News April 10, 2024

கச்சத்தீவில் யாராவது வாழ்ந்தார்களா?

image

இலங்கைக்கு கச்சத்தீவை தாரை வார்க்க காங்கிரஸும், திமுகவுமே காரணமென வேலூர் பிரசாரக் கூட்டத்தில் பிரதமர் மோடி குற்றம்சாட்டியிருந்தார். இது குறித்த செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு காங்கிரஸ் மூத்த தலைவர் திக்விஜய் சிங், “கச்சத்தீவில் யாராவது வாழ்ந்தார்களா என கேட்க விரும்புகிறேன்” என கூறியிருந்தார். இந்தப் பேச்சு, தேசம் முக்கியமில்லையென்ற காங்கிரஸின் மனநிலையை வெளிப்படுத்துவதாக பாஜக விமர்சித்துள்ளது.

Similar News

News November 7, 2025

கல்யாண வேலையில் பிஸியான ரஷ்மிகா

image

விஜய் தேவரகொண்டா – ரஷ்மிகா மந்தனா 2026-ல் திருமணம் செய்துகொள்ளப் போவதாக கூறப்படுகிறது. ஜெய்ப்பூரில் இருவரும் திருமணம் செய்ய முடிவெடித்துள்ளார்களாம். இதனால், சரியான இடத்தை தேர்வு செய்ய, ரஷ்மிகா 3 நாள் பயணமாக ஜெய்ப்பூர் சென்றுள்ளாராம். அங்குள்ள அனைத்து பிரபல மண்டபங்கள், ரிசார்ட்டுகளை ஆய்வு செய்து வருகிறாராம். விரைவில் இடம் இறுதிசெய்யப்படும் என சினிமா வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

News November 7, 2025

டிஜிபி நியமன விவகாரம்: TN அரசுக்கு SC நோட்டீஸ்

image

தமிழகத்தில் டிஜிபியை நியமனம் செய்யாமல், பொறுப்பு டிஜிபியை நியமித்ததை எதிர்த்து, வழக்கறிஞர் ஹென்றி திபேன் வழக்கு தொடர்ந்தார். இதில் உடனடியாக டிஜிபியை நியமிக்க வேண்டும் என SC உத்தரவிட்டிருந்தது. ஆனால் அதனை தமிழக அரசு நிறைவேற்றாததால், கோர்ட் அவமதிப்பு வழக்கு ஒன்றை கிஷோர் கிருஷ்ணசாமி என்பவர் தொடர்ந்தார். இதை விசாரித்த SC 3 வாரங்களில் தமிழக அரசு பதில் அளிக்க வேண்டும் என நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

News November 7, 2025

டெல்லியில் ஒரு குத்து.. பிஹாரில் ஒரு குத்து: ராகுல்

image

பாஜக தலைவர்கள் சிலர் டெல்லி, பிஹார் என 2 மாநிலங்களில் வாக்களித்துள்ளதாக ராகுல் காந்தி குற்றஞ்சாட்டியுள்ளார். ம.பி., சத்தீஸ்கர், ஹரியானாவில் வாக்கு திருட்டில் ஈடுபட்டவர்கள், தற்போது பிஹாரிலும் தொடர்வதாகவும் அவர் சாடியுள்ளார். முன்னதாக, பாஜக MP ராகேஷ் சின்ஹா, டெல்லி பாஜக நிர்வாகி சந்தோஷ் ஓஜா கடந்த பிப்.,-ல் டெல்லியில் வாக்களித்துவிட்டு, தற்போது பிஹாரில் வாக்களித்துள்ளதாக ஆம் ஆத்மி குற்றஞ்சாட்டியது.

error: Content is protected !!