India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
பாஜக-ஓபிஎஸ் தொகுதி பங்கீட்டில் இழுபறி ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தொகுதிகளை இறுதி செய்ய ஓபிஎஸ் கமலாலயம் வந்த நிலையில், பாஜக தலைவர்களுடன் நடத்திய பேச்சுவார்த்தையில் தொகுதி உடன்பாடு ஏற்படவில்லை. இதை தொடர்ந்து அங்கிருந்து புறப்பட்ட ஓபிஎஸ், பாஜகவுடன் மீண்டும் பேசுவோம் என கூறிச் சென்றார். ஓபிஎஸ் 2 தொகுதிகளை கேட்டதாகவும், ஆனால் பாஜக ஒரு தொகுதி மட்டுமே தர முன்வந்ததாகவும் கூறப்படுகிறது.
சென்னை- பெங்களூரு இடையேயான முதல் ஐபிஎல் போட்டி, நாளை மறுநாள் சென்னை சேப்பாக்கத்தில் நடைபெற உள்ளது. இதுவரை சேப்பாக்கத்தில் நடந்த ஐபிஎல் போட்டிகளில், CSK-7, RCB-1 போட்டிகளில் வென்றுள்ளன. 2008இல் இருந்து ஒரு போட்டியில் கூட CSK-வை சேப்பாக்கத்தில் வீழ்த்தாத RCB அணி, 16 வருட வரலாற்றை மாற்றுமா? அல்லது CSK வெற்றியை தொடருமா? என ரசிகர்கள் ஆவலுடன் உள்ளனர். உங்கள் கருத்து என்னவென்று கமெண்டில் சொல்லுங்க?
நாடு முழுவதும் கடந்த பிப்ரவரி மாதம் ரூ.18.2 லட்சம் கோடிக்கு யுபிஐ பரிவர்த்தனைகள் நடைபெற்றுள்ளன. ரொக்கமாக பணத்தை எடுத்து செல்ல விரும்பாதோர், யுபிஐ வசதிகளை பயன்படுத்தி வருகின்றனர். இந்நிலையில், பிப்ரவரி மாதத்தில் 122 கோடி பரிவர்த்தனைகளின் மூலம் ரூ.18.2 லட்சம் கோடி பண பரிமாற்றம் செய்யப்பட்டுள்ளது. நாள்தோறும் ரூ.40,000 கோடி முதல் ரூ.80,000 கோடி வரை பரிவர்த்தனை நடந்துள்ளது.
சர்வதேச கருத்தரங்குகளில் மதுபானம் விநியோகிக்கக் கூடாது என ஐகோர்ட் தலைமை நீதிபதி அமர்வு அதிரடியாக உத்தரவிட்டுள்ளது. பாமக வழக்கறிஞர் கே.பாலு தொடர்ந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம், மதுபானம் விநியோகிப்பது குறித்து தமிழக அரசு அதிகாரிகள் கண்காணிக்க வேண்டும் எனக் கூறியுள்ளது. மேலும், வழக்கு விசாரணை முடியும் வரை கூடுதல் கட்டணம் வசூலித்து அதற்கு அன்பளிப்பாக மதுபானம் வழங்கக் கூடாது என உத்தரவிட்டுள்ளது.
2024 ஐபிஎல் தொடர் மார்ச் 22ஆம் தேதி தொடங்க உள்ளதால், ஐபிஎல் ‘Fans Park’ என்ற பெயரில் நாடு முழுவதும் உள்ள முக்கிய நகரங்களில் பெரியத் திரையில் ஐபிஎல் போட்டிகளை இலவசமாக காண BCCI சிறப்பு ஏற்பாடு செய்துள்ளது. அதன்படி, மதுரை மாவட்டத்தில் மார்ச் 22 (CSK – RCB) மற்றும் 23 (KKR – SRH) ஆகிய தேதிகளிலும், கோவை மாவட்டத்தில் மார்ச் 30 (LSG – PBKS) மற்றும் 31 (GT – SRH) ஆகிய தேதிகளிலும் ஒளிபரப்ப உள்ளது.
பெங்களூரு குண்டு வெடிப்பு சம்பவத்தில் தமிழர்களை தொடர்புப்படுத்தி பேசிய மத்திய இணை அமைச்சர் ஷோபா மீது மதுரை சைபர் கிரைம் போலீசார் 4 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்துள்ளனர். அமைச்சரின் பேச்சுக்கு தமிழக அரசியல் கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்து இருந்தன. இதற்கிடையே, அமைச்சர் ஷோபா மீது நடவடிக்கை எடுக்ககோரி திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, தேர்தல் ஆணையத்தில் புகார் அளித்துள்ளார்.
வீட்டுக்கடனுக்கான வட்டியை பொதுத்துறை வங்கியான பேங்க் ஆப் இந்தியா 15 புள்ளிகளை இந்த மாத இறுதிவரை குறைத்துள்ளது. அந்த வங்கி இதுவரை வீட்டுக்கடனுக்கு 8.45% வட்டி வசூலித்து வந்தது. அதனை 8.3%ஆக குறைத்துள்ளது. மேலும், சேவை கட்டணத்தையும் ரத்து செய்துள்ளது. முன்னணி வங்கிகளான எஸ்பிஐ, எச்டிஎப்சி வீட்டுக்கடனுக்கு 8.4% வட்டி வசூலிக்கின்றன. அதனுடன் ஒப்பிடுகையில் இது 10 புள்ளிகள் குறைவாகும்.
பாஜக-தமாகா இடையே தொகுதி பங்கீட்டில் இழுபறி ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தொகுதிகளை இறுதி செய்ய ஜி.கே.வாசன், பாஜக அலுவலகம் சென்று அண்ணாமலை உள்ளிட்டவர்களோடு பேச்சுவார்த்தை நடத்தினார். அதில் உடன்பாடு ஏற்படாத நிலையில், மீண்டும் பேசுவோம் எனக் கூறிவிட்டு வாசன் அங்கிருந்து சென்றுள்ளார். தமாகா 3 தொகுதிகளை எதிர்பார்ப்பதாகவும், பாஜக 2 தொகுதிக்கு மேல் தர முடியாது என கூறுவதால் இழுபறி ஏற்பட்டுள்ளது.
2024 ஐபிஎல் தொடரின் தொடக்க விழாவில், இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மானின் கலை நிகழ்ச்சி இடம்பெற உள்ளது. சென்னை சேப்பாக்கத்தில் நாளை மறுநாள் (மார்ச் 22) நடைபெறும் முதல் போட்டியில், சென்னை- பெங்களூரு அணிகள் மோதவுள்ளன. போட்டிக்கு முன்பு நடத்தப்படும் கலை நிகழ்ச்சியில், பாலிவுட் நடிகர்களான அக்ஷய் குமார், சோனு நிகம், டைகர் ஷெராப் ஆகியோர் பங்கேற்க உள்ளனர். இதனால், ரசிகர்கள் பெரும் எதிர்பார்ப்பில் உள்ளனர்.
இளையராஜா மீது எனக்கு பொறாமை இருந்ததே கிடையாது என நடிகர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார். இளையராஜாவின் பயோபிக் அறிமுக நிகழ்ச்சியில் பேசிய அவர், ” எனக்கு இசை பெரிதாக வராது. அதனால், அவர் மேல் என்றும் பொறாமை இல்லை. எனக்கு வராதது எல்லாம் அவருக்கு வருகிறதே என்று ஆச்சரியமாகத்தான் பார்ப்பேன். அவருக்கு வரும் புகழையும் பல நேரம் நான் எனதாக்கி கொண்டு வருகிறேன். அவர் எங்கும் நிறைந்திருப்பார்” என்றார்.
Sorry, no posts matched your criteria.