News April 10, 2024
தமிழக தடகள வீரருக்கு 2 ஆண்டு தடை

ஊக்கமருந்து விவகாரத்தில் தமிழகத்தைச் சேர்ந்த தடகள வீரர் லக்ஷ்மணுக்கு 2 ஆண்டு போட்டிகளில் பங்கேற்க தடை விதிக்கப்பட்டுள்ளது. இதே போல, தடகள வீராங்கனை ஹிமானி சாண்டலுக்கு 4 ஆண்டு தடை விதித்து தேசிய ஊக்கமருந்து தடுப்பு ஆணையம் உத்தரவிட்டுள்ளது. மேலும், ஊக்கமருந்து பரிசோதனையில் தோல்வியை தழுவிய முகமது நூர் ஹசன், ஹேம்ராஜ் குர்ஜார், அஞ்சலி குமாரி ஆகியோரும் தற்காலிக இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
Similar News
News November 14, 2025
BREAKING: பிஹாரில் 125+ இடங்களில் NDA வெற்றி

பிஹார் தேர்தலில் NDA கூட்டணி 125 இடங்களில் வெற்றி பெற்றுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தற்போது, 147 தொகுதிகளின் முடிவுகளை தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது. அதன்படி, ஆட்சி அமைப்பதற்கு தேவையான 122 இடங்களுக்கு மேல் NDA கூட்டணி கைப்பற்றியுள்ளது. MGB கூட்டணி 17 இடங்களிலும், ஒவைசியின் AIMIM 5 இடங்களிலும் வெற்றி பெற்றுள்ளன. வாக்கு எண்ணிக்கை முடிவில் NDA கூட்டணி 200+ இடங்களை வெல்ல வாய்ப்புள்ளது.
News November 14, 2025
தேஜஸ்வி யாதவ் வெற்றி

பிஹார் தேர்தலில் ராஷ்ட்ரிய ஜனதா தளக் கட்சித் தலைவர் தேஜஸ்வி யாதவ் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ரகோபூர் தொகுதியில் போட்டியிட்ட அவர் சில சுற்றுகளில் பாஜக வேட்பாளர் சதீஷ்குமாரை விட பின்தங்கி இருந்தார். எனினும், அடுத்தடுத்த சுற்றுகள் முடிவில் 14,532 வாக்குகள் வித்தியாசத்தில் தேஜஸ்வி வென்றுள்ளார். அதேநேரம் அவரது MGB கூட்டணி 35 இடங்களில் மட்டுமே முன்னிலை பெற்று படுதோல்வியை சந்தித்துள்ளது.
News November 14, 2025
மோடி அரசுக்கு கிடைத்த வெற்றி: அமித்ஷா

வாக்காளர் பட்டியலைத் தூய்மைப்படுத்துவது கட்டாயம் என்பதை பிஹார் மக்கள் நிரூபித்துள்ளனர் என அமித்ஷா தெரிவித்துள்ளார். மேலும் பிஹாரில் கிடைத்த ஒவ்வொரு வாக்கும் மோடி அரசின் மீதான நம்பிக்கைக்கு கிடைத்த வெற்றி என்றும் ஊடுருவல்காரர்கள் மற்றும் அவர்களின் பாதுகாவலர்களுக்கு மக்கள் தகுந்த பதிலடி கொடுத்துள்ளதாகவும் அமித் ஷா குறிப்பிட்டுள்ளார்.


