news

News March 21, 2024

ஆளுநரை வெளியேற்றும் காலம் தொலைவில் இல்லை

image

பாஜகவின் ஏஜெண்டாக செயல்படும் ஆளுநர் ரவி உடனே பதவி விலக வேண்டும் என தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை வலியுறுத்தியுள்ளார். “ஆளுநராக நியமிக்கப்பட்டதில் இருந்து அரசியலமைப்புக்கு எதிராக செயல்பட்டு வருகிறார். திமுக மீது உள்ள வன்மத்தால், அவர் பொன்முடிக்கு பதவிப்பிரமாணம் செய்துவைக்கவில்லை. ஆளுநரை வெளியேற்றும் காலம் வெகுதொலைவில் இல்லை என்பதை நீதிமன்றத் தீர்ப்பு உணர்த்துகிறது’ என கூறியுள்ளார்.

News March 21, 2024

உச்ச நீதிமன்றத்தை நாடிய கெஜ்ரிவால்

image

டெல்லி மதுபானக் கொள்கை முறைகேடு வழக்கு தொடர்பாக அரவிந்த் கெஜ்ரிவால் தரப்பு உச்ச நீதிமன்றத்தை நாடியுள்ளது. முன்னதாக, இந்த வழக்கில் இடைக்கால நிவாரணம் கோரிய கெஜ்ரிவாலின் கோரிக்கையை டெல்லி ஐகோர்ட் நிராகரித்தது. அதைத் தொடர்ந்து ED அதிகாரிகள் அவரது இல்லத்திற்கு விசாரணை நடத்தச் சென்றுள்ள நிலையில், கெஜ்ரிவால் தரப்பு வழக்கறிஞர்கள் உச்ச நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளனர்.

News March 21, 2024

3 தொகுதிகளில் திமுக, அதிமுக, பாஜக நேரடி போட்டி

image

9 தொகுதிகளுக்கான முதற்கட்ட வேட்பாளர் பட்டியலை பாஜக வெளியிட்டுள்ளது. இதில் 3 தொகுதிகளில் திமுக, அதிமுக, பாஜக நேரடியாக மோதவுள்ளது. கோவையில் கணபதி ராஜ்குமார் (திமுக), சிங்கை ஜி ராமச்சந்திரன் (அதிமுக), அண்ணாமலை (பாஜக). தென் சென்னையில் தமிழச்சி தங்கபாண்டியன் (திமுக), ஜெயவர்தன் (அதிமுக), தமிழிசை (பாஜக), நீலகிரியில் ஆ.ராசா (திமுக), லோகேஷ் தமிழ்ச்செல்வன் (அதிமுக), எல்.முருகன் (பாஜக)

News March 21, 2024

9 முறை சம்மன் அனுப்பியும் ஆஜராகவில்லை

image

மதுபான கொள்கை முறைகேடு வழக்கில் டெல்லி முன்னாள் துணை முதல்வர் மணீஷ் சிசோடியா மற்றும் எம்பி சஞ்சய் சிங் ஆகியோர் ஏற்கனவே சிறையில் உள்ளனர். இந்த வழக்கில் டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலிடம் கடந்த ஆண்டு சிபிஐ விசாரணை நடத்தியது. இது தொடர்பாக தொடர்ந்து 9 முறை சம்மன் அனுப்பியும் கெஜ்ரிவால் விசாரணைக்கு ஆஜராகவில்லை. கைது செய்ய விலக்கு கோரி அவர் தாக்கல் செய்த மனுவை உயர்நீதிமன்றம் இன்று தள்ளுபடி செய்தது.

News March 21, 2024

தொகுதியை தவறாக அறிவித்த பாஜக

image

மக்களவைத் தேர்தலில் தமிழகத்தில் 9 தொகுதிகளில் போட்டியிடும் வேட்பாளர்கள் பட்டியலை பாஜக வெளியிட்டது. அதில், தூத்துக்குடி தொகுதியில் நயினார் போட்டியிடுவார் என அறிவிக்கப்பட்டது. ஆனால், அந்தத் தொகுதியை ஏற்கெனவே தமாகாவுக்கு பாஜக வழங்கியிருந்த நிலையில், குளறுபடி ஏற்பட்டது. இதையடுத்து மறு அறிவிப்பை வெளியிட்ட பாஜக, நயினார் நாகேந்திரன் நெல்லை தொகுதியில் போட்டியிடுவதாக அறிவித்துள்ளது.

News March 21, 2024

PIC OF THE DAY

image

அம்பேத்கர் தெருவிளக்கு வெளிச்சத்தில் படித்தார் என்பது நமக்கு தெரிந்தது தான். இன்று, அதேபோல் சிறுவன் ஒருவன் தெருவிளக்கு வெளிச்சத்தில் படிக்கும் புகைப்படம் வைரலாகி வருகிறது. இந்த புகைப்படத்தை பகிர்ந்துள்ள தொழிலதிபர் ஹர்ஷ் கோயங்கா, ‘கல்வி இல்லாத குழந்தைகள், சிறகு இல்லாத பறவைகள் போல’ என குறிப்பிட்டுள்ளார். அரசு கல்விக்கு முன்னுரிமை கொடுக்க வேண்டும் என நெட்டிசன்கள் கோரிக்கை வைத்து வருகின்றனர்.

News March 21, 2024

கேப்டன் பொறுப்பில் இருந்து தோனி மாற்றப்பட்டது ஏன்?

image

CSK அணியின் எதிர்காலத்தை கருதி இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது என அணியின் பயிற்சியாளர் பிளமிங் விளக்கமளித்துள்ளார். “புதிய கேப்டனை நியமிக்க இதுவே சரியான நேரம் என தோனி கருதியதால் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. 2022இல் ஜடேஜாவை கேப்டனாக்கியதில் இருந்து நிறைய கற்றுக் கொண்டோம். ருதுராஜை கேப்டனாக்கும் முடிவுக்கு ஜடேஜாவும் ஆதரவு தெரிவித்தார். தோனி முழு சீசனிலும் விளையாடுவார்” எனத் தெரிவித்துள்ளார்.

News March 21, 2024

இதுதான் எனக்கு கடைசி தேர்தல்

image

2024 நாடாளுமன்றத் தேர்தல் தான், நான் கடைசியாக போட்டியிடும் தேர்தல் என புதிய நீதி கட்சி தலைவர் ஏ.சி.சண்முகம் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக பேசிய அவர், “2019ஆம் ஆண்டு தேர்தலில் வெறும் 8 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தேன். வீட்டில் தூங்கியவர்களை கூட்டி வந்து பூத்துக்கு இரண்டு வாக்கு போட்டிருந்தால் கூட வெற்றி பெற்றிருப்பேன். ஆனால் அது நடக்காமல் போனது வருத்தமாக இருந்தது” என்றார்.

News March 21, 2024

ஏப்ரல் 1 முதல் புதிய விதிகள்

image

புதிய நிதியாண்டில், கிரெடிட் கார்டு சேவையில் பல மாற்றங்கள் வரவுள்ளன. * SBI கார்டு மூலம் வாடகை செலுத்துவதற்கான ரிவார்டு பாயிண்ட்கள் நிறுத்தப்படுகிறது. *ICICI கார்டில் லவுஞ்ச் அணுகலைப் பெற, 3 மாதங்களில் ரூ.35,000, யெஸ் வங்கி கார்டில் ரூ.10,000 உபயோகித்திருக்க வேண்டும். *AXIS வங்கி ரிவார்டு பாயிண்ட்களை நிறுத்துகிறது. மேலும், லவுஞ்ச் அணுகலுக்கு 3 மாதங்களில் ரூ.50,000 உபயோகித்திருக்க வேண்டும்.

News March 21, 2024

இதுவரை போட்டியிட்ட அனைத்திலும் தோல்வி

image

கடந்த 2021 சட்டமன்றத் தேர்தலில் அரவக்குறிச்சி தொகுதியில் போட்டியிட்ட அண்ணாமலை தோல்வியை தழுவினார். எல்.முருகன் 2011 சட்டமன்றத் தேர்தலில் ராசிபுரம், 2012இல் சங்கரன்கோவில் இடைத்தேர்தல், 2021இல் தாராபுரம் தொகுதியில் போட்டியிட்டு தோல்வியடைந்தார். தமிழிசை சட்டமன்றத் தேர்தலில் 2006, 2011, 2016 மூன்று முறையும், மக்களவைத் தேர்தலில் 2009, 2019 என இரண்டு முறையும் போட்டியிட்டு தோல்வியடைந்தார்.

error: Content is protected !!