India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
சென்னை தியாகராய நகரில் நேற்று நடைபெற்ற பிரதமர் மோடியின் வாகனப் பேரணியில் விதிமீறல் நடைபெற்றதாக வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. தமிழிசைக்கு ஆதரவாக வாக்கு சேகரிக்க பிரதமர் மோடி நேற்று வாகனப் பேரணி நடத்தினார். அதில், தேர்தல் விதிமுறைகளை மீறி சாலைகளில் விளம்பர பதாகைகளை வைத்ததாக மாம்பலம் மற்றும் பாண்டி பஜார் காவல் நிலையங்களில் தேர்தல் அதிகாரிகள் புகாரின் பேரில் வழக்கு பதியப்பட்டுள்ளது.
வாக்காளர்கள் குடிபோதையில் வாக்களிப்பதை தடுக்க நடவடிக்கை கோரிய மேல்முறையீடு மனுவை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டது. ஆந்திராவைச் சேர்ந்த ஜனவாகினி கட்சி இதே கோரிக்கைக்கு தொடர்ந்த வழக்கை பிப்.28ஆம் தேதி ஆந்திர ஐகோர்ட் தள்ளுபடி செய்தது. இதனை எதிர்த்து தொடரப்பட்ட மனுவை இன்று விசாரித்த உச்ச நீதிமன்றம், இது விளம்பர நோக்கத்திற்காக தொடரப்பட்ட வழக்கு என்று மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.
துபாயில் புதிதாக கட்டியுள்ள கோயிலில், பக்தர்கள் கூட்டம் கட்டுக்கடங்காமல் குவிந்து வருவதால் முன்பதிவு முறை அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. பிரதமர் மோடி திறந்து வைத்த இந்தக் கோயிலில் மார்ச் 1 முதல் பக்தர்கள் அனுமதிக்கப்பட்டனர். அப்போதிலிருந்து கூட்டம் அதிகரித்து வருவதால், அதனை தவிர்க்க https://www.mandir.ae/visit என்ற இணையதளம் மூலம் தரிசன நேரத்தை முன்கூட்டியே பதிவு செய்யலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
நவ கிரகங்களின் மங்கள நாயகனான குரு பகவன் கொடுக்க ஆரம்பித்தால் யாராலும் தடுக்க முடியாது என்பது ஐதீகம். மே மாத கிரக நிலைகளின் படி ரிஷப ராசிக்கு அவர் இடம்பெயர உள்ளதால் மேஷம், ரிஷபம், கடகம், துலாம் ராசியினருக்கு பணம் தேடி வந்து கொட்டப் போகிறது. ஆடம்பர வாழ்க்கைக்கான யோகம், திடீர் அதிர்ஷ்டம், பண வரவு, திருமணம் கைகூடும், குழந்தை பிறக்கும் பாக்கியம் என பல்வேறு சுப பலன்கள் இவர்கள் அனுபவிக்க உள்ளனர்.
தேர்தல் பரப்புரைக்காக நேற்று சென்னை வந்திருந்த பிரதமர் மோடி, ராஜ் பவனில் இரவை கழித்துவிட்டு காலையில் வேலூர் புறப்பட்டார். இதுகுறித்து விமர்சித்திருக்கும் திமுகவின் ஆர்.எஸ்.பாரதி, “தேர்தல் விதிமுறைகளை மீறி ராஜ் பவனில் தங்குகிறார் பிரதமர். அங்கேயே பாஜக நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்துகிறார். இதையே முதல்வர் செய்தால் தேர்தல் ஆணையம் ஏற்றுக் கொள்ளுமா?” என்று பேசியிருக்கிறார்.
சிலருக்கு தூக்கத்தில் பற்களை நறநறவென கடிக்கும் பழக்கம் இருக்கிறது. மன அழுத்தத்திற்கான வடிகால் இல்லாமல் போகும் போது இந்த பிரச்சனை ஏற்படுவதாக மருத்துவர்கள் கூறுகின்றனர். தொடர்ந்து இதுபோன்று பற்களை கடிக்கும் பழக்கம் உடையவர்கள், தற்காலிக தீர்வாக ‘சாப்ட் ஸ்ப்லின்ட்’ என்ற கிளிப்பை பயன்படுத்தலாம். நிரந்தர தீர்வுக்கு மனநல ஆலோசகரின் அறிவுரையைப் பெறுவதுடன், யோகா, தியானம் போன்றவற்றை நாடலாம்.
மக்களவைத் தேர்தலுக்குப் பின் ஒரு திராவிட கட்சி கரைந்துவிடுமென, அதிமுகவை மறைமுகமாக குறிப்பிட்டு அண்ணாமலை விமர்சித்துள்ளார். கோவையில் செய்தி சேனலுக்கு அளித்த பேட்டியில், “பாஜக ஒருமுறை ஆட்சிக்கு வந்துவிட்டால், திராவிட கட்சிகளுக்கு வாய்ப்பிருக்காது. அதிமுகவும், திமுகவும் பாஜக வந்துவிடக் கூடாது என்பதில் கவனமாக இருக்கின்றன. திமுக எதிர்ப்புக்கு ஒரு கட்சி தேவையா என்று மக்கள் முடிவு செய்வார்கள்” என்றார்.
தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் விபத்தில் சிக்கி 14 பேர் உயிரிழந்திருக்கின்றனர். மூன்று வெவ்வேறு இடங்களில் நடந்த கார் விபத்துகளில் இந்த சோகம் நடைபெற்றுள்ளது. திருப்பூர் மாவட்டம் காங்கேயம் அருகே அரசு பேருந்தும் காரும் மோதிய விபத்தில் 5 பேர் உயிரிழந்தனர். மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே ஏற்பட்ட கார் விபத்தில் 6 பேரும் தூத்துக்குடி மாவட்டம் கயத்தார் அருகே நடந்த விபத்தில் 3 பேர் உயிரிழந்தனர்.
குமரி, கோவை உள்ளிட்ட 11 மாவட்டங்களில் ராம நவமி யாத்திரை நடத்த ஸ்ரீ ஆஞ்சநேயம் அறக்கட்டளை திட்டமிட்டிருந்தது. தேர்தல் பாதுகாப்பை காரணம் காட்டி போலீசார் அனுமதி மறுத்த நிலையில் அந்த அறக்கட்டளை நீதிமன்றத்தை நாடியது. மனுவை விசாரித்த ஐகோர்ட், யாத்திரைக்கு தடை சரிதான் என்று தீர்ப்பளித்தது. குமரியில் மட்டும் அனுமதிக்கலாமா என்று ஆலோசிக்க காவல்துறைக்கு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கச்சத்தீவு விவகாரத்தில் திமுக செய்ததை மக்களுக்கு புரிய வைக்க வேண்டும் என வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் கூறியுள்ளார். ஆரம்பம் முதலே திமுக இந்தப் பிரச்னையில் இருந்ததை வெளிப்படுத்தியதாக குறிப்பிட்ட அவர், அது தொடர்பான ரகசியப் பேச்சுவார்த்தையில் உடன்பாடு எட்டப்பட்டதாக குற்றம்சாட்டினார். மேலும், அங்கு என்ன நடந்தது என்பதை அப்போதைய திமுக முதல்வரும் ஒப்புக் கொண்டதாக ஜெய்சங்கர் கூறியுள்ளார்.
Sorry, no posts matched your criteria.