India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
2024 ஐபிஎல் தொடருக்கான லோகோவை, பெங்களூரு அணி வெளியிட்டுள்ளது. சின்னசாமி மைதானத்தில் நடைபெற்ற ‘RCB Unbox’ நிகழ்ச்சியில், வீரர்கள் அனைவரும் புதிதாக வடிவமைக்கப்பட்ட ஜெர்சியை அணிந்து வந்தனர். பின்னர், RCB அணியின் புதிய லோகோ வெளியிடப்பட்டது. அதில், இருந்த ‘Bangalore’ என்ற வார்த்தையை தற்போது ‘Bengaluru’ என மாற்றப்பட்டுள்ளது. புதுப்புது மாற்றங்களுடன் களமிறங்கும் RCB அணி, இம்முறை கோப்பையை வெல்லுமா?
புஷ்கர் காயத்திரி இயக்கும் ‘சுழல் 2’ வெப் தொடர், அமேசான் பிரைமில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. கிரைம் திரில்லர் கதைக்களத்தில் உருவான இத்தொடரின் முதல் பாகம், கடந்த 2022ஆம் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. இதனைத் தொடர்ந்து, 2ஆம் பாகத்தின் படப்பிடிப்பு முழுவீச்சில் நடைபெற்று வரும் நிலையில், தற்போது இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மக்களவைத் தேர்தலுக்கான திமுகவின் தேர்தல் அறிக்கை நாளை காலை 10 மணிக்கு வெளியிடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் ஏப்.19ஆம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. இந்நிலையில், கனிமொழி தலைமையிலான திமுக தேர்தல் அறிக்கை தயாரிப்புக் குழுவினர் தமிழகம் முழுவதும் சுற்றுப் பயணம் மேற்கொண்டு மக்களின் தேவைகளை கேட்டறிந்தனர். இதையடுத்து, முழுமையாக தயாரான தேர்தல் அறிக்கை கனிமொழி தலைமையில் நாளை வெளியிடப்படுகிறது.
மக்களவைத் தேர்தலில் திமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர்கள் பட்டியல் நாளை காலை 10 மணிக்கு வெளியிடப்பட உள்ளது. சென்னை அண்ணா அறிவாலயத்தில் நடைபெறும் நிகழ்ச்சியில் வேட்பாளர்கள் அறிவிக்கப்பட உள்ளனர். மக்களவைத் தேர்தலில், வடசென்னை, தென்சென்னை, மத்திய சென்னை உள்பட தமிழகத்தில் 21 தொகுதிகளில் திமுக போட்டியிடுகிறது. தமிழகத்தில் ஏப்.19ஆம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது.
துணைநிலை ஆளுநர் பதவியை ராஜினாமா செய்த தமிழிசை செளந்தரராஜன், புதுச்சேரியில் இருந்து விடைபெற்றார். ஆளுநர் மாளிகையில் இருந்து புறப்பட்ட அவருக்கு, காவல்துறையினர் அணிவகுப்பு மரியாதை நடத்தி வழியனுப்பி வைத்தனர். இந்த நிகழ்ச்சியில், புதுச்சேரி தலைமைச் செயலாளர், டிஜிபி உள்ளிட்ட அரசுத் துறை அதிகாரிகள் பங்கேற்றனர். இறுதியாக, ஆளுநர் மாளிகையை நோக்கி கைக்கூப்பி வணங்கி தமிழிசை விடைபெற்றார்.
135 கோடி மக்களின் ஒரே நம்பிக்கையாக ராகுல் காந்தி திகழ்வதாக முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார். இது குறித்து X பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர், பாசிச மற்றும் சர்வாதிகார ஆட்சியை முடிவுக்கு கொண்டுவரக் கூடிய ஒரே தலைவர் ராகுல் தான் எனக் கூறியுள்ளார். மேலும், நாட்டின் ஒவ்வொரு மூலையிலும் நீதியை நிலைநாட்ட வேண்டும் என்ற அர்ப்பணிப்புடன் அவர் செயல்படுவதாகவும் சிதம்பரம் கூறியுள்ளார்.
ஒவ்வொரு நாளும் தூங்கச் செல்லும் முன்பு லேசான உடற்பயிற்சி செய்வது ஆழ்ந்த தூக்கத்தை கொடுக்கும் என்று ஆய்வில் தெரிய வந்துள்ளது. அதேபோல மிதமான சூட்டில் தண்ணீரையோ, பாலையோ அருந்திவிட்டு தூங்கச் செல்வது வயிற்றை இதமாக்கி தூக்கத்தை மேம்படுத்தும். டிஜிட்டல் சாதனங்களில் இருந்து விலகி இருத்தல், புத்தகம் படித்தல், மனதை சாந்தப் படுத்துதல் ஆகியவை ஆழ்ந்த தூக்கத்திற்கான காரணிகள்.
மக்களவைத் தேர்தலில் நாம் தமிழர் கட்சியின் சார்பில் போட்டியிடும் அனைத்து வேட்பாளர்களையும் சனிக்கிழமை ஒரே மேடையில் சீமான் அறிமுகம் செய்யவிருக்கிறார். தனித்துக் களம் காணும் நாம் தமிழர் கட்சியின் சார்பாக தமிழகம் மற்றும் புதுவையில் 40 வேட்பாளர்கள் தேர்தலில் போட்டியிடவுள்ளனர். அவர்களை அறிமுகம் செய்யும் பொதுக்கூட்டம் மார்ச் 23ஆம் தேதி மாலை 5 மணிக்கு சென்னை பல்லாவரத்தில் நடைபெறவுள்ளது.
அசோக் செல்வன், நிமிஷா ஆகியோர் நடிக்கும் வெப் சீரிஸூக்கு “கேங்க்ஸ் குருதி புனல்” என பெயரிடப்பட்டுள்ளது. ஹாரர் படமான போர் தொழில் மூலம் பிரபலமான அசோக் செல்வன், தற்போது அமேசான் பிரைமின் புதிய வெப் சீரிஸில் நடித்துள்ளார். அதில் சத்யராஜ், நாசர், ரித்திகா சிங், ஈஸ்வரி ராவ் ஆகியோரும் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். இரு குழுவினரிடையேயான மோதலை மையமாக கொண்டு சீரிஸ் எடுக்கப்பட்டுள்ளது.
தேர்தலில் போட்டியிட அனுமதிக்குமாறு, தேர்தல் ஆணையத்தில் தமிழ்நாடு அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் நலக் கூட்டமைப்பு கோரிக்கை விடுத்துள்ளது. ராஜஸ்தான் அரசு மருத்துவர் ஒருவர், நீதிமன்ற அனுமதியுடன் சட்டப்பேரவை தேர்தலில் போட்டியிட்டதை சுட்டிக்காட்டிய கூட்டமைப்பு, வெற்றி பெற்றால் பணியை ராஜினாமா செய்யலாம். தோல்வி அடைந்தால் மீண்டும் பணியில் சேரலாம் என்று தேர்தல் ஆணையம் அறிவிக்க வேண்டுமென வலியுறுத்தியுள்ளது.
Sorry, no posts matched your criteria.