news

News March 19, 2024

கோர விபத்தில் 4 பேர் பலி

image

திருநெல்வேலியில் இருந்து சென்ற டெம்போ டிராவலர் வாகனம் கேரளாவின் மலைப் பகுதியில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 4 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். நெல்லையில் இருந்து இடுக்கிக்கு சுற்றுலாவுக்காக 20 பேருடன் சென்ற வாகனம், அடிமாலி அருகே சென்று கொண்டிருக்கும்போது மலையில் இருந்து கவிழ்ந்தது. இதில் 3 வயது குழந்தை உள்ளிட்ட நான்கு பேர் உயிரிழந்தனர். 12 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

News March 19, 2024

அத்தியாவசியப் பணியில் உள்ளோருக்கு தபால் வாக்கு

image

தமிழகத்தில் சிவில் போக்குவரத்து, ஊடகம் போன்ற அத்தியாவசியப் பணியாளர்களுக்கு தபால் வாக்கு செலுத்த ஏற்பாடு செய்யுமாறு, தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரிக்கு இந்திய தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. தபால் வாக்கு செலுத்தும் பணியை ஒருங்கிணைக்க அதிகாரி ஒருவரை நியமிக்குமாறு அறிவுறுத்தியுள்ள ஆணையம், அது தொடர்பான 12டி விண்ணப்பம் அந்த அதிகாரியிடம் இருப்பதை உறுதி செய்ய வேண்டும் எனத் தெரிவித்துள்ளது.

News March 19, 2024

ஐபிஎல் ஃபேன்ஸ் பார்க்..

image

IPL 17ஆவது சீசன் மார்ச் 22-ல் தொடங்க உள்ளது. சென்னையில் நடைபெறும் முதல் போட்டியில் CSK-RCB அணிகள் மோதுகின்றன. இந்த நிலையில், ‘ஐபிஎல் ஃபேன்ஸ் பார்க்’ என்ற பெயரில் நாடு முழுவதும் உள்ள முக்கிய நகரங்களில் பெரியத் திரையில் ஐபிஎல் போட்டிகளை இலவசமாக காண BCCI சிறப்பு ஏற்பாடு செய்துள்ளது. அதன்படி, தமிழகத்தில், மதுரை ரேஸ் கோர்ஸ் மைதானத்தில் ஐபிஎல் போட்டிகளை ஒளிபரப்புவதற்கான ஏற்பாடுகள் நடந்து வருகிறது.

News March 19, 2024

விஜய் கட்சியில் இணைந்த ரேவந்த் சரண்

image

சென்னையில் உள்ள ரோகிணி திரையரங்கின் இயக்குநர் ரேவந்த் சரண், விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் கட்சியில் இணைந்துள்ளார். இதுகுறித்து தனது X பக்கத்தில் பதிவிட்ட அவர், “20 வருடங்களுக்கும் மேலாக அவரது ரசிகராக இருந்து வருகிறேன். தமிழகத்தை முற்போக்கான, ஊழலற்ற மற்றும் பாதுகாப்பான மாநிலமாக மாற்றும் அவரது சிந்தனையுடன் இணைவது மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது” என நெகிழ்ச்சியுடன் பதிவிட்டுள்ளார்.

News March 19, 2024

இளைஞர்களிடையே அதிகரிக்கும் புற்றுநோய்!

image

வயதானவர்களை மட்டுமே தாக்கி வந்த பெருங்குடல் புற்றுநோய், தற்போது இளைஞர்களையும் தாக்கி வருகிறது. மரபணு பிரச்னை, சுற்றுச்சூழலில் ஏற்பட்ட மாறுபாடுகளே இந்த மோசமான நிலைக்கு காரணம் எனத் தெரிய வந்துள்ளது. பலவீனம், மயக்கம், ரத்தசோகை, எடை இழப்பு, சாப்பிடும் பழக்கத்தில் மாற்றம் போன்றவை இதன் அறிகுறிகளாகும். உங்களுக்கு இந்த அறிகுறிகள் இருக்குமானால், ஆண்டுக்கு ஒருமுறை மருத்துவமனையில் பரிசோதனை செய்வது நல்லது.

News March 19, 2024

பைக் சாகசம் செய்வோரை சீர்திருத்த வேண்டும்

image

பைக் சாகசம் செய்வோரை குற்றவாளியாக முத்திரை குத்தக் கூடாது என்று சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது. சென்னை ராதாகிருஷ்ணன் சாலையில் பைக் சாகசத்தில் ஈடுபட்டவர்கள் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்திருந்தனர். அதனை ரத்து செய்ய வலியுறுத்தி குற்றம் சாட்டப்பட்டவர்கள் உயர்நீதிமன்றத்தை நாடியிருந்தனர். அவர்களை சீர்திருத்தும் நடவடிக்கைகளை போலீசார் செய்ய வேண்டும் என்று ஐகோர்ட் வலியுறுத்தியுள்ளது.

News March 19, 2024

கோப்பையை விட கோலியின் சாதனைகள் பெரியது

image

விராட் கோலியுடன் என்னை ஒப்பிடுவது முற்றிலும் தவறு என RCB அணியின் மகளிர் அணி கேப்டன் ஸ்மிருதி மந்தனா தெரிவித்துள்ளார். செய்தியாளர்களை சந்தித்த அவர், “WPL கோப்பையைவிட, இந்திய அணிக்காக கோலி செய்த சாதனைகள் தான் மிகப்பெரியது. அவர் எங்களுக்கு மிகப்பெரிய உத்வேகமாக இருந்து வருகிறார். நான் அவருடைய 18ஆம் எண் ஜெர்சியை அணிந்திருப்பதால், என்னை அவரோடு ஒப்பிடுவது சரியாக இருக்காது” எனக் கூறியுள்ளார்.

News March 19, 2024

திரில்லர் படத்தில் நடிக்கும் பரத்

image

பரத் நடிக்கும் ‘ஒன்ஸ் அபான் எ டைம் இன் மெட்ராஸ்’ (Once Upon A Time In Madras) திரைப்படம் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. பிரசாத் முருகன் இயக்கும் இந்தப் படத்திற்கு, ஜோஸ் ஃப்ராங்க்ளின் இசையமைத்துள்ளார். கதையின் நாயகிகளாக விருமாண்டி அபிராமி, அஞ்சலி நாயர் மற்றும் பவித்ரா லட்சுமி ஆகியோர் நடித்துள்ளனர். ஹைப்பர் லூப் திரில்லர் கதைக்களத்தில் உருவாகும் இப்படத்தின் டீசர் விரைவில் வெளியாகவுள்ளது.

News March 19, 2024

உங்களுக்கு இந்த மெசேஜ் வந்ததா?

image

மக்களவைத் தேர்தலையொட்டி ‘விக்சித் பார்த் சம்பர்க்’ என்ற பெயரில் மத்திய பாஜக அரசு வாட்ஸ் அப் மெசேஜ் அனுப்பி வருகிறது. இந்த நிலையில், இதே பெயரை பயன்படுத்தி சைபர் கிரைம் குற்றவாளிகள் மோசடி செய்ய வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. குறிப்பாக, மக்களிடம் கருத்து கேட்பது போல, அவர்களது செல்போனில் உள்ள தகவல்கள் மற்றும் பணத்தை திருடுவதாகவும் புகார் எழுந்துள்ளது. உங்களுக்கு இந்த மெசேஜ் வந்ததா?

News March 19, 2024

ஃபகத் பாசில் நடிக்கும் புதிய படங்கள்

image

மலையாள நடிகர் ஃபகத் பாசில் நடிக்கும் 2 புதிய படங்களின் அறிவிப்பு வெளியாகியுள்ளது. சித்தார்த்தா நாதெல்லா இயக்கும் படத்திற்கு ‘ஆக்சிஜன்’ எனவும், ஷஷாங்க் யெலேட்டி இயக்கும் படத்திற்கு ‘டோன்ட் டிரபிள் தி டிரபிள்’ (Dont Trouble The Trouble) எனவும் பெயரிடப்பட்டுள்ளது. இயக்குநர் ராஜமௌலி தயாரிக்கும் இந்த இரு படங்களின் படப்பிடிப்பும் இந்தாண்டே தொடங்க உள்ளதால், ரசிகர்கள் ஆவலுடன் உள்ளனர்.

error: Content is protected !!