India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
குமரி, கோவை உள்ளிட்ட 11 மாவட்டங்களில் ராம நவமி யாத்திரை நடத்த ஸ்ரீ ஆஞ்சநேயம் அறக்கட்டளை திட்டமிட்டிருந்தது. தேர்தல் பாதுகாப்பை காரணம் காட்டி போலீசார் அனுமதி மறுத்த நிலையில் அந்த அறக்கட்டளை நீதிமன்றத்தை நாடியது. மனுவை விசாரித்த ஐகோர்ட், யாத்திரைக்கு தடை சரிதான் என்று தீர்ப்பளித்தது. குமரியில் மட்டும் அனுமதிக்கலாமா என்று ஆலோசிக்க காவல்துறைக்கு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கச்சத்தீவு விவகாரத்தில் திமுக செய்ததை மக்களுக்கு புரிய வைக்க வேண்டும் என வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் கூறியுள்ளார். ஆரம்பம் முதலே திமுக இந்தப் பிரச்னையில் இருந்ததை வெளிப்படுத்தியதாக குறிப்பிட்ட அவர், அது தொடர்பான ரகசியப் பேச்சுவார்த்தையில் உடன்பாடு எட்டப்பட்டதாக குற்றம்சாட்டினார். மேலும், அங்கு என்ன நடந்தது என்பதை அப்போதைய திமுக முதல்வரும் ஒப்புக் கொண்டதாக ஜெய்சங்கர் கூறியுள்ளார்.
சன் டிவியில் ஒளிபரப்பாகும் மிஸ்டர் மனைவி சீரியலில் நடிப்பதில் இருந்து விலகுவதாக நடிகை ஷபானா அறிவித்துள்ளார். திங்கள்-சனிக்கிழமை வரை இரவு 8.30 மணிக்கு ஒளிபரப்பாகும் இந்தத் தொடருக்கு ரசிகர்கள் ஏராளம். குறிப்பாக தொடரின் நாயகியான அஞ்சலிக்கு (ஷபானா) ரசிகர் பட்டாளம் அதிகம். இந்த நிலையில், அவர் இந்த தொடரில் இனிமேல் நடிக்க மாட்டேன் எனக் கூறியுள்ளது அவரது ரசிகர்களை அதிர்ச்சி அடையச் செய்துள்ளது.
ஊக்கமருந்து விவகாரத்தில் தமிழகத்தைச் சேர்ந்த தடகள வீரர் லக்ஷ்மணுக்கு 2 ஆண்டு போட்டிகளில் பங்கேற்க தடை விதிக்கப்பட்டுள்ளது. இதே போல, தடகள வீராங்கனை ஹிமானி சாண்டலுக்கு 4 ஆண்டு தடை விதித்து தேசிய ஊக்கமருந்து தடுப்பு ஆணையம் உத்தரவிட்டுள்ளது. மேலும், ஊக்கமருந்து பரிசோதனையில் தோல்வியை தழுவிய முகமது நூர் ஹசன், ஹேம்ராஜ் குர்ஜார், அஞ்சலி குமாரி ஆகியோரும் தற்காலிக இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
சைனிக் பள்ளிகள் நிர்வாகத்தில் அரசியல் குறுக்கீட்டை தடுக்க வேண்டும் என ஜனாதிபதி திரெளபதி முர்முவுக்கு காங்கிரஸ் தலைவர் கார்கே கடிதம் எழுதியுள்ளார். ஏற்கெனவே 33 சைனிக் பள்ளிகள் உள்ள நிலையில், தனியார் பங்களிப்புடன் 40 புதிய சைனிக் பள்ளிகளை திறக்க மத்திய அரசு ஒப்பந்தம் செய்துள்ளது. இந்த விஷயத்தை சுட்டிக்காட்டிய அவர், தேச நலன் கருதி தனியார்மயமாக்கல் கொள்கையை திரும்பப் பெறுமாறு வலியுறுத்தியுள்ளார்.
திருநெல்வேலி மக்களவைத் தொகுதியில் தேர்தலை நிறுத்தக் கோரி உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் மனு அளிக்கப்பட்டுள்ளது. அத்தொகுதியின் பாஜக வேட்பாளர் ₹1500 கோடி மதிப்பிலான சொத்துகளை வேட்புமனுவில் காட்டவில்லை என்று மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் நெல்லை தொகுதியில் தேர்தலை நிறுத்திவைக்க வேண்டும் என்று வழக்கறிஞர் மகாராஜா மனு அளித்துள்ளார். இந்த மனு விரைவில் விசாரணைக்கு வருகிறது.
ஐபிஎல் தொடரின் 24ஆவது லீக் போட்டியில் குஜராத் அணிக்கு 197 ரன்களை இலக்காக நிர்ணயித்தது ராஜஸ்தான் அணி. ஜெய்ப்பூர் மைதானத்தில் நடைபெறும் போட்டியில், டாஸ் வென்ற GT பந்துவீச்சை தேர்வு செய்ததால், RR அணி முதலில் களமிறங்கியது. ஜெய்ஸ்வால் 24, பட்லர் 8, சாம்சன் 68, பராக் 76, ஹெட்மயர் 13 ரன்கள் எடுத்தனர். இதனால் RR அணி 196/3 ரன்களை குவித்தது. GT தரப்பில் உமேஷ், ரஷித், மோஹித் தலா ஒரு விக்கெட் வீழ்த்தினர்.
விஜய், த்ரிஷா, பிரகாஷ் ராஜ் நடிப்பில் வெளியான கில்லி திரைப்படம், ஏப்ரல் 20ஆம் தேதி ரீ-ரிலீஸ் செய்யப்படுகிறது. 2004 ஏப்.17ஆம் தேதி வெளியான இந்தப் படம் பட்டிதொட்டியெங்கும் பட்டையை கிளப்பியது. குறிப்பாக, முத்துப்பாண்டி கதாபாத்திரத்தின் ‘செல்லம்’ வசனம் அனைத்து தரப்பு ரசிகர்களையும் கவர்ந்தது. இந்த நிலையில், படம் ரிலீஸாகி 20 ஆண்டுகள் நிறைவடைவதை ஒட்டி தமிழகம் முழுவதும் தற்போது ரீ-ரிலீஸ் செய்யப்படுகிறது.
நடைபெறவிருக்கும் நாடாளுமன்றத் தேர்தலில் I.N.D.I.A கூட்டணி 400 தொகுதிகளுக்கு மேல் பெற்று வெற்றி பெறும் என்று தமிழக காங்கிரஸ் கமிட்டியின் தலைவர் செல்வப் பெருந்தகை நம்பிக்கை தெரிவித்துள்ளார். கடந்த தேர்தலை விட இரு மடங்கு வாக்கு வித்தியாசத்தில் இந்த முறை காங்கிரஸ் வேட்பாளர்கள் வெல்வார்கள் என்றும் அவர் பேசியிருக்கிறார். இதுகுறித்து உங்களது கருத்து என்ன?
குஜராத் அணிக்கு எதிரான ஐபிஎல் போட்டியில் ராஜஸ்தான் நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறது. இந்த நிலையில் GT வீரர் நூர் முகமது வீசிய 9ஆவது ஓவரை எதிர்கொண்ட சஞ்சு, பேக்வேர்டு பாயிண்ட்டில் ஒரு ரன் அடித்தார். அப்போது பந்தை பிடித்த ஃபீல்டர், அதை பவுலர் ஸ்டம்பை நோக்கி வீச, எதிர் திசையில் இருந்த மோஹித் ஷர்மா அந்தப் பந்தை பிடிக்காததால் அது பவுண்டரிக்கு சென்றது. இதன் மூலம் RR அணிக்கு 5 ரன்கள் கிடைத்தது.
Sorry, no posts matched your criteria.