India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
உருவ கேலிக்கு ஆளானதாக நடிகை அபிராமி வேதனை தெரிவித்துள்ளார். விருமாண்டி, வானவில், சமுத்திரம், தோஸ்து உள்ளிட்ட படங்களில் கதாநாயகியாக நடித்துள்ள அவர், தாம் உருவ கேலிக்கு ஆளான அனுபவத்தை பகிர்ந்துள்ளார். அவர் கூறுகையில், “உயரமாக இருப்பதாக நான் உருவ கேலி செய்யப்பட்டேன். இதனால் பட வாய்ப்புகளும் பறி போனது. எனது தாடை மிக நீளமாக இருப்பதாகக் கூறி, இழுத்து பார்த்தனர்” எனத் தெரிவித்துள்ளார்.
புத்த மதத்துக்கு இந்துக்கள் மாற முன் அனுமதி பெறுவது அவசியம் என்று குஜராத் அரசு தெரிவித்துள்ளது. தலித்துகள் புத்த மதத்துக்கு மாறும் நிகழ்வுகள் அடிக்கடி நடப்பது குறித்து கவனத்துக்கு வந்ததையடுத்து, குஜராத் அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது. அதில், புத்தம், சீக்கியம், ஜைனம் ஆகியவை தனி மதங்கள், அதற்கு மாற மாவட்ட ஆட்சியரிடம் விண்ணப்பித்து முன் அனுமதி பெற வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
நெல்லை பாஜக வேட்பாளர் நயினார் நாகேந்திரனுக்கு காமராஜர் ஆதித்தனார் கழகம் ஆதரவு தெரிவித்துள்ளது. கள்ளுக்கடைகளை திறப்போம் என பாஜக உறுதியளித்துள்ளது. பாஜக ஆட்சிக்கு வந்தால் இளைஞர்கள் பெரும்பாலானோருக்கு வேலை வாய்ப்பு கிடைக்கும் என்பதால் ஆதரவு அளிப்பதாக கராத்தே செல்வினின் மனைவி வயோலா அறிவித்துள்ளார். ராக்கெட் ராஜா – ஹரி நாடார் இடையே மோதல் வெடித்ததால் நாடார் சமூக வாக்கு பாஜகவுக்கு செல்ல வாய்ப்புள்ளது.
இந்தியாவின் ஏவுகணை நாயகன், முன்னாள் ஜனாதிபதி அப்துல்கலாமுக்கு இயற்பியல் பாடம் கற்பித்த பேராசிரியரும், அருட்தந்தையுமான லடிஸ்லாஸ் சின்னத்துரை (101) இன்று காலமானார். ஆசிரியப் பணி, இறைத்தொண்டிலும் தனது வாழ்நாள் முழுவதையும் கழித்தவர். கலாம் தமிழ்நாடு வரும்போது எல்லாம், அவரை சந்தித்து ஆசிபெற்று, நீண்ட நேரம் உரையாடுவார். அவரது மறைவிற்கு முதல்வர் ஸ்டாலின் உருக்கமாக இரங்கல் தெரிவித்துள்ளார்.
ஹர்திக் பாண்டியா மற்றும் குர்னால் பாண்டியாவிடம், ரூ.4.3 கோடி மோசடி செய்த அவர்களது ஒன்றுவிட்ட சகோதரர் வைபவ் பாண்டியாவை போலீசார் கைது செய்துள்ளனர். பாலிமர் என்ற நிறுவனத்தை மூவரும் அமைத்த நிலையில், சகோதரர்களுக்கு தெரியாமல் வைபவ் தனது லாப பங்கை 20%இல் இருந்து 33%ஆக உயர்த்தியதோடு, வேறொரு நிறுவனத்தையும் நிறுவியிருக்கிறார். இந்த உண்மை ஹர்திக் பாண்டியாவுக்கு தெரியவர, அவர் போலீசில் புகார் அளித்தார்.
2024 ஒருங்கிணைந்த உயர்நிலைத் தேர்வுக்கான (CHSL) விண்ணப்பத்தை, பணியாளர் தேர்வு ஆணையம் (SSC) வெளியிட்டுள்ளது. இதில், அஞ்சல் உதவியாளர், டேட்டா என்ட்ரி ஆபரேட்டர், லோயர் டிவிஷன் கிளார்க் உட்பட 3,712 காலிப் பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. ரூ.81,000 வரை சம்பளம் வழங்கப்படும் இந்த வேலைக்கு, 12ஆவது தேர்ச்சி பெற்றிருந்தால் போதும். விருப்பமுள்ளவர்கள் மே 7ஆம் தேதிக்குள் <
இந்தியன் சூப்பர் லீக் கால்பந்து தொடரில் சென்னை அணி ‘பிளே-ஆப்’ சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளது. ஏற்கனவே மும்பை சிட்டி, மோகன் பகான் சூப்பர் ஜெயன்ட், எப்.சி. கோவா, ஒடிசா எப்.சி., கேரளா பிளாஸ்டர்ஸ் ஆகிய அணிகள் பிளே-ஆப் சுற்றை எட்டிய நிலையில் 6-வது மற்றும் கடைசி அணியாக சென்னை எப்.சி.(27 புள்ளிகள்) பிளே-ஆப் சுற்றை உறுதி செய்தது. 3 வருடத்துக்கு பிறகு பிளே-ஆப் சுற்றுக்கு செல்கிறது சென்னை அணி.
பாஜக மூத்த தலைவரும், மத்திய உள்துறை அமைச்சருமான அமித் ஷா சிவகங்கையில் நாளை மேற்கொள்ள இருந்த சாலைப் பேரணி ரத்து செய்யப்பட்டுள்ளது. சிவகங்கை தொகுதியில் பாஜக சின்னத்தில் போட்டியிடும் தேவநாதனை ஆதரித்து நாளை அமித் ஷா சாலைப் பேரணி நடத்த முடிவு செய்யப்பட்டிருந்தது. இந்நிலையில் அந்தப் பேரணி தற்போது ரத்து செய்யப்பட்டுள்ளது. இதற்கான காரணம் தெரிவிக்கப்படவில்லை.
மக்களவைத் தேர்தலில் போட்டியிட சீட் வழங்கப்படாததால், அரசியலில் இருந்து கர்நாடகத்தை சேர்ந்த காங்கிரஸ் முன்னாள் மத்திய அமைச்சர் வீரப்பமொய்லி விலகியுள்ளார். கடந்த தேர்தலில் சிக்கபள்ளாப்பூரில் போட்டியிட்டு தோல்வியடைந்த அவர், இம்முறையும் விருப்பம் தெரிவித்திருந்தார். ஆனால் சீட் வழங்கப்படாததால் அதிருப்தியில் இருந்த மொய்லி, அரசியலில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார்.
கொ.ம.தே.க.வின் நாமக்கல் வேட்பாளர் மாதேஸ்வரன் அதிமுகவிடம் தனது வெற்றியைப் பறிகொடுக்க வாய்ப்பிருப்பதாக திமுக தலைமைக்கு உளவுத்துறை ரகசிய ரிப்போர்ட் அளித்துள்ளதாம். எதிர்க்கட்சிகளை விட மாதேஸ்வரனின் சொந்தக் கட்சியினரே அவருக்கு எதிராக அதிகளவில் பரப்புரை செய்கிறார்களாம். இதன் பின்னணியில், சூரியமூர்த்தியின் உள்ளடி வேலைகள் (முதலில் வேட்பாளராக அறிவிக்கப்பட்டவர்) இருப்பதாகக் கூறப்படுகிறது.
Sorry, no posts matched your criteria.