India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
அதிமுகவின் சின்னம் மற்றும் கொடியை பயன்படுத்தக் கூடாது என்று வழங்கப்பட்ட தீர்ப்பினை எதிர்த்து ஓபிஎஸ் உயர்நீதிமன்ற அமர்வில் மேல் முறையீடு செய்திருக்கிறார். இந்த மனு மீதான விசாரணை மார்ச் 25ஆம் தேதியே நடைபெறும் என்று நீதிமன்றம் தெரிவித்துள்ளது. “அதிமுகவின் சின்னம் மற்றும் கொடி பறிக்கப்பட்டது ஈடு செய்ய முடியாத பேரிழப்பு” என்று ஓபிஎஸ் தனது மனுவில் குறிப்பிட்டிருக்கிறார்.
அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் சென்னை மத்திய தொகுதியில் இன்று தனது தேர்தல் பிரசாரத்தை தொடங்கவுள்ளார். இத்தொகுதியில் திமுக சார்பாக தயாநிதி மாறன் போட்டியிடுகிறார். காலை 8.30 மணியளவில் திறந்த வாகனம் மூலம் பிரசாரத்தை தொடங்கும் உதயநிதி ஸ்டாலின், சேப்பாக்கத்தின் ஐயா தெரு, பஜார் தெரு ஆகிய சந்திப்புகளில் பிரசாரம் செய்யவிருக்கிறார்.
பெங்களூரு குண்டுவெடிப்புக்கு பயன்படுத்தப்பட்ட வெடிகுண்டை தமிழ்நாட்டில் 2 ஐஎஸ் தீவிரவாதிகளும் வாங்கினார்களா என சிபிசிஐடி போலீசார் விசாரித்து வருகின்றனர். குண்டுவைத்த 2 தீவிரவாதிகளும், சென்னையில் தங்கியிருந்ததும், பிறகு பெங்களூரு வந்து குண்டுவைத்ததும் தெரிய வந்துள்ளது. இதைவைத்து, 2 பேரும் தமிழ்நாட்டில் வெடிகுண்டுகளை வாங்கினார்களா சிபிசிஐடி போலீசார் விசாரித்து வருகின்றனர்.
காஞ்சிபுரம் (தனி) தொகுதிக்கான வேட்பாளரை பாமக தனியாக அறிவித்துள்ளது. மொத்தம் போட்டியிடும் 10 தொகுதிகளில் 9ஐ நேற்று காலை பாமக தலைமை அறிவித்தது. பின்னர், மாலையில் தர்மபுரி வேட்பாளர் மாற்றம் செய்யப்பட்டார். அதனைத் தொடர்ந்து, இரவில் காஞ்சிபுரம் வேட்பாளராக வெ.ஜோதி வெங்கடேசன் அறிவிக்கப்பட்டுள்ளார். இதன்மூலம், பாமக வேட்பாளர்கள் அனைவரும் அறிவிக்கப்பட்டு உள்ளனர்.
மக்களவைத் தேர்தல் முடியும் வரை நடிகர் சிவராஜ் குமாரின் படங்களுக்கு தடை விதிக்குமாறு தேர்தல் ஆணையத்திடம் பாஜக கோரிக்கை விடுத்துள்ளது. கர்நாடகாவில் உள்ள 28 மக்களவைத் தொகுதிகளுக்கு ஏப்.26, மே 7 என 2 கட்டமாக தேர்தல் நடைபெறுகிறது. ஷிவமோகா தொகுதியில் சிவராஜ் குமாரின் மனைவி கீதா, காங்கிரஸ் சார்பில் போட்டியிடுகிறார். சமீபத்தில் அவருக்கு ஆதரவாக சிவராஜ் குமார் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டார்.
பெங்களூரு குண்டுவெடிப்பில் தொடர்புடைய 2 ஐஎஸ் தீவிரவாதிகளும், சென்னையில் தங்கியிருந்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. சிசிடிவி காட்சிகளில் தொப்பி அணிந்து நடமாடிய 2 தீவிரவாதிகளும், கர்நாடகத்தை சேர்ந்த ஷாகிப், தாஹா என்பது கண்டுபிடிக்கப்பட்டது. தொப்பியின் சீரியல் நம்பரை ஆய்வு செய்ததில், திருவல்லிகேணியில் அதை வாங்கியதும், ஜனவரி, பிப்ரவரி மாதங்கள் அவர்கள் அங்கு தங்கியிருந்ததும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
கொல்கத்தா- ஐதராபாத் இடையேயான ஐபிஎல் போட்டி, இன்று இரவு 7.30 மணிக்கு ஈடன் கார்தான் மைதானத்தில் நடைபெற உள்ளது. இரு அணிகளும் இதுவரை 25 போட்டிகளில் நேருக்கு நேர் சந்தித்ததில், கொல்கத்தா- 16, ஐதராபாத்- 9 போட்டிகளில் வெற்றி பெற்றுள்ளன. பேட் கம்மின்ஸ் தலைமையிலான ஐதராபாத் அணியில் ஹென்ரிக்ஸ், மார்க்ரம், ரஷீத் கான் டிராவிஸ் ஹெட் உள்ளிட்டோர் உள்ளதால், கொல்கத்தா அணிக்கு கடுமையான போட்டியாக இருக்கும்.
தமிழக அரசு மற்றும் அரசு உதவிப் பெறும் பள்ளிகளில் பன்னிரண்டாம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத் தேர்வுகள் நேற்றோடு (22.03.2024) நிறைவு பெற்றன. ஆகையால், இன்று முதலே அவர்களுக்கு கோடை விடுமுறை தொடங்குகிறது. பல பள்ளிகளில் மாணவர்களுக்கு ஜூனியர்களும் ஆசிரியர்களும் பிரியா விடை அளித்தனர். அடுத்த கட்டமாக 12ஆம் வகுப்பு மாணவர்கள் கல்லூரி படிப்புக்கு தயாராகவுள்ளனர்.
➤ தமிழக உயர்கல்வித்துறை அமைச்சராக பொன்முடி மீண்டும் பதவியேற்றார். ➤ குடும்பத் தலைவிக்கு மாதம் ரூ.3,000 – அதிமுக தேர்தல் அறிக்கை வெளியீடு ➤ காஸாவில் உடனடிப் போர் நிறுத்தத்தை அமல்படுத்தக் கோரி ஐ.நா பாதுகாப்பு கவுன்சிலில் அமெரிக்கா தீர்மானம் . ➤ பிரிட்டன் இளவரசி கேத் மிடில்டனுக்கு புற்றுநோய் பாதிப்பு ➤ நடப்பு ஐ.பி.எல் சீசனை வெற்றியுடன் தொடங்கியது சென்னை சூப்பர் கிங்ஸ் அணி.
தமிழகத்தில் தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்ததில் இருந்து நேற்று வரை நடத்தப்பட்ட பறக்கும் படை, நிலையான கண்காணிப்பு குழு சோதனைகளில் ரூ.11.95 கோடி பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. அதில், ரூ.10.28 கோடி ரொக்கம், ரூ.0.68 கோடி மது பாட்டில்கள், ரூ.0.35 கோடி மதிப்புள்ள போதைப்பொருட்கள், 0.22 கோடி மதிப்புள்ள தங்கம் உள்ளிட்ட விலை உயர்ந்த பொருட்கள், ரூ.0.41 கோடி இலவச பரிசுப்பொருட்கள் அடங்கும்.
Sorry, no posts matched your criteria.