India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
1998 கோவை குண்டுவெடிப்புச் சம்பவத்தால் தான் கொங்கு மண்டலத்தில் பாஜக மக்களிடையே செல்வாக்கு பெற்றது என்று சொல்லலாம். இன்று அச்சம்பவம் நடந்த பகுதியை பிரதமர் மோடி விசிட் செய்திருப்பது தேர்தலில் பாஜகவுக்கு கைகொடுக்கும் என அக்கட்சியினர் நினைக்கின்றனர். ஆனால், அதிமுக கூட்டணி இல்லாமல் தேர்தலைச் சந்திப்பது, வலுவான கட்சி கட்டமைப்பு இல்லாதது போன்றவை பாஜகவுக்கு முன் மிகப்பெரிய சவால்களாக உள்ளன.
டெல்லி மதுபானக் கொள்கை முறைகேடு வழக்கில் மேலும் சில முக்கிய நபர்கள் கைது செய்யப்படுவார்கள் என சிபிஐ தெரிவித்துள்ளது. இந்த வழக்கில் ஓராண்டுக்கு முன் கைதான ஆம் ஆத்மி மூத்த தலைவர் மணீஷ் சிசோடியாவுக்கு ஜாமின் வழங்க எதிர்ப்பு தெரிவித்த சிபிஐ, அவ்வாறு வழங்கினால் விசாரணை பாதிக்கும் எனக் கூறியுள்ளது. முன்னதாக இதே வழக்கில், தெலங்கானா முன்னாள் முதல்வர் கேசிஆரின் மகள் கவிதாவும் கைது செய்யப்பட்டுள்ளார்.
கோவை தொடர் குண்டுவெடிப்புச் சம்பவத்தில் உயிரிழந்த மக்களுக்கு பிரதமர் மோடி அஞ்சலி செலுத்தினார். 1998 பிப்.14ஆம் தேதி கோவையில் ஆர்.எஸ்.புரம் உள்ளிட்ட 11 இடங்களில் 12 கி.மீ சுற்றுவட்டத்தில் மொத்தம் 13 குண்டுகள் வெடித்தன. அல் உம்மா என்ற தீவிரவாத அமைப்பு நடத்திய இந்தத் தொடர் குண்டுவெடிப்பில் 35 ஆண்கள், 10 பெண்கள், ஒரு குழந்தை உட்பட மொத்தம் 46 பேர் உயிரிழந்தனர் என்பது நினைவுக்கூறத்தக்கது.
மதுரை விமான நிலையம் அருகே தேர்தல் பறக்கும் படையினர் நடத்திய வாகன சோதனையில் ₹18 கோடி மதிப்பிலான தங்கம் மற்றும் வைர நகைகள் பறிமுதல் செய்யப்பட்டன. தேர்தல் நடத்தை விதிகள் அமலில் உள்ளதால் பணம், நகைகள் கொண்டு செல்ல கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், உரிய ஆவணங்களின்றி காரில் எடுத்துவந்த 29.70 கிலோ தங்கம், வைர நகைகளை பறிமுதல் செய்த அதிகாரிகள், அவற்றை மதுரை சார்நிலை கருவூலத்தில் ஒப்படைத்தனர்.
பிசிசிஐ செயலர் ஜெய்ஷாவை இந்திய அணியின் அதிரடி ஆல்ரவுண்டராக விளங்கிய ஜாம்பவான் கீர்த்தி ஆசாத் கடுமையாக விமர்சித்துள்ளார். அவர் தனது எக்ஸ் பக்கத்தில், “முதலில் ஜெய் ஷா அணித்தேர்வாளர் கிடையாது. அஜித் அகார்க்கர் தான் தலைமை தேர்வாளர். அணித் தேர்வு நடைமுறைகளில் முட்டாள்கள் தங்களைத் தாங்களே ஈடுபடுத்திக் கொள்ளக் கூடாது. விராட் கோலி டி20 உலகக் கோப்பையில் ஆட வேண்டும்” என பதிவிட்டுள்ளார்.
தமிழிசை ராஜினாமா குறித்து சிபிஎம் மாநிலச் செயலாளர் முத்தரசன் விமர்சித்துள்ளார். இதுதொடர்பாக பேசிய அவர், ”ஆளுநர் பதவியை ராஜினாமா செய்துள்ள தமிழிசை, தமிழ்நாடு, புதுச்சேரி அல்லாத வேறு மாநிலங்களில் போட்டியிடுவது அவருக்கு நல்லது. இந்த இரண்டு மாநிலங்களில் போட்டியிட்டால் தேர்தலுக்கு முன்பே முடிவு தெரிந்துவிடும். தோல்வி அடைவதை தவிர்க்க வேறு மாநிலங்களை அவர் நாடுவது நல்லது”
என தெரிவித்துள்ளார்.
மக்களவைத் தேர்தல் செலவுக்காக தமிழக அரசிடம் ரூ. 750 கோடி கேட்கப்பட்டுள்ளதாக தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக பேசிய அவர், ” வேட்பாளர்களின் தேர்தல் செலவு தொகை ரூ.95 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது. அதைப்போல இட்லி ரூ. 17, புரோட்டா ரூ. 55 என மாவட்ட அளவில் உணவு பொருட்கள் செலவினத்திற்கான தொகை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இது மாவட்டத்திற்கு மாவட்டம் மாற வாய்ப்புள்ளது” என்றார்.
ஆதி திராவிடர்கள் நலனுக்காக வழங்கிய இலவச வீட்டு மனை பட்டாக்களை திரும்ப பெறுமாறு தமிழக அரசுக்கு உத்தரவிட முடியாது என ஐகோர்ட் தெரிவித்துள்ளது. 1998இல் 91 பேருக்கு வழங்கப்பட்ட இடங்களில் இதுவரை யாரும் வீடு கட்டாததால், மனைகளை திரும்பப் பெற்று அரசின் நலத்திட்டங்களுக்கு பயன்படுத்த வேண்டும் என நாராயணன் என்பவர் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம், அவரது மனுவை தள்ளுபடி செய்தது.
இந்தியாவின் பிரியாணி தலைநகரமாக ஐதராபாத் நகரம் உருவெடுத்துள்ளதாக, ஸ்விக்கி (Swiggy) நிறுவனத்தின் வருடாந்திர ஆய்வறிக்கையில் தெரிய வந்துள்ளது. கடந்தாண்டில் (2023) ஐதராபாத்தில் மட்டும் 1 கோடியே 30 லட்சம் பிரியாணிகள் ஆன்லைனில் ஆர்டர் செய்யப்பட்டுள்ளன. 1 கோடி பிரியாணி ஆர்டர்களுடன் பெங்களூரு 2ஆவது இடத்திலும், 50 லட்சம் பிரியாணி ஆர்டர்களுடன் சென்னை 3ஆவது இடத்திலும் இருப்பது தெரிய வந்துள்ளது.
கொங்கு மண்டலத்தை ஆளுங்கட்சியான திமுகவின் கோட்டையாக்க வேண்டுமென ஸ்டாலின் உறுதியாக இருக்கிறார். அதனால் தான் கோவை தொகுதியில் திமுகவே நேரடியாகக் களமிறங்க உள்ளதாகக் கூறப்படுகிறது. கொங்கு மண்ணில் எக்காரணம் கொண்டும் பாஜக வெற்றிபெறக் கூடாது என்பதற்காக தேர்தல் பணியை முடிக்கிவிட்டுள்ள திமுக தலைமை, அந்த மண்டலத்தின் தேர்தல் பொறுப்பாளராக உதயநிதியை நியமிக்க முடிவெடுத்திருப்பதாக கூறப்படுகிறது.
Sorry, no posts matched your criteria.