்த சுகாதாரத்துறை அறிவுறுத்தியுள்ளது.
Sorry, no posts matched your criteria.