News April 10, 2024
ஒரே நாளில் 14 பேர் பலி

தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் விபத்தில் சிக்கி 14 பேர் உயிரிழந்திருக்கின்றனர். மூன்று வெவ்வேறு இடங்களில் நடந்த கார் விபத்துகளில் இந்த சோகம் நடைபெற்றுள்ளது. திருப்பூர் மாவட்டம் காங்கேயம் அருகே அரசு பேருந்தும் காரும் மோதிய விபத்தில் 5 பேர் உயிரிழந்தனர். மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே ஏற்பட்ட கார் விபத்தில் 6 பேரும் தூத்துக்குடி மாவட்டம் கயத்தார் அருகே நடந்த விபத்தில் 3 பேர் உயிரிழந்தனர்.
Similar News
News November 10, 2025
Sports Roundup: 6 ரன்களில் அவுட் ஆன ஜெமிமா

*உலக துப்பாக்கிச்சுடுதல் சாம்பியன்ஷிப்பில் இந்திய வீரர் அனீஷ் பன்வாலா வெள்ளி பதக்கம் வென்றார். *ஆஸி., மகளிர் பிக்பாஷ் கிரிக்கெட்டில், மெல்போர்ன் ரெனிகேட்ஸ் அணிக்காக விளையாடும் ஜெமிமா ரோட்ரிக்ஸ் 6 ரன்களில் அவுட் ஆனார். *ஆஸி., நடைபெறும் ஓபன் ஸ்குவாஷ் போட்டி ஃபைனலில் தமிழக வீராங்கனை ராதிகா சுதந்திரா சீலன் தோல்வியை தழுவினார். *‘பிடே’ உலக செஸ் போட்டியில் பிரக்ஞானந்தா 4-வது சுற்றுக்கு முன்னேறினார்.
News November 10, 2025
BREAKING: நள்ளிரவில் அதிரடி கைது

நெடுந்தீவு அருகே மீன் பிடித்துக் கொண்டிருந்த தமிழக மீனவர்கள் 14 பேரை எல்லைத் தாண்டியதாக கூறி இலங்கை கடற்படையினர் நள்ளிரவில் அதிரடியாக கைது செய்துள்ளனர். 2 படகுகள், மீன்கள், வலைகள் உள்ளிட்ட பொருள்களையும் பறிமுதல் செய்து காங்கேசன்துறை கடற்படை முகாமிற்கு அழைத்துச் சென்றனர். கடந்த மாதம் 9-ம் தேதி 47 மீனவர்களை செய்து சிறையில் அடைத்த நிலையில், இலங்கை கடற்படையின் அட்டூழியம் தொடர்ந்து வருகிறது.
News November 10, 2025
ஆன்லைனில் SIR படிவத்தை விண்ணப்பிப்பது எப்படி? 1/2

★முதலில் <


