news

News March 22, 2024

ஐபிஎல்லில் 2 பவுன்சர்களுக்கு அனுமதி

image

2024 ஐபிஎல்லில் ஒரு ஓவரில் 2 பவுன்சர்களுக்கு அனுமதியளிக்கப்பட்டுள்ளது. கடந்த சீசனில் ஒரு பவுன்சருக்கு மட்டுமே அனுமதி தரப்பட்டிருந்தது. அதற்கு மேல் வீசப்படும் பவுன்சர் நோபாலாக கருதப்பட்டது. இந்நிலையில் 2024 சீசனில், 2 பவுன்சர்கள் வீச பந்துவீச்சாளர்களுக்கு அனுமதியளிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து 3வதாக பவுன்சர் வீசினால் அது நோபாலாக கருதப்படும்.

News March 22, 2024

ஒரு தொகுதிக்கு வேட்பாளரை அறிவிக்காத பாமக

image

மக்களவைத் தேர்தலில் பாஜக கூட்டணியில் இடம்பெற்றுள்ள பாமகவுக்கு 10 தொகுதிகள் ஒதுக்கப்பட்டது. அதில், திண்டுக்கல், அரக்கோணம், தருமபுரி, சேலம், விழுப்புரம், கள்ளக்குறிச்சி உட்பட 9 தொகுதிகளுக்கு வேட்பாளர் அறிவிக்கப்பட்டுள்ளனர். ஆனால், காஞ்சிபுரம் தொகுதிக்கு மட்டும் வேட்பாளர் அறிவிக்கப்படவில்லை. காஞ்சிபுரம் தனித் தொகுதி என்பதால் அங்கு வேட்பாளரை அடையாளம் காண்பதில் சிக்கல் நிலவுவதாக கூறப்படுகிறது.

News March 22, 2024

OTT தளங்களில் வெளியாகும் படங்கள்

image

இந்த வாரம் அமேசான் பிரைம் உள்ளிட்ட OTT தளங்களில் வெளியாகும் படங்களின் பட்டியல் வெளியாகியுள்ளது. ▶ஜியோ சினிமாவில் 7 ஆஸ்கர் விருதுகளை பெற்ற ஓப்பன்ஹெய்மர் படம். ▶நெட்ஃபிளிக்ஸில் தீபிகா படுகோன், ஹ்ரித்திக் ரோஷனின் நடிப்பில் வெளியான ஃபைட்டர். ▶டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டாரில் மம்மூட்டி நடித்த ஆப்ரகாம் ஓஸ்லர். ▶அமேசான் ப்ரைமில் தொகுப்பாளர் ரக்‌ஷன் நடித்த மறக்குமா நெஞ்சம் திரைப்படம் வெளியாகியுள்ளது.

News March 22, 2024

தேர்தலில் களம் இறங்குகிறார் தங்கர் பச்சான்

image

இயக்குநரும் ஒளிப்பதிவாளருமான தங்கர் பச்சான் பாமக சார்பாக தேர்தல் அரசியலில் களம் இறங்குகிறார். அழகி, பள்ளிக்கூடம் உள்ளிட்ட தமிழின் சிறந்த படைப்புகள் சிலவற்றை இயக்கியிருக்கும் தங்கர் பச்சான், நாடாளுமன்றத் தேர்தலில் கடலூர் தொகுதியில் பாமக சார்பாக போட்டியிடுகிறார். பாமக தலைமை இதனை அதிகாரப்பூர்வமாக அறிவித்திருக்கிறது. தங்கர் பச்சான் ஏற்கெனவே சமூக பிரச்சினைகளுக்காக குரல் கொடுத்து வந்தவர்.

News March 22, 2024

பாமக வேட்பாளர் பட்டியல்

image

மக்களவைத் தேர்தலுக்கான பாமகவின் வேட்பாளர் பட்டியலை அக்கட்சியின் தலைவர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ளார். அதன்படி 1.திண்டுக்கல் – கவிஞர் திலகபாமா 2.அரக்கோணம் – வழக்குரைஞர் பாலு 3.தருமபுரி – அரசாங்கம் 4.சேலம் – அண்ணாதுரை 5.விழுப்புரம் – முரளிசங்கர் 6.கள்ளக்குறிச்சி – தேவதாஸ் 7.ஆரணி – கணேஷ்குமார் 8. மயிலாடுதுறை-
ஸ்டாலின் 9.கடலூர் – இயக்குனர் தங்கர்பச்சான் 10. காஞ்சிபுரம் – அறிவிக்கப்படவில்லை.

News March 22, 2024

அரவிந்த் கெஜ்ரிவாலே வாதாடுகிறார்

image

மதுபான கொள்கை ஊழல் வழக்கில் நேற்றிரவு அமலாக்கத்துறையால் டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் அதிரடியாக கைது செய்யப்பட்டார். இதையடுத்து, இன்று காலை அவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட உள்ளார். இந்நிலையில், நீதிமன்ற விசாரணை பட்டியலில் அமலாக்கத்துறைக்கு எதிராக இவ்வழக்கில் கெஜ்ரிவாலே சொந்தமாக வாதாட உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. வேறு வழக்கறிஞர்கள் பெயர்கள் எதுவும் அதில் இடம்பெறவில்லை.

News March 22, 2024

பூட்டான் புறப்பட்டார் பிரதமர் மோடி

image

2 நாள் அரசுமுறை பயணமாக பிரதமர் மோடி பூட்டான் நாட்டிற்கு புறப்பட்டு சென்றார். மோசமான வானிலை காரணமாக நேற்று இந்தப் பயணம் ஒத்திவைக்கப்பட்டிருந்தது. இந்தியாவுக்கும் சீனாவுக்கும் இடையே இருக்கும் பூட்டான் எனும் குட்டி நாடு அரசியல் முக்கியத்துவம் வாய்ந்தது. ஆகையால் அவர்களுடன் எப்போதும் நட்பு பாராட்டும் இந்தியா, இப்போதும் அந்த உறவைத் தொடர்கிறது. அங்கு பூட்டான் மன்னரை சந்தித்து பேசவிருக்கிறார் மோடி.

News March 22, 2024

பூஜ்யம் ஆன அதிமுகவின் தேர்தல் பத்திர நன்கொடை

image

2019 மக்களவைத் தேர்தலுக்கு பிறகு, அதிமுகவுக்கு தேர்தல் பத்திர நன்கொடை எதுவும் கிடைக்கவில்லை. மக்களவைத் தேர்தலுக்கு முன்புவரை, அதிமுகவுக்கு அதிக நன்கொடை அளிக்கப்பட்டுள்ளது. ஆனால் மக்களவைத் தேர்தலில் அதிமுக கூட்டணி தோல்வியடைந்ததை வைத்து, சட்டப்பேரவைத் தேர்தலில் அக்கட்சி பின்னடைவை சந்திக்கும் என நிறுவனங்கள் கணித்துள்ளன. இதனால் மக்களவைத் தேர்தலுக்கு பிறகு எந்த நன்கொடையும் அளிக்கவில்லை.

News March 22, 2024

ஆளுநர் மாளிகையில் எந்த ஏற்பாடுகளும் இல்லை

image

பொன்முடியை அமைச்சராக்குவதற்கு ஆளுநர் மாளிகையில் இதுவரை எந்த ஒரு ஏற்பாடும் செய்யப்படவில்லை. பொன்முடியை அமைச்சராக்க பரிந்துரைத்து முதல்வர் அளித்த கடிதத்தை ஆளுநர் நிராகரித்திருந்தார். இந்நிலையில், ஆளுநர் சட்டத்தை மீறி செயல்படுவதாக உச்சநீதிமன்றம் நேற்று கண்டனம் தெரிவித்து பொன்முடியை அமைச்சராக்க 24 மணி நேர கெடுவும் அளித்திருந்தது. ஆனால், ஆளுநர் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

News March 22, 2024

CSK Vs RCB: வெல்லப்போவது யார்?

image

ஐபிஎல் தொடரில் சி.எஸ்.கே மற்றும் ஆர்.சி.பி அணிகள் இதுவரை 31 முறை நேருக்கு நேர் மோதியுள்ளன. இதில் சி.எஸ்.கே 20 முறையும், ஆர்.சி.பி 10 முறையும் வென்றுள்ளன. ஒரு போட்டி ‘டை’ ஆனது. இந்தாண்டு ஐபிஎல் தொடரில் சி.எஸ்.கே, ஆர்.சி.பி இடையேயான முதல் போட்டி சேப்பாக்கம் மைதானத்தில் இன்று இரவு 8 மணிக்கு தொடங்குகிறது. இன்றைய போட்டியில் எந்த அணி வெல்லும் என நீங்கள் நினைக்கிறீர்கள்? என்று இங்கே தெரிவிக்கவும்.

error: Content is protected !!