News April 11, 2024

Apply Now: 3,712 காலிப் பணியிடங்கள்

image

2024 ஒருங்கிணைந்த உயர்நிலைத் தேர்வுக்கான (CHSL) விண்ணப்பத்தை, பணியாளர் தேர்வு ஆணையம் (SSC) வெளியிட்டுள்ளது. இதில், அஞ்சல் உதவியாளர், டேட்டா என்ட்ரி ஆபரேட்டர், லோயர் டிவிஷன் கிளார்க் உட்பட 3,712 காலிப் பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. ரூ.81,000 வரை சம்பளம் வழங்கப்படும் இந்த வேலைக்கு, 12ஆவது தேர்ச்சி பெற்றிருந்தால் போதும். விருப்பமுள்ளவர்கள் மே 7ஆம் தேதிக்குள் <>www.ssc.nic.in <<>>என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம்.

Similar News

News November 11, 2025

₹1,000 மகளிர் உரிமைத் தொகை: தமிழக அரசு அறிவிப்பு

image

மகளிர் உரிமைத் தொகை திட்டத்தில் புதிய பயனர்களை சேர்க்கும் பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன. டிச.15 முதல் அவர்களுக்கும் ₹1,000 வழங்கப்பட உள்ளது. இந்நிலையில், இன்னும் 4 நாள்களில் (நவ.15) உங்களுடன் ஸ்டாலின் முகாம்கள் முழுவதுமாக நிறைவடையும் என அரசு தெரிவித்துள்ளது. அதன்பிறகு, மகளிர் உரிமைத் தொகைக்கு விண்ணப்பிக்க முடியாது. அதனால், தகுதியான மகளிர் உடனடியாக முந்துங்க. SHARE IT

News November 11, 2025

பிஹார் தேர்தல் கருத்துக் கணிப்பு… சிறிது நேரத்தில்

image

பிஹார் சட்டப்பேரவைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு 243 தொகுதிகளில், 2 கட்டங்களாக நடந்து முடிந்துள்ளது. மாலை 6 மணிக்கு இறுதி வாக்குப்பதிவு முடிந்துள்ள நிலையில் 6:30 முதல் பல்வேறு ஊடகங்களின் கருத்துக் கணிப்புகள் வெளியாக உள்ளன. NDA கூட்டணி ஆட்சி தொடருமா, இந்தியா கூட்டணி ஆட்சியை பிடிக்குமா என்பது ஓரளவு இந்த கருத்துக் கணிப்பில் தெரிந்துவிடும். முடிவுகளை அறிய வே2நியூஸில் காத்திருங்கள்.

News November 11, 2025

பிஹாரில் 2-ம் கட்ட வாக்குப்பதிவு நிறைவு

image

பிஹாரில் இறுதிக்கட்டமாக இன்று நடைபெற்ற 122 தொகுதிகளுக்கான வாக்குப்பதிவு நிறைவடைந்தது. டெல்லி வெடிகுண்டு சம்பவத்தின் எதிரொலியாக, பலத்த பாதுகாப்பிற்கு மத்தியில் வாக்குப்பதிவு நடந்தது. இந்நிலையில், மாலை 5 மணி நிலவரப்படி 67.14% வாக்குகள் பதிவாகி இருக்கின்றன. ஏற்கெனவே முதற்கட்ட தேர்தலில் 65.08% வாக்குகள் பதிவாகியிருந்தது குறிப்பிடத்தக்கது. வரும் 14-ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடக்கிறது.

error: Content is protected !!