news

News April 13, 2024

‘போர்ன்விட்டா’ ஊட்டச்சத்து பானம் கிடையாது

image

‘போர்ன்விட்டா’ ஊட்டச்சத்து பானம் கிடையாது என வர்த்தகம் & தொழில்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. தேசிய குழந்தைகள் பாதுகாப்பு ஆணையம் மேற்கொண்ட ஆய்வில், ஊட்டச்சத்து பானங்கள் என்று சொல்லப்படுவதற்கான எந்தவொரு வரையறையும் போர்ன்விட்டா போன்றவற்றில் இல்லை. அதனால் ஊட்டச்சத்து பானம் என்ற வரிசையில் இருந்து போர்ன்விட்டா போன்ற பானங்களை நீக்குமாறு அனைத்து இ-காமெர்ஸ் நிறுவனங்களுக்கும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

News April 13, 2024

என் காதலனால் நான் ஏமாற்றப்பட்டேன்

image

வாழ்க்கையில் தனக்கு காதல் தோல்வி குறித்து நடிகை வித்யா பாலன் பேசியுள்ளார். நேர்காணல் ஒன்றில் பேசிய அவர், நான் கல்லூரியில் படிக்கும் போது, என் முதல் காதலன் என்னை ஏமாற்றி விட்டான். காதலர் தினத்தன்று அவன் என்னிடம் வந்து, என் முன்னாள் காதலியுடன் டேட்டிங் செல்ல போவதாக கூறினான். அப்போதே நான் நொறுங்கிவிட்டேன். அதன் பிறகு நாங்கள் பிரிந்து விட்டோம். இப்போது நான் நல்ல நிலையில் உள்ளேன் எனக் கூறினார்.

News April 13, 2024

மரண தண்டனை நபரை காக்க ₹35 கோடி திரட்டிய கேரள மக்கள்

image

சவுதியில் மரண தண்டனைக்கு காத்திருக்கும் நபரை காக்க ₹35 கோடியை கேரள மக்கள் திரட்டியுள்ளனர். சிறுவனை கொலை செய்த வழக்கில் கேரளாவை சேர்ந்த ரஹீமுக்கு தண்டனை விதிக்கப்பட்ட நிலையில், ₹33 கோடி அளித்தால் மன்னிப்போம் என சிறுவன் குடும்பத்தினர் தெரிவித்தனர். இதனால் அவரை காக்க கேரள மக்கள் ஒன்று சேர்ந்து நிதி திரட்டினர். இதுதான் உண்மையான கேரளா ஸ்டோரி என பினராயி விஜயன் பாராட்டியுள்ளார்

News April 13, 2024

பாஜகவுக்கு பெரும் பின்னடைவு

image

அரியானாவில் 5, ராஜஸ்தானில் 6 இடங்களிலும் பாஜகவுக்கு பெரும் பின்னடைவு ஏற்படும் என பாஜக நடத்திய உட்கட்சி ஆய்வில் தெரியவந்துள்ளது. அக்னிவீர் திட்டம், விவசாயிகள் போராட்டம், ராஜ்புத்திர மற்றும் ஜாட் சமூகத்தினர் எதிர்ப்பு போன்ற பல காரணங்களால், அரியானாவில் ரோஹ்தக், சோனாபட், சிர்ஸா, ஹிசார், கர்னல், ராஜஸ்தானில் பர்மெர், ஷூரு, நகெளர், டெளசா, டோங்க், கரெளலி ஆகிய தொகுதிகளில் பாஜகவுக்கு பின்னடைவு ஏற்படுமாம்.

News April 13, 2024

ரோஹித் ஷர்மா CSK அணியில் சேர வேண்டும்

image

2025 ஐபிஎல் தொடரில், ரோஹித் ஷர்மா சென்னை அணியில் சேரலாம் என இங்கி., வீரர் மைக்கேல் வாகன் கருத்து தெரிவித்துள்ளார். சமீபத்திய நேர்காணல் ஒன்றில் பேசிய அவர், சென்னை அணியின் கேப்டனாக இருக்கும் ருதுராஜ், தற்போதைக்கு கேப்டன் பொறுப்பில் இருக்கிறார். இது தோனிக்கு கடைசி ஐபிஎல் தொடராக இருக்கலாம். எனவே, ரோஹித் ஷர்மா அடுத்தாண்டு ஐபிஎல் தொடரில் சென்னை அணியில் சேர்ந்தால் சரியாக இருக்கும் எனக் கூறினார்.

News April 13, 2024

IPL: உங்களுக்கு தெரியுமா?

image

பெங்களூருவுக்கு எதிரான ஐபிஎல் போட்டியில், மும்பை வீரர் பும்ரா அரிய சாதனை ஒன்றை படைத்துள்ளார். 2013ஆம் ஆண்டு ஐபிஎல் தொடரில் அறிமுகமான பும்ரா, தனது முதல் விக்கெட்டாக விராட் கோலியை வீழ்த்தினார். 6 வருடங்கள் கழித்து 2019இல் நடந்த ஐபிஎல் போட்டியிலும் கோலியை தனது 100ஆவது விக்கெட்டாக வீழ்த்தினார். சமீபத்தில் (ஏப்ரல் 11) நடந்த ஐபிஎல் போட்டியிலும், விராட் கோலியை பும்ரா தான் வீழ்த்தியுள்ளார்.

News April 13, 2024

BREAKING: அதிமுக உடைகிறதா?

image

டிடிவி கையில் அதிமுக செல்லும் என அண்ணாமலை பேசியிருப்பது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. TTV, OPS, சசிகலாவை ஓரங்கட்டிவிட்டு அதிமுகவின் ஒற்றை தலைமையாக EPS உருவானதற்கு பாஜக முக்கிய காரணம் என சொல்லப்பட்டது. ஆனால், அதிமுகவை மீண்டும் கைப்பற்றுவோம் என்ற முனைப்புடன் செயல்படும் TTV, OPS உடன் கூட்டணி வைத்துள்ள அண்ணாமலையின் பேச்சு மீண்டும் அதிமுக உடைகிறதா? என்ற கேள்வி எழுப்பியுள்ளது.

News April 13, 2024

ஜூன் 4க்கு பிறகு அதிமுக டிடிவி தினகரன் வசமாகும்

image

அதிமுக தொண்டர்கள் டிடிவி தினகரனுக்கே வாக்களிப்பார்கள் என அண்ணாமலை தெரிவித்துள்ளார். தேனியில் டிடிவி தினகரனுக்கு ஆதரவாக பரப்புரையில் ஈடுபட்ட அவர், இபிஎஸ் தலைமயிலான அதிமுகவும், திமுகவும் வேறு வேறு அல்ல என்று சாடினார். ஜூன் 4க்கு பிறகு அதிமுக டிடிவி தினகரன் வசமாகும் என்று நம்பிக்கை தெரிவித்தார். மேலும், தமிழகத்தில் புதிய அரசியலை மக்களுக்கு காட்ட வேண்டும் என்றும் அவர் கூறினார்.

News April 13, 2024

தமிழகத்தில் பாஜக 25% வாக்குகள் பெறும்

image

திமுக, அதிமுகவுக்கு மாற்றாக பாஜக தமிழகத்தில் வளர்ச்சி கண்டுள்ளதாக அக்கட்சியின் தேசிய இளைஞர் அணி தலைவர் தேஜஸ்வி சூர்யா தெரிவித்துள்ளார். மக்களவைத் தேர்தலில் தமிழக மக்கள் யாருக்கு வாக்களிக்க உள்ளனர் என்பதை அறிய இந்தியா மட்டுமல்லாது உலகமே எதிர்பார்த்து காத்திருப்பதாக கூறினார். மேலும், தமிழகத்தில் பாஜக 25% வாக்குகளை நிச்சயம் பெற்று கணிசமான தொகுதிகளில் வெற்றி பெறும் எனவும் அவர் நம்பிக்கை தெரிவித்தார்.

News April 13, 2024

‘கிங் மேக்கர்’ காமராஜர் தமிழக முதல்வராக பதவியேற்ற தினம்

image

நேரு மறைவுக்கு பிறகு பிரதமராகும் வாய்ப்பு 2 முறை கிடைத்தும், சாஸ்திரி, இந்திரா காந்தி ஆகியோருக்கு அந்த வாய்ப்பை அளித்ததால் கிங் மேக்கர் என அழைக்கப்பட்ட கர்ம வீரர் காமராஜர், இதே தினத்தில் தான் (1954 ஏப்.13) தமிழக முதல்வராக முதல்முறையாக பதவியேற்றார். பின்னர் 1963 அக். 2 வரை 3 முறை தொடர்ந்து முதல்வராக இருந்தார். காங்கிரசை வலுப்படுத்த முதல்வர் பதவியை அவரே ராஜினாமா செய்தார்.

error: Content is protected !!