India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
நடப்பு ஐபிஎல் தொடரில் கொல்கத்தா அணிக்காக சிறப்பாக விளையாடுவேன் என்று ஆல்ரவுண்டர் ரமன்தீப் சிங் கூறியுள்ளார். தொடர்ந்து பேசிய அவர், “டி20 கிரிக்கெட்டில் பேட்டிங் & பவுலிங் திறன் மூலம் ரஸல் ஏற்படுத்தி வரும் தாக்கத்தை நீண்ட காலமாக பார்த்து வருகிறேன். அவரைப் போல பந்து வீசி அணிக்கு தேவையான வெற்றியை பெற்றுத் தருவேன். இந்திய அணிக்காக விளையாட வேண்டுமென்ற கனவை நிஜமாக்க வேண்டும்” என்றார்.
பாஜக உடன் கூட்டணியை முறித்துக்கொண்ட அதிமுக, மக்களவைத் தேர்தலுக்கான கூட்டணியை இறுதி செய்து நேற்று முதல்கட்ட வேட்பாளர் பட்டியலை வெளியிட்டிருந்தது. இதனால் பாஜகவுடன் கூட்டணி அமைய வாய்ப்பே இல்லை என்பது உறுதியானது. இந்நிலையில், காலை முதல் 4 மணி நேரமாக அதிமுக முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் வீட்டில் அமலாக்கத்துறை சோதனை நடந்து வருகிறது. 2022ல் பதிவு செய்யப்பட்ட வழக்கின் அடிப்படையில் இச்சோதனை நடக்கிறது.
அமலாக்கத்துறை விசாரணை குறித்து அதிமுக பொதுச் செயலாளர் இபிஎஸ் முதல் முறையாக மனந்திறந்து பேசியுள்ளார். அதிமுக வேட்பாளர் பட்டியலை வெளியிட்டு பேசிய அவர், “அதிமுக நிர்வாகிகளுக்கு எதிரான அனைத்து வழக்குகளையும் சட்டப்படி எதிர்கொள்வோம். எம்.ஜி.ஆர், ஜெயலலிதா காலத்தில் இருந்தே நெருக்கடிகளை எதிர்கொண்டு வெற்றி பெற்ற இயக்கம் அதிமுக. அதிமுகவை பலவீனமான கட்சி என்று கருத வேண்டாம்” என்றார்.
கொல்கத்தா அணியின் தலைமை பயிற்சியாளராக உள்ள கவுதம் கம்பீரின் போட்டி குணத்தை தான் விரும்புவதாக ரவிச்சந்திரன் அஷ்வின் கூறியுள்ளார். யூடியூப் சேனலுக்கு அளித்த பேட்டியில், “எதிரில் யார் இருந்தாலும் கம்பீர் கவலைப்பட மாட்டார். மனதில் காயத்தை ஏற்படுத்தும் வகையிலான அவரது அணுகுமுறை எனக்கும் பிடிக்காது. அதேநேரத்தில், அவர் தனது அணியின் வீரர்களை எப்போதுமே உற்சாக நிலையில் வைத்திருப்பார்” எனக் கூறினார்.
அதிமுக பொதுச்செயலாளர் இபிஎஸ் இன்று வெளியிட்ட மக்களவைத் தேர்தல் வேட்பாளர் 2ஆம் கட்ட பட்டியலில் 18 நபர்களின் பெயர்கள் இடம்பெற்றுள்ளது. இந்த 18 பேரும் புது முக வேட்பாளர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. 3 மருத்துவர்கள், 2 பொறியியலாளர்கள், ஒரு வழக்குரைஞர், ஒரு முனைவர், ஒரு தொழில்முனைவோர், ஒன்றுக்கு மேற்பட்ட பட்டங்களை பெற்ற 6 பேர், 2 ஒன்றியச் செயலாளர்கள் ஆகிய 18 பேர் இப்பட்டியலில் உள்ளனர்.
தமிழகம், புதுச்சேரியில் மொத்தம் உள்ள 40 தொகுதிகளில் 21 தொகுதிகளில் திமுகவும், 33 தொகுதிகளில் அதிமுகவும் நேரடியாக போட்டியிடுகின்றன. அதன்படி, வடசென்னை, தென்சென்னை, ஸ்ரீபெரும்புதூர், காஞ்சிபுரம் (தனி), அரக்கோணம், வேலூர், தருமபுரி, திருவண்ணாமலை, ஆரணி, கள்ளக்குறிச்சி, சேலம், ஈரோடு, நீலகிரி (தனி), கோயம்புத்தூர், பொள்ளாச்சி, பெரம்பலூர், தேனி, தூத்துக்குடி தொகுதிகளில் திமுக, அதிமுக நேரடியாக மோதுகின்றன.
காந்தாரா: சாப்டர் 1 படம் குறித்து புது அப்பேட் வெளி வந்துள்ளது. காந்தாரா படம், ரூ.16 கோடி பட்ஜெட்டில் தயாராகி ரூ.400 கோடியை வசூலித்தது. இதையடுத்து அந்தப் படத்தின் அடுத்த பாகமாக காந்தாரா: சாப்டர் 1 எடுக்கப்படுகிறது. அதில் நாயகியாக, தமிழில் விஜய் சேதுபதி மற்றும் சிவகார்த்திகேயனுடன் 2 புதிய படங்களில் நடிக்கும் ருக்மணி வசந்த் நடிப்பதாக புது அப்டேட் வெளியாகியுள்ளது.
பாஜக கூட்டணியில் பாமகவுக்கு 10, அமமுகவுக்கு 2 தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. ஐஜேகே, புதிய நீதிக்கட்சி, ஜான் பாண்டியன், தேவநாதன் கட்சிகளுக்கு தலா ஒரு தொகுதி ஒதுக்கப்பட்டுள்ளது. அதன்படி, இதுவரை கூட்டணிக் கட்சிகளுக்கு 16 தொகுதிகளை பாஜக ஒதுக்கியுள்ளது. இன்னும் தமாகா, ஓபிஎஸ் அணி மீதமுள்ளது. அவர்களுக்கு தலா 2 தொகுதிகள் ஒதுக்கப்பட்டாலும், பாஜக 20 தொகுதிகளில் நேரடியாக போட்டியிட வாய்ப்புள்ளது.
ஜெயலலிதாவை எதிர்த்து போட்டியிட்ட சிம்லா முத்துசோழன், அதிமுக வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார். 2ம் கட்ட அதிமுக வேட்பாளர் பட்டியலில் நெல்லை வேட்பாளராக சிம்லா முத்துசோழன் அறிவிக்கப்பட்டுள்ளார். இவர், திமுக முன்னாள் அமைச்சர் சற்குண பாண்டியனின் மருமகள் ஆவார். 2016ஆம் ஆண்டு ஆர்.கே.நகர். இடைத்தேர்தலில் ஜெ.வை எதிர்த்து போட்டியிட்ட முத்துசோழன், அண்மையில் அதிமுகவில் சேர்ந்தார்.
மக்களவைத் தேர்தலுக்கான அதிமுக வேட்பாளர் பட்டியலில் 80%க்கு மேல் புதியவர்கள் இடம் பெற்றுள்ளனர். பொதுவாக எம்.ஜி.ஆர், ஜெயலலிதா காலத்தில் இருந்தே அதிமுக புது முகங்களை களமிறக்குவது உண்டு என்றாலும், இம்முறை இதற்கு வேறு காரணம் இருப்பதாகக் கூறப்படுகிறது. கூட்டணி சரியாக அமையாதது, தேர்தல் செலவு, பாஜகவின் நெருக்கடி உள்ளிட்ட காரணங்களால் சீனியர்கள் பலரும் விலகியே உள்ளதாக அரசியல் வட்டாரங்கள் கூறுகின்றன.
Sorry, no posts matched your criteria.