news

News March 25, 2024

பாண்டியாவுடன் ரோஹித் வாக்குவாதம்?

image

மும்பை இந்தியன்ஸ் அணி கேப்டன் பாண்டியாவுடன் முன்னாள் கேப்டன் ரோஹித் ஷர்மா வாக்குவாதத்தில் ஈடுபட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. குஜராத் அணிக்கு எதிரான போட்டியில் மும்பை அணி போராடி தோல்வியடைந்தது. போட்டிக்கு பிறகு பின்னாலிருந்து வந்து கட்டி அணைத்த பாண்டியாவை சட்டென தள்ளிய ரோஹித், அவருடன் வாக்குவாதம் செய்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

News March 25, 2024

தமிழ்நாட்டில் வங்கிகள் இன்று செயல்படும்

image

தமிழ்நாட்டில் பொதுத்துறை, தனியார் வங்கிகளுக்கு இன்று விடுமுறை இல்லை. ஹோலி பண்டிகையான இன்று பல மாநிலங்களில் வங்கிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. அதே நேரத்தில் தமிழ்நாடு, திரிபுரா, மிசோரம், சிக்கிம், அசாம், மணிப்பூர், மே.வங்கம் உள்ளிட்ட மாநிலங்களில் இன்று வங்கிகள் திறந்திருக்கும் என்றும், வழக்கம் போல பணிகள் நடைபெறும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

News March 25, 2024

BREAKING: ஷிண்டே ஆட்சி கவிழ்கிறது?

image

மகாராஷ்டிரா முதல்வர் ஏக்நாத் ஷிண்டேவுக்கு புதிய நெருக்கடி ஏற்பட்டுள்ளது. சிவசேனாவை இரண்டாக உடைத்து ஷிண்டே பாஜக உதவியுடன் ஆட்சியமைத்தார். தற்போது மராட்டிய நவநிர்மாண் சேனா அமைப்பையும், ஷிண்டே பிரிவு சிவசேனாவையும் ஒன்றாக்கி, ராஜ் தாக்கரே தலைமையில் புதிய அமைப்பை உருவாக்க பாஜக திட்டமிட்டுள்ளது. இதனால், ஷிண்டே ஆட்சி கவிழும் சூழல் உருவாகியுள்ளதால், மகாராஷ்டிரா அரசியலில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

News March 25, 2024

மீண்டும் ஆடுகளம் திரும்பும் முகமது அமீர்?

image

ஓய்வு முடிவை கைவிட்டு மீண்டும் கிரிக்கெட் விளையாட ஆர்வமாக உள்ளதாக பாகிஸ்தான் வீரர் முகமது அமீர் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக பேசிய அவர், “காலம் சில முடிவுகளை மறுபரிசீலனை செய்ய வைக்கும். தற்போதைய சூழ்நிலையில் மேலும் சில காலம் பாக். அணிக்காக விளையாட விரும்புகிறேன். வரும் டி20 உலகக் கோப்பையில் வாய்ப்பளித்தால் களமிறங்குவேன்”என்றார். இவர் 2020இல் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார்.

News March 25, 2024

ராகுலை எதிர்க்கும் பாஜக வேட்பாளர் யார் தெரியுமா?

image

மக்களவைத் தேர்தலில் வயநாட்டில் ராகுலை எதிர்த்து கேரள பாஜக தலைவர் சுரேந்திரன் களமிறக்கப்பட்டுள்ளார். இவர் கடந்த 2019ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தலில் பத்தினம்திட்டா தொகுதியில் போட்டியிட்டு 3வது இடம் பிடித்து தோல்வி அடைந்தவர். மீண்டும் 2021 சட்டப்பேரவைத் தேர்தலில் 2 தொகுதிகளில் போட்டியிட்டு தோல்வியை சந்தித்தார். இந்நிலையில் தற்போது வயநாடு தொகுதியில் பாஜக மீண்டும் அவரை களமிறக்கியுள்ளது.

News March 25, 2024

படப்பிடிப்பில் மயங்கி விழுந்த சமந்தா

image

சிட்டாடல் வெப் தொடர் படப்பிடிப்பில் மயங்கி விழுந்து விட்டதாக சமந்தா தெரிவித்துள்ளார். குஷி திரைப்படத்தை தொடர்ந்து, நீண்ட இடைவேளைக்கு பிறகு சிட்டாடல் வெப் தொடரில் சமந்தா நடித்து வருகிறார். இதுகுறித்து அவர் கூறுகையில், “தசை அழற்சி காரணமாக படப்பிடிப்பு கடினமானதாக இருந்தது. சண்டை காட்சிகளில் கஷ்டப்பட்டே நடித்தேன். ஒரு கட்டத்தில் மயங்கி விழுந்து விட்டேன்” எனக் கூறியுள்ளார்.

News March 25, 2024

ராமர் வேடத்தில் நடித்தவருக்கு எம்.பி சீட்

image

பாஜக 2024 மக்களவைத் தேர்தலுக்கான 111 வேட்பாளர்களின் 5வது பட்டியலை நேற்று வெளியிட்டது. இதில், பிரபல தொலைக்காட்சி தொடரான ராமாயணத்தில் ராமர் கதாபாத்திரத்தில் நடித்த அருண் கோவிலுக்கு சீட் வழங்கப்பட்டுள்ளது. உத்தர பிரதேசம் மீரட் தொகுதியில் அவர் முதல்முறையாக தேர்தலில் போட்டியிட உள்ளார். அயோத்தியில் தற்போது ராமர் கோயில் திறக்கப்பட்டுள்ள நிலையில், ராமர் வேடத்தில் நடித்தவருக்கு சீட் வழங்கப்பட்டுள்ளது.

News March 25, 2024

பாஜக சர்ச்சை எம்.பிக்கு சீட் மறுப்பு

image

பாஜக எம்பி அனந்தகுமார் ஹெக்டே தேர்தலில் போட்டியிட பாஜக சீட் மறுத்துள்ளது. கர்நாடக மாநிலம், உத்தர கன்னடா தொகுதியில் 5 முறை எம்பியாக இருந்தவர் அனந்தகுமார் ஹெக்டே. பாஜக மீண்டும் ஆட்சிக்கு வந்ததும் இந்திய அரசியல் அமைப்பு மாற்றப்படும் என்பது உள்ளிட்ட பல சர்ச்சை கருத்துக்களை அவர் தொடர்ந்து பேசி வந்தார். இதனால் அவருக்கு சீட் மறுத்துள்ள பாஜக, அங்கு விஷ்வேஸ்வரா ஹெக்டேவுக்கு சீட் வழங்கியுள்ளது.

News March 25, 2024

மக்கள் கவனத்தை திசை திருப்பவே கெஜ்ரிவால் கைது

image

தேர்தல் பத்திர விவகாரத்தை திசை திருப்ப அரவிந்த் கெஜ்ரிவால் கைது செய்யப்பட்டிருப்பதாக கேரள முதல்வரும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மூத்த தலைவருமான பினராயி விஜயன் குற்றம்சாட்டியுள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில், “இந்தியா பார்த்த ஊழல்களில், தேர்தல் பத்திர ஊழல்தான் மிகப்பெரியது. இதிலிருந்து மக்களின் கவனத்தை திசை திருப்ப மத்திய பாஜக அரசு கெஜ்ரிவாலை கைது செய்துள்ளது” எனக் கூறியுள்ளார்.

News March 25, 2024

தேர்தலில் ஓட்டு போட மாட்டோம்.. அறிவிப்பு

image

பரந்தூர் புதிய விமான நிலைய திட்டத்தை கைவிடக் கோரி ஏகனாபுரம் உள்ளிட்ட 13 கிராம மக்கள் பலவகையான போராட்டங்களை முன்னெடுத்து வருகின்றனர். இந்நிலையில், அடிப்படை ஐனநாயக உரிமைகளை பறிக்கும் வகையில் சர்வாதிகாரமாக செயல்படும் மத்திய, மாநில அரசுகளைக் கண்டித்தும், பரந்தூர் புதிய விமான நிலைய திட்டத்தை கைவிடக் கோரியும், வரும் மக்களவைத் தேர்தலில் வாக்களிக்காமல், தேர்தலை முழுமையாக புறக்கணிப்பதாக அறிவித்துள்ளனர்.

error: Content is protected !!