news

News March 23, 2024

IPL டிக்கெட்டை கள்ளச் சந்தையில் விற்ற 5 பேர் கைது

image

ஐபிஎல் டிக்கெட்டை கள்ளச் சந்தையில் விற்றதாக 5 பேர் கைது செய்யப்பட்டனர். CSK-RCB இடையிலான போட்டி சென்னையில் நேற்று நடைபெற்றது. அந்தப் போட்டிக்கான டிக்கெட்டுகளை கள்ளச் சந்தையில் விற்றதாக வினோத்குமார், அசோக்குமார், இம்மானுவேல் உள்ளிட்ட 5 பேரை திருவல்லிக்கேணி போலீசார் அதிரடியாக கைது செய்தனர். மேலும், அவர்களிடம் இருந்து 8 டிக்கெட்டுகள் மற்றும் ₹31500 பணத்தை போலீசார் கைப்பற்றி விசாரித்து வருகின்றனர்.

News March 23, 2024

ஐபிஎல்: கொல்கத்தா அணி பேட்டிங்

image

ஐபிஎல்லில் இன்று நடைபெற உள்ள மூன்றாவது போட்டியில் கொல்கத்தா – ஹைதராபாத் அணிகள் மோதுகின்றன. இப்போட்டியில் டாஸ் வென்ற SRH கேப்டன் கம்மின்ஸ் முதலில் பவுலிங் தேர்வு செய்துள்ளார். இதையடுத்து KKR அணி இன்னும் சற்று நேரத்தில் பேட்டிங் செய்ய உள்ளது. சுனில் நரேன், ரசல் இன்றைய போட்டியில் களமிறங்க உள்ளனர். இந்த போட்டியில் எந்த அணி வெற்றிபெறும்? என கமெண்ட் பண்ணுங்க.

News March 23, 2024

42 ஆண்டுகளுக்குப் பின் சேர்ந்து நடிக்கும் ரஜினி – கமல்?

image

இசைஞானி இளையராஜாவின் வாழ்க்கை வரலாற்றுப் படத்தில் தனுஷ் நடிப்பதாக சில நாட்களுக்கு முன் அறிவிக்கப்பட்டது. இந்நிலையில், இப்படத்தில் ரஜினியும், கமலும் முக்கிய வேடத்தில் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த தகவல் உறுதியாகும் பட்சத்தில் அவர்கள் இருவரும் 42 ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் இணையும் படம் என்ற பெருமையைப் பெறும். இருவரும் இணைந்து நடித்தால் எப்படி இருக்கும்? என கமெண்ட் பண்ணுங்க.

News March 23, 2024

ஐபிஎல் 2024இல் முதல் 50

image

டெல்லி அணிக்கு எதிரான ஐபிஎல் போட்டியில் சிறப்பாக ஆடிவரும் பஞ்சாப் அணி வீரர் சாம் கரண் அரைசதம் அடித்துள்ளார். இது இந்த சீசனில் அடிக்கப்படும் முதல் அரைசதமாகும். அவருடன் ஜோடி சேர்ந்து ஆடிவரும் லிவிங்ஸ்டன் 14* ரன்கள் எடுத்துள்ளார். தற்போது பஞ்சாப் அணி 16 ஓவர்கள் முடிவில் 136/4 ரன்கள் எடுத்துள்ளது. பஞ்சாப் வெற்றிபெற இன்னும் 39 ரன்கள் தேவை என்னும் நிலையில் கைவசம் 24 பந்துகள் மட்டுமே மீதம் உள்ளது.

News March 23, 2024

பலி எண்ணிக்கை 150ஆக உயர்வு

image

ரஷ்ய தலைநகர் மாஸ்கோவில் நிகழ்ந்த துப்பாக்கிச் சூட்டில் பலி எண்ணிக்கை 150ஆக உயர்ந்துள்ளது. பிக்னிக் என்ற இசைக் குழுவினர் நடத்திய இசைக் கச்சேரியில் நூற்றுக்கணக்கான மக்கள் பங்கேற்றிருந்தனர். அப்போது, அங்கு புகுந்த மர்ம நபர்கள் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 200க்கும் அதிகமானோர் படுகாயமடைந்தனர். சம்பவம் தொடர்பாக இதுவரை 11 பேர் கைதாகியுள்ள நிலையில், பலி எண்ணிக்கை மேலும் உயரும் என அஞ்சப்படுகிறது.

News March 23, 2024

தொண்டனின் தலையை கூட அடமானம் வைப்பார்கள்

image

தொண்டனின் தலையை அடமானம் வைக்கவும் பாமக தலைவர்கள் தயங்க மாட்டார்கள் என அமைச்சர் எம்ஆர்கே பன்னீர் செல்வம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக பேசிய அவர், “தேர்தலுக்கு தேர்தல் அணி மாறுவது பாமகவின் வழக்கமாக உள்ளது. முன்னர் அதிமுகவை ஆதரித்தார்கள், இப்போது பாஜகவை ஆதரிப்பதாக கூறுகிறார்கள். அரசியல் லாபம் கிடைத்தால் எதுவும் செய்வார்கள். இவர்களின் இந்த செயலை மக்கள் முன் அம்பலப்படுத்த வேண்டும்” என்றார்.

News March 23, 2024

திமுகவை அழிக்க இதுவரை யாரும் பிறக்கவில்லை

image

திமுகவை அழிக்க இதுவரை எவரும் பிறக்கவில்லை என அமைச்சர் துரைமுருகன் சூளுரைத்துள்ளார். வேலூரில் அவரது மகனை ஆதரித்து பேசிய அவர், ” திமுகவை அழிப்பேன் என்று பலரும் சொல்லிவிட்டார்கள். ஆனால், அவர்களால் திமுகவை தொட்டுக்கூட பார்க்க முடியவில்லை. இனிமேலும் பார்க்க முடியாது. என் உடல் பொருள் ஆவி அனைத்தையும் கட்சிக்காக தந்துள்ளேன். திமுக நெருப்பாற்றில் நீந்திய கட்சி, எப்போதும் யாராலும் அழிக்க முடியாது” என்றார்.

News March 23, 2024

எமி ஜாக்சனுக்கு நிச்சயதார்த்தம்

image

தனது நீண்ட நாள் காதலனுடன் நடிகை எமி ஜாக்சனுக்கு நிச்சயதார்த்தம் முடிந்தது. மதராசப்பட்டினம் படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமான இவர், பிரபல ஹாலிவுட் நடிகர் எட்வர்ட் பீட்டர் வெஸ்ட் விக் என்பவரை காதலித்து வந்தார். இந்த நிலையில், சமீபத்தில் இருவரும் குடும்பத்தினர், நண்பர்கள் முன்னிலையில் நிச்சயதார்த்தம் செய்து கொண்டனர். விரைவில் திருமண தேதி அறிவிக்கப்படும் என குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.

News March 23, 2024

டெல்லி உயர்நீதிமன்றத்தில் கெஜ்ரிவால் தரப்பில் மனு

image

டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டதை எதிர்த்து டெல்லி உயர்நீதிமன்றத்தில் ஆம் ஆத்மி மனுத்தாக்கல் செய்துள்ளது. இந்த கைது நடவடிக்கை சட்ட விரோதம் என அறிவிக்க கோரியும், இந்த வழக்கை உடனடியாக விசாரிக்க கோரியும் ஆம் ஆத்மி கோரிக்கை வைத்துள்ளது. முன்னதாக, கெஜ்ரிவாலை வரும் 28ஆம் தேதி வரை அமலாக்கத்துறை காவலில் வைத்து விசாரிக்க ரோஸ் அவென்யூ நீதிமன்றம் அனுமதி அளித்தது.

News March 23, 2024

நெல்லை அதிமுக வேட்பாளர் ஜான்சி ராணி

image

நெல்லை தொகுதியில் சிம்லா முத்துசோழனுக்கு பதிலாக ஜான்சி ராணி போட்டியிடுவார் என எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார். ஏப்.19இல் நடைபெறும் மக்களவைத் தேர்தலில் தமிழகத்தில் 32 தொகுதிகளில் அதிமுக போட்டியிடுகிறது. இந்த நிலையில், 2016 சட்டப்பேரவை தேர்தலில் ஜெயலலிதாவை எதிர்த்து போட்டியிட்டவருக்கு சீட் வழங்குவதா என அதிமுகவில் எதிர்ப்பு எழுந்ததால் அவர் மாற்றப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

error: Content is protected !!