news

News March 22, 2024

கெஜ்ரிவாலுக்கு மருத்துவப் பரிசோதனை

image

மதுபானக் கொள்கை முறைகேடு வழக்கில் டெல்லி முதல்வர் கெஜ்ரிவாலை அமலாக்கத்துறை கைது செய்துள்ளது. டெல்லியில் உள்ள அமலாக்கத்துறை தலைமை அலுவலகத்திற்கு அழைத்து செல்லப்பட்ட கெஜ்ரிவாலுக்கு, டாக்டர்கள் மருத்துவப் பரிசோதனை மேற்கொண்டனர். இதனிடையே, அமலாக்கத்துறையால் சட்டவிரோதமாக கெஜ்ரிவால் கைது செய்யப்பட்டதை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் இன்று முறையிட இருப்பதாக அம்மாநில அமைச்சர் அதிஷி தெரிவித்துள்ளார்.

News March 22, 2024

பிறந்தநாள் வாழ்த்து போட்டோ அனுப்புங்க

image

இன்று (மார்ச் 22) பிறந்தநாள் காணும் அனைவருக்கும் வாழ்த்துகள்! பிறந்தநாளுக்கு வாழ்த்து சொல்ல விரும்புபவர்களின் போட்டோவை Email -way2tamilusers@way2news.com-க்கு அனுப்புங்க. Note: பிறந்தநாளுக்கு முந்தைய நாள் இரவு 10 மணிக்குள் வாழ்த்துகளை அனுப்பவும். பிறந்தநாள் கொண்டாடுபவர்களின் தெளிவான புகைப்படங்களை அனுப்பி, உங்கள் அன்புக்குரியவர்களை வாழ்த்துங்கள்.

News March 22, 2024

சர்வதேச டேபிள் டென்னிஸ் தொடரில் சத்யன் சாம்பியன்

image

சர்வதேச டேபிள் டென்னிஸ் தொடரில் ஆடவர் ஒற்றையர் பிரிவில் இந்தியாவின் சத்யன் ஞானசேகரன் சாம்பியன் பட்டம் வென்றார். லெபனானில் நடைபெற்ற இறுதிப்போட்டியில் சக இந்திய வீரரான மானவ் தாக்கரை எதிர்கொண்ட சத்யன், 3-1 (6-11, 11-7, 11-7, 11-4) என்ற புள்ளிக்கணக்கில் வெற்றி பெற்றார். ஒரே நாளில், ஆடவர் ஒற்றையர், இரட்டையர் மற்றும் கலப்பு இரட்டையர் இறுதிப்போட்டியில் விளையாடிய மானவ் தாக்கர் மூன்றிலும் தோல்வியடைந்தார்.

News March 22, 2024

இரண்டு மாதத்தில் 2 மாநில முதல்வர்கள் கைது

image

இந்திய அரசியல் வரலாற்றில் முதல்முறையாக இரண்டு மாதத்தில், 2 மாநில முதல்வர்கள் அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டுள்ளனர். நில மோசடி, சட்டவிரோத பணப்பரிமாற்ற குற்றச்சாட்டில் கடந்த ஜனவரி 31ஆம் தேதி ஜார்க்கண்ட் முதல்வர் ஹேமந்த் சோரனை அமலாக்கத்துறை கைது செய்திருந்தது. இந்நிலையில், மதுபானக் கொள்கை முறைகேடு தொடர்பான வழக்கில், நேற்று டெல்லி முதல்வர் கெஜ்ரிவாலை அமலாக்கத்துறை அதிரடியாக கைது செய்துள்ளது.

News March 22, 2024

3ஆவது கட்ட காங்கிரஸ் வேட்பாளர் பட்டியல் வெளியீடு

image

மக்களவைத் தேர்தலில் போட்டியிடும் 57 பேர் கொண்ட 3ஆவது கட்ட வேட்பாளர்கள் பட்டியலை காங்கிரஸ் வெளியிட்டுள்ளது. இதில் தமிழகத்தில் போட்டியிடும் வேட்பாளர்கள் இடம்பெறவில்லை. புதுச்சேரியில் வைத்தியலிங்கம் வேட்பாளராக களமிறங்குகிறார். மே.வங்கத்தின் பெர்ஹாம்பூரில் மீண்டும் ஆதிர்ரஞ்சன் சவுத்ரி வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார். மேலும் கர்நாடகா, தெலங்கானா, ராஜஸ்தானில் போட்டியிடும் வேட்பாளர்கள் இடம்பெற்றுள்ளனர்.

News March 22, 2024

இன்றைய தலைப்புச் செய்திகள்

image

➤மதுபானக் கொள்கை முறைகேடு வழக்கில் டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் அமலாக்கத் துறையால் கைது ➤ கெஜ்ரிவால் கைதுக்கு அரசியல் தலைவர்கள் கண்டனம் ➤ தமிழகத்தில் +2 பொதுத்தேர்வுகள் இன்றுடன் நிறைவடைகிறது. ➤ திருச்சியில் இன்று பிரச்சாரத்தை முதல்வர் ஸ்டாலின் தொடங்குகிறார். ➤ ஐபிஎல் 17ஆவது சீசன் தொடர் இன்று தொடங்குகிறது. சேப்பாக்கத்தில் நடைபெறும் முதல் போட்டியில், சென்னை- பெங்களூரு அணிகள் மோதுகின்றன.

News March 22, 2024

பயந்த சர்வாதிகாரி ஜனநாயகத்தை கொல்ல முயற்சி

image

கெஜ்ரிவால் கைதுக்கு INDIA உரிய பதிலடி கொடுக்குமென காங்கிரஸ் எம்.பி ராகுல் தெரிவித்துள்ளார். டெல்லி முதல்வர் கெஜ்ரிவால் கைதுக்கு கண்டனம் தெரிவித்து அவர் தனது தனது X பக்கத்தில், ‘ஒரு பயந்த சர்வாதிகாரி ஜனநாயகத்தை கொல்ல விரும்புகிறார். ஊடகங்களை கைப்பற்றி, கட்சிகளை உடைத்து, நிறுவனங்களிடம் பணம் பறித்து, எதிர்க்கட்சியின் கணக்கை முடக்குவதோடு, முதல்வர்களை கைது செய்வது வாடிக்கையாகி விட்டார்’ என்றார்.

News March 22, 2024

பாஜகவுக்கு நன்கொடையளித்த டாப் நிறுவனங்கள்!

image

எஸ்.பி.ஐ சமர்ப்பித்த தேர்தல் பத்திரங்கள் தொடர்பான அனைத்து விவரங்களையும் தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது. அதன்படி, பாஜகவுக்கு அதிக நன்கொடையளித்த நிறுவனங்களில், ஐதராபாத்தைச் சேர்ந்த மேகா இன்ஜினியரிங் (ரூ.584 கோடி) முதலிடத்தில் உள்ளது. இதனை தொடர்ந்து ரிலையன்ஸ் உடன் தொடர்புடைய 2. Qwik Supply -ரூ.395 கோடி, 3.வேதாந்தா குழுமம் – ரூ.226 கோடி, 4. பார்தி ஏர்டெல் – ரூ.197 கோடியை நன்கொடையாக அளித்துள்ளன.

News March 22, 2024

ஈஷா யோகா மையத்தில் 6 பேர் மாயம்!

image

ஈஷா யோகா மையத்தில் கடந்த 2016 முதல் பணியாற்றிய 6 பேர் இதுவரை காணாமல் போயுள்ளனர் என சென்னை உயர்நீதிமன்றத்தில் காவல்துறை தெரிவித்துள்ளது. தென்காசியை சேர்ந்த திருமலை என்பவர் ஈஷா யோகா மையத்தில் பணியாற்றிய தனது சகோதரர் காணாமல் போனதாக புகார் தெரிவித்திருந்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள், வழக்கை துரிதப்படுத்தி விசாரித்து ஏப்ரல் 8இல் அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டனர்.

News March 21, 2024

வாட்ஸ்அப்பில் வருகிறது புது அப்டேட்!

image

காது கேளா மாற்றுத்திறனாளி பயனர்களுக்காக அசத்தலான அப்டேட் ஒன்றை வாட்ஸ்அப் விரைவில் அறிமுகப்படுத்த திட்டமிட்டுள்ளது. பயனாளர்களுக்கு பல்வேறு சிறப்பம்சங்களை வாட்ஸ்அப் அளித்து வருகிறது. அந்த வகையில், குரல் செய்தியை புரிந்து கொள்ள முடியாதவர்கள் & காது கேளாதவர்களுக்கு குரல் குறிப்புகளை உரையாக மாற்றி தருவதற்கான பணிகள் நடந்து வருவதாகவும், விரைவில் இது அறிமுகமாகும் எனவும் தகவல் வெளியாகி உள்ளது.

error: Content is protected !!