India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
கோவையில் அதிமுகவுக்கும் திமுகவுக்கும் இடையேதான் போட்டி என்று அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி கூறியிருக்கிறார். அண்ணாமலை போட்டியிடுவது குறித்து எழுப்பப்பட்ட கேள்விக்கு, 4 சதவீத வாக்கு வங்கி வைத்திருக்கும் கட்சி எல்லாம் எங்களுக்கு போட்டியா என்று கேலி செய்தார். இரட்டை இலையின் ஆதரவு இருக்கும்போது களத்தில் பிற வேட்பாளர்கள் தூசுக்கு சமானம் என்றும் அவர் பேசினார்.
TMC கட்சியை சேர்ந்த மஹுவா மொய்த்ரா வீட்டில் சிபிஐ சோதனையில் ஈடுபட்டு வருகிறது. மக்களவையில் கேள்வியெழுப்ப லஞ்சம் பெற்றதாக மஹுவா மீது குற்றச்சாட்டு எழுந்ததை அடுத்து அவரின் எம்.பி பதவி பறிக்கப்பட்டது. இதுதொடர்பாக லோக்பால் அமைப்பு விசாரித்து வரும் நிலையில், இந்த குற்றச்சாட்டு தொடர்பாக அனைத்து அம்சங்களையும் விசாரிக்க சிபிஐக்கு கடந்த 15ஆம் தேதி உத்தரவிட்டது. அதன் அடிப்படையில் இந்த சோதனை நடைபெறுகிறது.
இந்தியப் பெருங்கடலில் 4வதாக மேலும் ஒரு உளவுக் கப்பலை சீனா களமிறக்கி உள்ளது. ஏற்கெனவே 3 கப்பல்கள் உளவுப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ள நிலையில், தற்போது யுவான் வாங் 3 அப்பணியில் ஈடுபட்டுள்ளது. ஓடிசாவில் இருந்து ஏப். 3-4ம் தேதிகளில் தொலைதூர ஏவுகணை சோதனையை இந்தியா நடத்தவுள்ளது. அது குறித்த தகவலை சேகரிக்க வந்திருக்கலாம் என சந்தேகிக்கும் இந்திய கடற்படை அக்கப்பலை கண்காணிக்கிறது.
சுற்றுச்சூழலை பாதுகாக்க அனைவரும் ஒன்றிய வேண்டும் என ஆளுநர் R.N.ரவி அழைப்பு விடுத்துள்ளார். நாடு முழுவதும் இன்று இரவு 8.30 மணி முதல் 9.30 மணி வரை ‘புவி நேரம்’ கடைப்பிடிக்கப்படுகிறது. அந்த நேரத்தில் தேவையற்ற விளக்குகள் எரியாமல் அணைத்து வைக்க வேண்டும் என தமிழக மக்களுக்கு கோரிக்கை விடுத்துள்ள அவர், இயற்கையை பாதுகாக்க அனைவரும் இணைந்து செயல்படுவோம் என வேண்டுகோள் விடுத்துள்ளார்.
ஐபிஎல் போட்டிகளுக்கு இலவச பேருந்து டிக்கெட்டுகளை அரசு வழங்கவில்லை என தமிழக அரசு விளக்கமளித்துள்ளது. CSK-RCB இடையேயான ஐபிஎல் போட்டியில் பங்கேற்றவர்கள், ஐபிஎல் டிக்கெட்டுகளை காண்பித்து பேருந்துகளில் இலவசமாக பயணிக்கலாம் என கூறப்பட்டிருந்தது. இதுகுறித்து பல சர்ச்சைகள் கிளம்பிய நிலையில், அரசு செலவில் இலவச பேருந்து சேவை வழங்கப்படவில்லை. பயணச் செலவை CSK நிர்வாகம் செலுத்திவிட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அரபிக் கடல், செங்கடல், ஏடன் வளைகுடா பிராந்தியத்தில் 10 போர் கப்பல்களை நிலைநிறுத்தி இருப்பதாக கடற்படைத் தளபதி ஹரிகுமார் தெரிவித்துள்ளார். அவர் கூறுகையில், “ஆபரேசன் சங்கல்ப் கீழ், கடற்கொள்ளையர், ஏவுகணை, டிரோன் எதிர்ப்பு நடவடிக்கைக்காக 10 போர்க் கப்பல்களை நிலைநிறுத்தியுள்ளோம். வணிகக் கப்பல்கள் பாதுகாப்பாக கரையை அடைவதற்கான பாதுகாப்பு, நிலைத்தன்மையை உறுதி செய்வதே பணி” என்றார்.
‘அட்டகத்தி’ படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானவர் பா.ரஞ்சித். இப்படத்தில் நாயகனாக தினேஷ் நடித்திருந்தார். இதன்பின் ரஞ்சித் இயக்கத்தில் ரஜினி நடித்திருந்த ‘கபாலி’ படத்திலும் தினேஷ் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இந்நிலையில், ரஞ்சித் அடுத்ததாக இயக்கவுள்ள படத்தில் தினேஷ் நாயகனாக நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இது அட்டகத்தி இரண்டாம் பாகமாக இருக்கலாம் என்றும் தகவல் வெளியாகியுள்ளது.
ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு அரசியல் ஆசை இருந்தால், தேர்தலில் போட்டியிடலாம் என திருமாவளவன் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக பேசிய அவர், “ஆளுநர் பதவியில் இருப்பவர்கள் அரசியல்வாதி போல் செயல்படக் கூடாது. அப்படி ஆளுநருக்கு அரசியல் ஆசை இருந்தால் தமிழிசை போல் பதவியை தூக்கி எறிந்துவிட்டு தேர்தலில் போட்டியிட வேண்டும். ஆளுநர் பதவியை தனது சுயநலத்துக்காக பயன்படுத்துவதை அவர் முற்றிலும் நிறுத்த வேண்டும்” என்றார்.
ஐபிஎல்லில் இன்று நடைபெறும் இரண்டாவது போட்டியில் பஞ்சாப், டெல்லி அணிகள் மோதுகின்றன. இதில் டாஸ் வென்ற பஞ்சாப் கேப்டன் தவான் பந்து வீச்சை தேர்வு செய்துள்ளார். இதையடுத்து இன்னும் சற்று நேரத்தில் டெல்லி அணி பேட்டிங்கை தொடங்க உள்ளது. காயத்திலிருந்து மீண்டு வந்த ரிஷப் பந்த் இன்றைய போட்டியில் களமிறங்குவதால் டெல்லி ரசிகர்கள் ஆவலுடன் உள்ளனர். இந்த போட்டியில் எந்த அணி வெற்றிபெறும்?
தேமுதிக தஞ்சை மாநகர் மாவட்ட செயலாளர் இராமநாதனை, அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்து பொறுப்புகளில் இருந்தும் நீக்குவதாக, அந்தக் கட்சியின் பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் அறிவித்துள்ளார். தேமுதிகவின் கட்டுப்பாடுகளை மீறி செயல்பட்டதால் அவர் நீக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதைத் தொடர்ந்து தஞ்சை மாநகரின் புதிய செயலாளராக செங்குட்டுவன் நியமிக்கப்பட்டுள்ளார்.
Sorry, no posts matched your criteria.