News April 10, 2024

எது உண்மையான ரம்ஜான் தேதி?

image

ரம்ஜான் பெருநாள் கொண்டாடுவதில் இருவேறு இஸ்லாமிய தரப்பினருக்கு மாற்றுக் கருத்து நிலவுவதால் சிலர் இன்றும் சிலர் நாளையும் பண்டிகையை கொண்டாடுகின்றனர். தமிழ்நாடு அரசின் தலைமை காஜி, நேற்று பிறை தெரியாததால் ஏப்ரல் 11ஆம் தேதி பெருநாள் கொண்டாடப்படும் என்று அறிவித்தார். ஆனால் அதனை ஏற்காத தவ்ஹீத் ஜமாஅத் மக்கள், இன்றே நோன்பை கைவிட்டு பெருநாள் கொண்டாடினர்.

Similar News

News December 5, 2025

வேலூர் மாவட்ட ஆட்சியர் முக்கிய அறிவிப்பு!

image

வேலூர் மாவட்டத்தில் வாக்காளர் சிறப்பு தீவிர திருத்த கணக்கெடுப்பு படிவங்களை பூர்த்தி செய்து வழங்க நாளை (டிசம்பர் 06) அனைத்து வாக்குச்சாவடி மையங்களிலும் காலை 10 மணி முதல் மதியம் 3 மணி வரை சிறப்பு முகாம் நடைபெற உள்ளது. வாக்காளர்கள் இந்த முகாம்களை பயன்படுத்திக் கொள்ளுமாறு கலெக்டர் சுப்புலட்சுமி இன்று (டிசம்பர் 05) தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

News December 5, 2025

BREAKING: விமான டிக்கெட் விலை விறுவிறுவென உயர்ந்தது

image

இண்டிகோ ஊழியர்களின் வேலை நிறுத்தத்தால் நாடு முழுவதும் விமான டிக்கெட் விலை பல மடங்கு உயர்ந்துள்ளது. அதன்படி சென்னை – பெங்களூரு ₹3,129 என இருந்த டிக்கெட் விலை ₹20,599, ஆக உயர்ந்துள்ளது. அதேபோல், சென்னை – திருச்சி ₹3,129 to ₹14,961, சென்னை – திருவனந்தபுரம் ₹6,805 to ₹34,403, சென்னை – மும்பை ₹5,980 to ₹42,448, சென்னை – டெல்லி ₹7,746 to ₹32,782 வரை உயர்ந்துள்ளது. இதனால் பயணிகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

News December 5, 2025

கூடங்குளம் அணுமின் நிலையம்: புடின் நம்பிக்கை

image

கூடங்குளத்தில் உலகின் மிகப்பெரிய அணுமின் நிலையத்தை உருவாக்க இந்தியாவுக்கு ரஷ்யா உதவி செய்து வருவதாக அதிபர் புடின் தெரிவித்துள்ளார். அங்குள்ள 6 அணு உலைகளில் 3 உலைகள் இந்தியாவின் எரிசக்தி வலையமைப்புடன் ஏற்கெனவே இணைக்கப்பட்டுள்ளது என்று அவர் குறிப்பிட்டார். திட்டம் முழுமையாக முடிக்கப்பட்டு கூடங்குளம் அணுமின் நிலையம் செயல்பாட்டுக்கு வரும்போது, மலிவான, சுத்தமான மின்சாரம் கிடைக்கும் என்றும் கூறினார்.

error: Content is protected !!