News March 21, 2024
பிறந்தநாள் வாழ்த்து போட்டோ அனுப்புங்க

இன்று (மார்ச் 21) பிறந்தநாள் காணும் அனைவருக்கும் வாழ்த்துகள்! பிறந்தநாளுக்கு வாழ்த்து சொல்ல விரும்புபவர்களின் போட்டோவை Email -way2tamilusers@way2news.com-க்கு அனுப்புங்க. Note: பிறந்தநாளுக்கு முந்தைய நாள் இரவு 10 மணிக்குள் வாழ்த்துகளை அனுப்பவும். பிறந்தநாள் கொண்டாடுபவர்களின் தெளிவான புகைப்படங்களை அனுப்பி, உங்கள் அன்புக்குரியவர்களை வாழ்த்துங்கள்.
Similar News
News March 12, 2026
கேஸ் சிலிண்டர் பதுக்கல்.. TN-ல் முதல் முறையாக கைது!

கேஸ் சிலிண்டர்களை பதுக்கி வைத்திருந்த 4 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். சிலிண்டர் தட்டுப்பாட்டால் மத்திய அரசு <<19343866>>அத்தியாவசிய பொருள்கள் சட்டத்தை(ECA)<<>> அமல்படுத்தியது. அதன்படி, கேஸ் சிலிண்டர் பதுக்கி வைத்தால் 3 மாதம் முதல் 7 ஆண்டுகள் வரை சிறை தண்டனை விதிக்கப்படும். இந்நிலையில், TN-ல் முதல் முறையாக நெல்லையில் 4 பேர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், 17 சிலிண்டர்களை பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. ஜாக்கிரதை!
News March 12, 2026
இது இருந்திருந்தால் மாணவிக்கு வன்கொடுமை நடந்திருக்காதா?

வீட்டில் கழிப்பறை இல்லாததால் வெளியே சிறுநீர் கழிக்க சென்ற <<19356260>>மாணவி வன்கொடுமைக்கு<<>> ஆளாகியுள்ளார். தூய்மை இந்தியா இயக்கம் மூலம், கிராம & நகர்ப்புற வீடுகளில் கழிப்பறை கட்டித்தரும் திட்டம் 2014-லேயே வந்துவிட்டது. இந்நிலையில், 12 ஆண்டுகள் ஆகியும் இன்னமும் கிராமங்களில் சில வீடுகளில் கழிப்பறை இல்லையா எனவும், அது இருந்திருந்தால் மாணவிக்கு இக்கொடுமை நடந்திருக்காது என்றும் பலர் கூறுகின்றனர். உங்கள் கருத்து?
News March 12, 2026
பாலியல் குற்றவாளிகளை திமுக காக்கிறதா? EPS

தூத்துக்குடியில் மாணவி வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியளிப்பதாக EPS கூறியுள்ளார். சிறுமியை காணவில்லை என புகாரளித்தும் போலீஸ் மெத்தனப் போக்குடன் செயல்பட்டதாக கூறிய அவர், குற்றவாளிகளை உடனே கண்டறிந்தால் உறவினர்கள் போராட்டத்தை முடித்துவிடப் போகின்றனர் என்றார். மேலும், உறவினர்களுடன் திமுக MLA ஏன் சமாதானம் பேசவேண்டும் எனவும் குற்றவாளிகளை காக்க திமுக முயல்கிறதா என்றும் கேள்வி எழுப்பியுள்ளார்.


