news

News March 21, 2024

சுவிஸ் ஓபனில் பி.வி.சிந்து, சென், ஸ்ரீகாந்த் அசத்தல்

image

சுவிஸ் ஓபன் சர்வதேச பேட்மிண்டன் தொடரில் இந்தியாவின் பி.வி.சிந்து, லக்‌ஷயா சென், கிடாம்பி ஸ்ரீகாந்த் ஆகியோர் 2ஆவது சுற்றுக்கு முன்னேறினர். பாசெல் நகரில் நடைபெற்ற முதல் சுற்றில் தாய்லாந்தின் சோய்கீவோங்கை எதிர்கொண்ட சிந்து, 21-12 21-13 , மலேசியாவின் லியோங் ஜுன் ஹாவை எதிர்கொண்ட லக்‌ஷயா சென், 21-19 15-21 21-11, சீன தைபேயின் வாங் சூவை எதிர்கொண்ட ஸ்ரீகாந்த், 21-17 21-18 ஆகிய செட்களில் வெற்றி பெற்றனர்.

News March 21, 2024

இளையராஜாவின் இசையை சிலாகித்த வெற்றிமாறன்

image

இயக்குநரையும் தனக்கு சமமாக நடத்தும் பெருந்தன்மை உடையவர் இளையராஜா என இயக்குநர் வெற்றிமாறன் தெரிவித்துள்ளார். இளையராஜாவின் பயோபிக் அறிமுக நிகழ்ச்சியில் பேசிய அவர், “நம் வாழ்வில் எவ்வளவோ மாற்றங்கள் ஏற்பட்டாலும், மாறாத ஒரு உணர்வை எப்போதும் இளையராஜாவின் இசை கொடுக்கும். அவருடன் பழகுவதும், வேலை செய்வதும் எளிமையாக இருக்கும். மனதில் பட்டதை மிக வெளிப்படையாக பேசுவார்” என்றார்.

News March 21, 2024

இரட்டை இலை சின்னத்தை முடக்க துரோகிகள் முயற்சி

image

திருச்சியில் அதிமுக வேட்பாளர்கள் அறிமுக கூட்டம் இபிஎஸ் தலைமையில் 24 ஆம் தேதி நடைபெற உள்ளதாக சி.வி. சண்முகம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக பேசிய அவர், “பல்வேறு மாநிலங்களில் ஆட்சியை கலைத்து கட்சியை உடைத்தவர்களால் அதிமுகவை ஒன்றும் செய்யமுடியவில்லை அதற்கு தொண்டர்கள் காரணம். இரட்டை இலை சின்னத்தில் பதவி வகித்த துரோகிகள் சிலர், இரட்டை இலை சின்னத்தை முடக்க பார்ப்பதாகவும் அவர் குற்றம் சாட்டினார்.

News March 21, 2024

பிறந்தநாள் வாழ்த்து போட்டோ அனுப்புங்க

image

இன்று (மார்ச் 21) பிறந்தநாள் காணும் அனைவருக்கும் வாழ்த்துகள்! பிறந்தநாளுக்கு வாழ்த்து சொல்ல விரும்புபவர்களின் போட்டோவை Email -way2tamilusers@way2news.com-க்கு அனுப்புங்க. Note: பிறந்தநாளுக்கு முந்தைய நாள் இரவு 10 மணிக்குள் வாழ்த்துகளை அனுப்பவும். பிறந்தநாள் கொண்டாடுபவர்களின் தெளிவான புகைப்படங்களை அனுப்பி, உங்கள் அன்புக்குரியவர்களை வாழ்த்துங்கள்.

News March 21, 2024

இன்றைய தலைப்புச் செய்திகள்

image

➤பொன்முடியை அமைச்சராக நியமிக்க ஆளுநர் மறுத்ததை எதிர்த்து தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கு இன்று விசாரணைக்கு வருகிறது ➤அதிமுகவின் இரண்டாம் கட்ட வேட்பாளர் பட்டியல் இன்று வெளியாகிறது ➤ மார்ச் 31ஆம் தேதி அனைத்து வங்கிகளும் செயல்படும். ➤அதிமுகவுடன் வருகிற சட்டப்பேரவை தேர்தலிலும் கூட்டணி தொடரும் என பிரேமலதா அறிவிப்பு ➤ ரஜினியின் வாழ்க்கை வரலாறு திரைப்படத்தில் நடிக்க நடிகர் தனுஷ் விருப்பம்

News March 21, 2024

ரவிச்சந்திரன் அஷ்வின் குறித்து ரோஹித் நெகிழ்ச்சி

image

ரவிச்சந்திரன் அஷ்வின் தான் இந்திய அணியின் நம்பிக்கை நட்சத்திரம் என கேப்டன் ரோஹித் ஷர்மா புகழாரம் சூட்டியுள்ளார். நேர்காணல் ஒன்றில் பேசிய அவர், “அஷ்வின் நிறைய பிரஷர்களை தாங்கி கொள்கிறார். ஒரு போட்டியில் அவர் சரியாக விக்கெட் எடுக்கவில்லை என்றால் உடனே அவர் சரியில்லை என்று சொல்வார்கள். அவரும் சக மனிதன் தானே. அவரால் முடிந்த அனைத்து உத்திகளையும் செயல்படுத்துகிறார்” எனத் தெரிவித்துள்ளார்.

News March 21, 2024

கவர்ச்சியாக நடிக்கவும் தயார்

image

ஒரே மாதிரியான கதாபாத்திரங்களில் நடித்தால் எனக்கும், ரசிகர்களுக்கும் போர் அடித்து விடும் என நடிகை அனுபமா கூறியுள்ளார். நேர்காணல் ஒன்றில் பேசிய அவர், “3 ஆண்டுகளாக நான் வித்தியாசமான கதாபாத்திரங்களில் நடித்து வருகிறேன். ஒரு நடிகைக்கு எல்லா கதாபாத்திரங்களிலும் நடித்து பாராட்டு பெற வேண்டும் என்ற ஆசை இருக்கும். கதாபாத்திரங்கள் பிடித்து இருந்தால் கவர்ச்சியாக நடிக்கவும் தயார்” எனத் தெரிவித்துள்ளார்.

News March 20, 2024

அவதூறுகளை வைத்து என்னை பின்னோக்கி தள்ள முடியாது

image

100 அவதூறுகளை வைத்தாலும் என்னை பின்னோக்கி தள்ள முடியாது என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் பேசிய அவர்,
அரசின் அனைத்து திட்டங்களும் அடித்தட்டு மக்கள் வரை சென்று சேர்ந்துள்ளது. நடுத்தர வகுப்பினரை மேம்படுத்த இந்த பத்து வருடத்தில் அதிகபட்ச முயற்சியை அரசு எடுத்துள்ளது. அந்த பணிகளை தொடர்ந்து செய்ய மக்கள் மீண்டும் எங்களை ஆதரிக்க வேண்டும் என கேட்டுக்கொண்டுள்ளார்.

News March 20, 2024

பொன்முடி வழக்கு நாளை விசாரணை

image

பொன்முடியை மீண்டும் அமைச்சராக பதவி பிரமாணம் செய்து வைக்க ஆளுநருக்கு உத்தரவிடக் கோரிய வழக்கு, உச்ச நீதிமன்றத்தில் நாளை விசாரணைக்கு வருகிறது. சொத்துக் குவிப்பு வழக்கில் பொன்முடிக்கு விதிக்கப்பட்ட 3 ஆண்டு சிறை தண்டனையை உச்ச நீதிமன்றம் நிறுத்தி வைத்தது. இதனால் மீண்டும் அவருக்கு அமைச்சர் பதவி வழங்க வேண்டும் என தமிழக அரசு பரிந்துரைத்ததை ஆளுநர் ரவி நிராகரித்ததால் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.

News March 20, 2024

அதிர்ஷ்ட மழை கொட்டப் போகும் ராசிகள்

image

மார்ச் 27ஆம் தேதி துலாம் ராசியில் சந்திர பகவான் சஞ்சரிக்க உள்ளார். ஏற்கெனவே, அங்கு புதன் பகவானும் உள்ளதால் கடகம், துலாம், மகரம், மீன ராசியினர் அதிர்ஷ்ட மழையில் நனையப் போகின்றனர். குறிப்பாக வீடு, வாகனம், ஆபரணங்கள் வாங்கும் யோகம், தொழில் முனைவோருக்கு தேடி வரும் வாய்ப்பு, மனதில் உள்ள சங்கடங்கள் நீங்கி மகிழ்ச்சியான வாழ்க்கை அமைவது என பல்வேறு சுப பலன்களை மேற்கண்ட ராசியினர் அனுபவிக்க உள்ளனர்.

error: Content is protected !!