News March 24, 2025
வெயில்.. மக்களுக்கு எச்சரிக்கை

இந்தியாவில் பெரும்பாலான பகுதிகளில் அடுத்த 4 நாள்களில் வெப்பநிலை 4 டிகிரி செல்சியஸ் வரை அதிகரிக்கும் என்று IMD எச்சரித்துள்ளது. குறிப்பாக, தமிழ்நாட்டில் இன்று இயல்பை விட 3 டிகிரி செல்சியஸ் வரை வெப்பநிலை அதிகமாக பதிவாகும் என்பதால், நண்பகல் 12 முதல் 3 மணி வரை வீட்டை விட்டு வெளியே வர வேண்டாம். அத்தியாவசிய தேவைகளுக்கு வெளியே சென்றால், குடை மற்றும் தொப்பிகளை பயன்படுத்த சுகாதாரத்துறை அறிவுறுத்தியுள்ளது.
Similar News
News July 7, 2025
‘மேகதாது திட்டத்துக்கு 5 நிமிடத்தில் அனுமதி பெறுவேன்’

மேகதாதுவில் அணை கட்டுவதற்கு கர்நாடகா அரசு தற்போது ஆயத்த பணிகளை துவக்கியுள்ளது. அதைப்போன்று கர்நாடகா பாஜக எம்.பிக்கள், மத்திய அமைச்சர் குமாரசாமி மேகதாது தொடர்பாக எவ்வித நடவடிக்கை எடுக்கவில்லை என காங்., குற்றம் சுமத்தியது. இதற்கு பதிலளித்த குமாரசாமி, தமிழக கூட்டணி கட்சிகளிடம் காங்., சம்மதம் பெற்றால், மேகதாது திட்டத்திற்கு பிரதமரிடம் பேசி 5 நிமிடத்தில் அனுமதி பெற்று தருவேன் என தெரிவித்தார்.
News July 7, 2025
தினம் ஒரு திருக்குறள்

▶குறள் பால்: பொருட்பால் ▶இயல்: அரசியல் ▶அதிகாரம்: இறைமாட்சி ▶குறள் எண்: 389 ▶குறள்: செவிகைப்பச் சொற்பொறுக்கும் பண்புடை வேந்தன் கவிகைக்கீழ்த் தங்கும் உலகு. ▶பொருள்: துணையாக இருப்போர் செவிபொறுத்துக் கொள்ள முடியாத சொற்களைச் சொன்னாலும் அவற்றின் நன்மை கருதிப் பொறுத்துக் கொள்ளும் பண்புடைய வேந்தனது குடை நிழலில் உலகம் தங்கி நிற்கும்.
News July 7, 2025
இந்திய வம்சாவளிக்கு பொறுப்பு: எலான் மஸ்க் அதிரடி

அமெரிக்கா பார்ட்டி என்ற புதிய கட்சியை தொடங்கிய எலான் மஸ்க், பொருளாளராக இந்திய வம்சாவளியை சேர்ந்த வைபவ் தனேஜாவை நியமித்துள்ளார். டெல்லியில் பிறந்த இவர், தனது இளநிலை படிப்பை டெல்லி பல்கலைகழகத்தில் முடித்துவிட்டு அமெரிக்கா சென்றுள்ளார். கடந்த 8 வருடங்களாக டெஸ்லாவில் பணிபுரிந்தும் வருகிறார். கட்சியின் முக்கிய பொறுப்பில் வெளிநாட்டவர் நியமிப்பதா என எலான் மஸ்க் மீது விமர்சனங்களும் வந்துள்ளன.