news

News March 25, 2024

கோவையில் அண்ணாமலை போட்டியிடுவது ஏன்?

image

தமிழகத்தில் தனது தலைமையில் பாஜக வளர்ந்திருக்கிறது என்றால் அண்ணாமலை சொந்த தொகுதியில் போட்டியிடாமல் கோவையில் போட்டியிடுவது ஏன் என கரூர் தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் ஜோதிமணி கேள்வி எழுப்பியுள்ளார். சென்னை சத்தியமூர்த்தி பவனில் பேசிய அவர், “கரூரில் போட்டியிட்டால், டெபாசிட் கிடைக்காதென அவருக்கு நன்றாகவே தெரியும். அதனால் தான் என்னை எதிர்த்து நிற்க பயந்து கோயம்புத்தூருக்கு ஓடி விட்டார்” என்றார்.

News March 25, 2024

இந்தியன் 2, இந்தியன் 3 படங்கள் குறித்து கமல் புதிய அப்டேட்

image

இந்தியன் 2, இந்தியன் 3 படங்கள் குறித்து புதுத் தகவலை கமல்ஹாசன் பகிர்ந்துள்ளார். அவர் கூறுகையில், “இந்தியன் 2, இந்தியன் 3 படப்பிடிப்புகள் முடிந்துவிட்டது. தற்போது, இந்தியன் 2 பட போஸ்ட் புரொடக்சன் பணிகள் நடக்கிறது. அது முடிந்த பிறகு, இந்தியன் 3 பட போஸ்ட் புரொடக்சன் பணிகள் தொடங்கும். மக்களவைத் தேர்தல் முடிந்ததும், மணிரத்னத்தின் ‘தக் லைஃப்’ படப்பிடிப்பில் பங்கேற்பேன்” என்றார்.

News March 25, 2024

கட்டண உயர்வை திரும்பப் பெறுக

image

தமிழ்நாடு மாநிலத் தகுதித் தேர்வுக்கான விண்ணப்பக் கட்டணத்தை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலை., உயர்த்தியதை அன்புமணி கண்டித்துள்ளார். பொதுப்பிரிவு கட்டணம் – ₹2,500, MBC – ₹2,000, SC, ST – ₹800ஆக உயர்த்தியதை திரும்பப் பெற வலியுறுத்திய அவர், இதன் மூலம் தேர்வு எழுதுவார்கள் என எதிர்பார்க்கப்படும் ஒன்றரை லட்சம் பேரிடம் இருந்து ₹30 கோடி வசூலாகும். இந்தத் தேர்வு நடத்த அவ்வளவு செலவாகாது எனக் கூறியுள்ளார்.

News March 25, 2024

தமிழகத்தில் புதிதாக 20 சுங்கச்சாவடிகள்

image

தமிழகம் முழுவதும் அடுத்த 2 ஆண்டுகளில் தேசிய நெடுஞ்சாலைகளில் மேலும் 20 புதிய சுங்கச்சாவடிகளை அமைக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. பெங்களூரு-சென்னை விரைவு சாலை, விக்கிரவாண்டி- தஞ்சை தேசிய நெடுஞ்சாலையில் சுங்கச்சாவடி அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதிமுக, திமுக மக்களவைத் தேர்தல் அறிக்கையில் சுங்கச்சாவடிகள் அகற்றப்படும் என்ற வாக்குறுதி இடம்பெற்றிருப்பது குறிப்பிடத்தக்கது.

News March 25, 2024

அதிக விலை மதிப்பு கொண்ட ஐபிஎல் அணிகள்

image

▶மும்பை இந்தியன்ஸ் – ₹725 கோடி
▶சென்னை சூப்பர் கிங்ஸ் – ₹675 கோடி
▶கொல்கத்தா நைட் ரைடர்ஸ் – ₹659 கோடி
▶பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் – ₹584 கோடி
▶குஜராத் டைட்டன்ஸ் – ₹542 கோடி
▶டெல்லி கேப்பிட்டல்ஸ் – ₹533 கோடி
▶ராஜஸ்தான் ராயல்ஸ் – ₹525 கோடி
▶சன்ரைசர்ஸ் ஐதராபாத் – ₹400 கோடி
▶லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் – ₹392 கோடி
▶பஞ்சாப் கிங்ஸ் – ₹375 கோடி

News March 25, 2024

தமிழகத்துக்கு கூடுதலாக 165 கம்பெனி துணை ராணுவ படை

image

தமிழகத்தில் தேர்தல் பாதுகாப்பு பணிக்காக கூடுதலாக 165 கம்பெனி துணை ராணுவப் படை வரவுள்ளதாக தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் அளித்த பேட்டியில், ” தமிழகத்துக்கு கூடுதலாக வரும் 165 கம்பெனி துணை ராணுவப் படைகளோடு சேர்த்து, 190 கம்பெனி படைகள் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளன. இதுவரை, சி விஜில் செயலி மூலம் 11,305 புகார்கள் வந்துள்ளன” எனக் கூறியுள்ளார்.

News March 25, 2024

வங்கிகளுக்கு தொடர் விடுமுறை

image

நாடு முழுவதும் அனைத்து வங்கிகளும் தொடர்ச்சியாக 4 நாள்கள் மூடப்படுகிறது. புனித வெள்ளியையொட்டி (மார்ச் 29) விடுமுறை, சனிக்கிழமை (மார்ச் 30), ஞாயிற்றுக்கிழமை (மார்ச் 31) வங்கிகள் செயல்பட்டாலும், பரிவர்த்தனைகள் நடக்காது. திங்கட்கிழமை (ஏப்.1) வங்கிகள் செயல்பட்டாலும் இறுதி ஆண்டு கணக்குகள் முடிப்பதற்காக மக்களுக்கு சேவை கிடையாது. இதற்கேற்ப உங்கள் நிதி தேவையை திட்டமிட்டுக் கொள்ளுங்கள்.

News March 25, 2024

தண்ணீரை வீணாக்கிய 22 குடும்பங்களுக்கு அபராதம்

image

பெங்களூருவில் குடிநீரை வீணாக்கிய 22 குடும்பங்களுக்கு தலா ரூ. 5,000 அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. கடும் குடிநீர் தட்டுப்பாடு நிலவுவதால், அத்தியாவசியமில்லாத பணிகளுக்கு காவிரி நீரை பயன்படுத்தக் கூடாதென எச்சரிக்கை விடுக்கப்பட்டிருந்தது. இதை மீறி, காரை சுத்தம் செய்யவும், தோட்டத்திற்கும் குடிநீரை பயன்படுத்தியதாக வந்த புகாரை அடுத்து, ரூ.1.1 லட்சத்தை அபராதமாக குடிநீர் விநியோக வாரியம் வசூலித்துள்ளது.

News March 25, 2024

நடிகை டாப்ஸிக்கு ரகசிய திருமணம்?

image

‘ஆடுகளம்’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமான நடிகை டாப்ஸி தனது காதலரான மத்தியாஸ் போவை ரகசிய திருமணம் செய்து கொண்டதாக தகவல் வெளியாகியுள்ளது. இவர்களது திருமணம் மார்ச் 23ல் உதய்பூரில் நெருங்கிய நண்பர்கள் முன்னிலையில் நடந்ததாக கூறப்படுகிறது. இதில், பாலிவுட் பிரபலங்கள் பலரும் கலந்து கொண்டதாக தெரிகிறது. 10 ஆண்டுகளாக பேட்மிண்டன் வீரரான மத்தியாஸுடன் காதலில் உள்ளதாக டாப்ஸி ஏற்கெனவே கூறியிருந்தார்.

News March 25, 2024

தருமபுரியில் பாமக வெற்றி பெறாது

image

பாமக தலைவர் அன்புமணி ராமதாஸின் குடும்பமே வந்தாலும் தருமபுரியில் பாமக வெற்றி பெறாது என அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் சூளுரைத்துள்ளார். வன்னியர்களுக்கு 10.5% உள் ஒதுக்கீட்டை வைத்து அதிமுக, பாமக கட்சிகள் வெற்றி பெற்றதாக கூறிய அவர், வரும் மக்களவைத் தேர்தலில் அது நடக்காது என்று தெரிவித்தார். 10.5% உள் ஒதுக்கீட்டை வைத்து வன்னிய மக்களை அதிமுக, பாமக கட்சிகள் ஏமாற்றியதாகவும் அவர் சாடினார்.

error: Content is protected !!