News March 25, 2024
நடிகை டாப்ஸிக்கு ரகசிய திருமணம்?

‘ஆடுகளம்’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமான நடிகை டாப்ஸி தனது காதலரான மத்தியாஸ் போவை ரகசிய திருமணம் செய்து கொண்டதாக தகவல் வெளியாகியுள்ளது. இவர்களது திருமணம் மார்ச் 23ல் உதய்பூரில் நெருங்கிய நண்பர்கள் முன்னிலையில் நடந்ததாக கூறப்படுகிறது. இதில், பாலிவுட் பிரபலங்கள் பலரும் கலந்து கொண்டதாக தெரிகிறது. 10 ஆண்டுகளாக பேட்மிண்டன் வீரரான மத்தியாஸுடன் காதலில் உள்ளதாக டாப்ஸி ஏற்கெனவே கூறியிருந்தார்.
Similar News
News November 15, 2025
தேவநாதன் அதிரடியாக கைது

பணமோசடி வழக்கில் தேவநாதன் யாதவ் மீண்டும் கைது செய்யப்பட்டுள்ளார். முதலீட்டாளர்களிடம் ₹500 கோடிக்கு மேல் மோசடி செய்த வழக்கில் ₹100 கோடி நிபந்தனை தொகை செலுத்த வேண்டும் என்று உத்தரவிட்டு சென்னை கோர்ட் ஜாமீன் வழங்கியது. ஆனால், அந்த நிபந்தனையை நிறைவேற்ற தவறியதால் அவரை கைது செய்ய 2 நாள்களுக்கு முன் உத்தரவிடப்பட்டது. இந்நிலையில், மீண்டும் சென்னை கோர்ட்டில் ஆஜரான நிலையில், அவரை போலீசார் கைது செய்தனர்.
News November 15, 2025
ரயில் விபத்துக்களை தடுக்க நவீன தொழில்நுட்பம்

2035-க்குள் அனைத்து ரயில்வே வழித்தடங்களிலும் ‘கவச்’ தொழில்நுட்பத்தை செயல்படுத்த இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதுவரை 5,900 கிமீ வரை ‘கவச்’ பணிகள் முடியும் தருவாயில் உள்ளது. ரயில் எஞ்சின், தண்டவாளம், சிக்னலை இணைத்து இத்தொழில்நுட்பம் உருவாக்கப்படுகிறது. ஒரே தடத்தில் 2 ரயில்கள் வந்தால், தானாகவே பிரேக் பிடித்து ரயிலின் வேகத்தை குறைக்கும். அதேபோல், நிர்ணயித்த வேகத்தை விட அதிகமாக இயங்க அனுமதிக்காது.
News November 15, 2025
21 நாள்கள் இத சாப்பிடுங்க.. அப்புறம் பாருங்க!

வாழைப்பழங்களிலேயே செவ்வாழைப்பழத்தில் தான் அவ்வளவு நன்மைகள் கொட்டிக்கிடக்கிறது. இதனை 21 நாள்களுக்கு தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் பல நன்மைகள் உண்டாகுமாம். கண் பார்வை மேம்படும், ஆண்மை குறைவு பிரச்னைகள் சரியாகும், பெண்களுக்கு மாதவிடாய் சுழற்சி சீராகும், நாள் முழுவதும் சுறுசுறுப்பாக இருக்கலாம் என டாக்டர்கள் சொல்கின்றனர். தினமும் காலை உணவோடு செவ்வாழையை சாப்பிடுங்கள். அனைவருக்கும் SHARE THIS.


