India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
ஆன்லைன் உணவு டெலிவரி அப்ளிகேஷன் மூலம் டெலிவரிக்கு வந்தவர் இளம் பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பெங்களூருவைச் சேர்ந்த இளம்பெண் இரவு 8 மணியளவில் ஆன்லைனில் உணவு ஆர்டர் செய்துள்ளார். அதனை டெலிவரி செய்ய வந்த நபர், பெண்ணிடம் தண்ணீர் கேட்டிருக்கிறார். அதனை எடுக்க கிச்சனுக்கு சென்றபோது பின்தொடர்ந்து வந்து பாலியல் தொல்லை கொடுத்திருக்கிறார் அந்த நபர்.
பின்னணி பாடகராக நடிகர் விஜய் சேதுபதி புதிய அவதாரமெடுத்துள்ளார். திரைப்படங்களில் நாயகன், வில்லன், குணச்சித்திரம் என பல பரிணாமங்களில் விஜய் சேதுபதி கலக்கி வருகிறார். இதையடுத்து பின்னணி பாடகராகவும் அவர் புதிய அவதாரமெடுத்துள்ளார். மாஸ்டர் மகேந்திரன் கதாநாயகனாக நடிக்கும் கரா படத்தில், அச்சு ராஜாமணி இசையில் “காதல் குமாரு, வைரல் ஆனாரு” என்ற பாடலை விஜய் சேதுபதி பாடியுள்ளார்.
அதிமுக கூட்டணியில் தேமுதிக- 5, எஸ்டிபிஐ, புதிய தமிழகத்திற்கு தலா 1 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளது. 33 தொகுதிகளில் அதிமுக நேரடியாக போட்டியிடுவதாக கூறப்பட்டுள்ளது. ஆனால், கூட்டணியில் உள்ள புரட்சி பாரதத்திற்கு ஒரு சீட் கூட ஒதுக்கப்படவில்லை. இதையடுத்து, அக்கட்சி சார்பில் இன்று அவசர ஆலோசனை நடைபெற உள்ளது. இதில் அதிமுக கூட்டணியில் இருந்து விலகுவது குறித்து முடிவு செய்யப்பட உள்ளதாக கூறப்படுகிறது.
கமல்ஹாசன் தயாரிப்பில் ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்துவரும் அமரன் படப்பிடிப்பு புதுச்சேரியில் மும்முரமாக நடக்கிறது. புதுச்சேரியில் இன்னும் 20 நாள்கள் படப்பிடிப்பு நடத்தப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அன்பறிவு ஸ்டண்ட் மாஸ்டர்ஸ் சண்டைக் காட்சிகளை படமாக்க இருக்கிறார்கள். இதற்கடுத்து வெளியீட்டு பணிகளை தொடங்க படக்குழு திட்டமிட்டிருப்பதாக சினிமா வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
திமுக கூட்டணியில் காங்கிரஸ் கட்சிக்கு 9+1 தொகுதிகள் ஒதுக்கப்பட்ட நிலையில், உத்தேச வேட்பாளர் பட்டியல் வெளியாகியுள்ளது. திருவள்ளூர்- சசிகாந்த் செந்தில், கரூர்- ஜோதிமணி, நெல்லை- பீட்டர் அல்போன்ஸ், விருதுநகர்- மாணிக்கம் தாகூர், சிவகங்கை- கார்த்தி சிதம்பரம், கடலூர்- கே.எஸ்.அழகிரி, கிருஷ்ணகிரி- செல்லக்குமார், குமரி- விஜய்வசந்த், மயிலாடுதுறை- பிரவீன்சக்ரவர்த்தி ஆகியோர் போட்டியிடுவர் என கூறப்படுகிறது.
காகத்துக்கு காலையில் உணவு வைத்தால் தீராத கடன் தொல்லை தீரும். நட்புக்கு இலக்கணமாக பார்க்கப்படும் காகம், ஆன்மீகத்திலும் முக்கியப் பங்கு வகிக்கிறது. சனி பகவானின் வாகனமாகவும், முன்னோர்களின் வடிவமாகவும் காகம் பார்க்கப்படுகிறது. அத்தகைய காகத்துக்கு காலை நேரத்தில் எழுந்ததும் வீட்டில் உணவு வைத்தால் தீராத கடன் தொல்லை நீங்கும், முன்னோர்களின் ஆசிர்வாதம் கிடைக்கும் என நம்பப்படுகிறது.
பிரதமரின் கோவை ரோடுஷோ நிகழ்ச்சிக்கு பள்ளி மாணவர்களை அழைத்து வந்த 3 தனியார் பள்ளிகள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. பிரதமர் மோடி பாஜகவின் பிரச்சாரத்திற்காக கோவை வந்திருந்தபோது பள்ளி மாணவர்கள் சிலர் சீருடையில் அணிவகுத்து நின்றனர். அதற்கு கடுமையான எதிர்ப்புகள் கிளம்பிய நிலையில், குழந்தைகள் நல சட்டப்பிரிவின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் கைது செய்யப்பட்டதைத் தொடர்ந்து நாடு தழுவிய போராட்டத்திற்கு ஆம் ஆத்மி கட்சி அழைப்பு விடுத்திருந்தது. இதனால், நேற்றிரவு முதலே நாடு முழுவதும் ஆங்காகே போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. குறிப்பாக டெல்லி, ஹரியானா, பஞ்சாப், உத்தர பிரதேசம் உள்ளிட்ட வட மாநிலங்களில் போராட்டம் தீவிரமாக நடைபெற்று வருகிறது. போராட்டத்தை கட்டுப்படுத்த போலீசார் முயன்று வருகின்றனர்.
மக்களவைத் தேர்தலில் தமிழ்நாட்டில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளர்கள் பட்டியல் இன்று வெளியாக வாய்ப்பிருப்பதாக செல்வப்பெருந்தகை தெரிவித்துள்ளார். காங்கிரஸ் போட்டியிடும் 10 தொகுதிகளுக்கான உத்தேச வேட்பாளர் பட்டியலை தயாரித்து மேலிடத்துக்கு தமிழ்நாடு காங்கிரஸ் அளித்தது. அதனடிப்படையில் டெல்லியில் இன்று காலை 10 மணிக்கு பட்டியல் வெளியிட வாய்ப்பு இருப்பதாக செல்வப்பெருந்தகை கூறியுள்ளார்.
பெண்களை மையமாக வைத்து வரும் படங்கள் வெற்றி பெறுவது மகிழ்ச்சியளிக்கிறது என்று பிரபல பாலிவுட் நடிகை ராணி முகர்ஜி தெரிவித்துள்ளார். அவர் அளித்துள்ள பேட்டியில், “பெண்களை மையமாக வைத்து தற்போது அதிக படங்கள் வெளியாகின்றன. அந்தப் படங்களும் வெற்றி அடைகின்றன. இதை காண்கையில் மகிழ்ச்சியளிக்கிறது. நமது மக்கள் அனைத்து வகையான படங்களையும் விரும்புவதையே இது காட்டுகிறது” எனக் கூறியுள்ளார்.
Sorry, no posts matched your criteria.