News April 10, 2024
25 ஆண்டுகளை நிறைவு செய்த ‘படையப்பா’

ரஜினி, ரம்யா கிருஷ்ணன் நடித்த ‘படையப்பா’ திரைப்படம், இன்றுடன் 25 ஆண்டுகளை நிறைவு செய்துள்ளது. கே.எஸ்.ரவிக்குமார் இயக்கத்தில் 1999ஆம் ஆண்டு வெளியான இப்படம், நீலாம்பரி கதாபாத்திரம், ரஜினியின் பன்ச் வசனங்கள், ஏ.ஆர்.ரஹ்மானின் பாடல்களால் மிகப்பெரிய வரவேற்பை பெற்று பட்டையை கிளப்பியது. மேலும், உலகம் முழுவதும் 200 ஃபிலிம்களுக்கு மேல் வெளியான முதல் தமிழ் படம் என்ற பெருமையும் இப்படத்துக்கு உண்டு.
Similar News
News December 11, 2025
RSS எந்த மதத்திற்கும் எதிரானது அல்ல: மோகன் பகவத்

முஸ்லிம்கள், கிறிஸ்தவர்கள் என எந்த மதத்தினருக்கும் RSS எதிரானது அல்ல என அதன் தலைவர் மோகன் பகவத் தெரிவித்துள்ளார். திருச்சியில் நடந்த நிகழ்ச்சியில் பேசிய அவர், இந்து சமுதாயத்தை முன்னேற்றவே RSS தோற்றுவிக்கப்பட்டது. நான் என் உடலை வலுவாக வைத்துக் கொள்கிறேன் என்றால், அது பிறரை தாக்குவதற்காக அல்ல. யாராவது என்னை தாக்கினால், அந்த வலு என்னை காப்பாற்றும் என்று அவர் தெரிவித்துள்ளார்.
News December 11, 2025
இன்றைய நல்ல நேரம்

▶டிசம்பர் 11, கார்த்திகை 25 ▶கிழமை: வியாழன் ▶நல்ல நேரம்: 10:45 AM – 11:45 AM ▶கெளரி நல்ல நேரம்: 12:15 AM – 1:15 AM & 6:30 PM – 8:30 PM ▶ராகு காலம்: 1:30 PM – 3:00 PM ▶எமகண்டம்: 6:00 AM – 7:30 AM ▶குளிகை: 9:00 AM – 10:30 AM ▶திதி: சப்தமி ▶சூலம்: தெற்கு ▶பரிகாரம்: தைலம்.
News December 11, 2025
ஆயுதங்களை ஒப்படைத்து 11 நக்சல்கள் சரண்

2026 மார்ச் 31-க்குள் நாட்டில் நக்சல்களை ஒழிக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. அந்தவகையில், மகாராஷ்டிராவில் நேற்று 11 நக்சல்கள், தங்கள் ஆயுதங்களை ஒப்படைத்துவிட்டு சரணடைந்துள்ளனர். இவர்களை பற்றி தெரிவித்தால் ₹82 லட்சம் பரிசுத்தொகை வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டு இருந்தது. இதில், லெகமி என்பவர் மீது 43 என்கவுண்டர் உள்பட 88 குற்ற வழக்குகள் உள்ளது.


