news

News March 24, 2024

சற்றுமுன்: வேட்பாளர் பட்டியல் வெளியானது

image

5ஆது வேட்பாளர் பட்டியலை தேசிய பாஜக தலைமை சற்றுமுன் வெளியிட்டது. அதன்படி, கேரளாவின் வயநாடு தொகுதியில் ராகுல் காந்தியை எதிர்த்து கே.சுரேந்திரன் களமிறங்கவுள்ளார். பிலிபிட் தொகுதியில் தற்போது எம்.பியாக இருக்கும் வருண் காந்திக்கு சீட்டு கொடுக்கப்படவில்லை. மாறாக ஜிதின் பிரசாதா களம் இறக்கப்படுகிறார். மொத்தம் 111 வேட்பாளர்கள் இந்தப் பட்டியலில் அறிவிக்கப்பட்டுள்ளனர்.

News March 24, 2024

காங்கிரசில் இருந்து விலகி பாஜகவில் இணைந்தார்

image

தேர்தல் விரைவில் நடைபெற உள்ள நிலையில் ஹரியானா மாநில காங்கிரஸ் எம்பி நவீன் ஜிண்டால், காங்கிரசில் இருந்து விலகியுள்ளார். கட்சியில் இருந்து விலகிய சில நிமிடங்களில் அவர் பாஜகவில் இணைந்துள்ளார். இவர் ஹரியானாவின் குருக்ஷேத்ரா தொகுதியில் கடந்த 10 ஆண்டுகளாக எம்பியாக இருக்கிறார். இந்த முறை குருக்ஷேத்ரா தொகுதி ஆம் ஆத்மிக்கு ஒதுக்கப்பட்டுள்ளதால் இவர் கட்சியில் இருந்து விலகியதாகக் கூறப்படுகிறது.

News March 24, 2024

10 ஓவருக்கு 10 ரன்கள் மட்டுமே

image

வங்கதேசம் மகளிர் அணிக்கு எதிரான ODI போட்டியில் ஆஸ்திரேலிய வீராங்கனை மொலினக்ஸ் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியுள்ளார். மொத்தம் 10 ஓவர்கள் வீசி, 5 ஓவர்கள் மெய்டனாக வீசி 10 ரன்களை மட்டுமே விட்டுக்கொடுத்துள்ளார். குறிப்பாக 53 டாட் பால்களுடன், 3 விக்கெட்டுகளையும் கைப்பற்றினார். ஆஸி.,யின் சிறப்பான பந்துவீச்சால் வங்கதேசம் 97 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. ஆஸி., 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது.

News March 24, 2024

1 மணி நேரத்திற்கு ரூ.5 லட்சம் கேட்கும் இயக்குநர்

image

இமைக்கா நொடிகள் பட இயக்குநர் அனுராக் காஷ்யப் தனது ரசிகர்களுக்கு கட்டணம் நிர்ணயித்துள்ளார். இதுகுறித்து தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்ட அவர், “ரசிகர்கள் என்னை சந்திக்க விரும்பினால் 30 நிமிடங்களுக்கு ரூ.2 லட்சமும், 1 மணி நேரத்திற்கு ரூ.5 லட்சமும் கட்டணம் நிர்ணயித்துள்ளேன். அழைக்கவோ, குறுஞ்செய்தி அனுப்பவோ வேண்டாம். பணம் செலுத்துங்கள் உங்களுக்கான நேரம் கிடைக்கும்” எனப் பதிவிட்டுள்ளார்.

News March 24, 2024

இரண்டாவது திருமணம் செய்தால் ₹2 லட்சம்

image

கைம்பெண் மறுமணத்தை ஊக்குவிக்கும் விதமாக புதிய திட்டத்தினை ஜார்கண்ட் மாநில அரசு அறிமுகம் செய்துள்ளது. கணவர் இறந்தபின் இரண்டாவது திருமணம் செய்துகொண்டால் அந்தப் பெண்ணுக்கு அரசு ₹2 லட்சம் வழங்கவுள்ளது. எதிர்பாராத விதமாக கணவர் இறந்துவிட்டால் பெண்கள் முடங்கிவிடாமல், மறுமணம் செய்து கொண்டு உறுதியோடு வாழ வேண்டும் என்ற நோக்கில் இத்திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளது.

News March 24, 2024

தொடர்ந்து 5ஆவது முறையாக அதிரடி காட்டிய சஞ்சு

image

லக்னோ அணிக்கு எதிரான ஐபிஎல் போட்டியில், ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் கேப்டன் சஞ்சு சாம்சன் அதிரடி காட்டியுள்ளார். தொடக்கம் முதலே பொறுப்புடன் விளையாடிய அவர், 3 பவுண்டரி 6 சிக்ஸர்கள் விளாசி மொத்தமாக 72* ரன்கள் குவித்தார். இதன் மூலம் ஐபிஎல் தொடரின் முதல் போட்டியில், தொடர்ந்து 5ஆவது முறையாக அசத்தியுள்ளார். இதுவரை 2020- 74 (32), 2021- 119 (63), 2022- 55 (27), 2023- 55(32) ரன்கள் குவித்துள்ளார்.

News March 24, 2024

கெத்து காட்டிய எடப்பாடி பழனிசாமி

image

திருச்சி பிரசாரப் பொதுக் கூட்டத்தில் அதிகப்படியான கூட்டத்தை கூட்டி மாஸ் காண்பித்திருக்கிறார் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி. கூட்டத்தில் பேசிய அவர், “திமுகவின் மூன்று ஆண்டுகால ஆட்சியில் ஒரு மருத்துவக் கல்லூரியாவது கட்டப்பட்டிருக்கிறதா? மோடியையும், என்னையும் தான் ஸ்டாலின் விமர்சனம் செய்கிறார்.” என்று பரப்புரை செய்தார். இந்தக் கூட்டத்தால் திருச்சி நகரே ஸ்தம்பித்திருக்கிறது.

News March 24, 2024

92 ஆண்டுகளுக்கு பின் நடக்கும் அதிசயம்

image

பங்குனி உத்திரம் மிகவும் சிறப்பு வாய்ந்த நாளாக ஆன்மீகத்திலும் ஜோதிடத்திலும் குறிப்பிடப்பட்டுள்ளது. அப்படிப்பட்ட நன்னாளில், 92 ஆண்டுகளுக்கு பின் சந்திர கிரகணமும் சேர்ந்து வருகிறது. இத்தகைய சிறப்பு வாய்ந்த மார்ச் 25ஆம் தேதி, திருமணம் ஆகாதவர்கள் விளக்கு ஏற்றி வழிபட்டால் விரைவில் திருமணம் நடைபெறும் என்பது ஐதீகம். குல தெய்வ கோயிலுக்கு சென்று வழிபாடு நடத்துவது கூடுதல் பலன் தரும்.

News March 24, 2024

இணையத்தில் வைரலாகும் அஜித்தின் புகைப்படம்

image

நண்பர்களுடன் பைக் ரைடு சென்றுள்ள நடிகர் அஜித்தின் புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது. ‘விடாமுயற்சி’ படப்பிடிப்புக்கு நடுவே பிரேக் கிடைத்ததால், நடிகர் ஆரவ் உள்ளிட்ட தனது நண்பர்களை அழைத்துக் கொண்டு நடிகர் அஜித் பைக் ரைடுக்கு கிளம்பிவிட்டார். பைக் ரைடின் போது எடுக்கப்படும் புகைப்படங்கள் இணையத்தில் வெளியான நிலையில், தற்போது இயற்கையுடன் அஜித் தனியாக இருக்கும் புகைப்படம் ஒன்று வைரலாகி வருகிறது.

News March 24, 2024

IPL: ராஜஸ்தான் ராயல்ஸ் அணி வெற்றி

image

லக்னோ அணிக்கு எதிரான ஐபிஎல் போட்டியில், ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 20 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது. 194 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய லக்னோ அணி, 20 ஓவர்கள் முடிவில் 173/6 ரன்கள் எடுத்து தோல்வியை தழுவியது. ராஜஸ்தான் ராயல்ஸ் சார்பில், சஞ்சு சாம்சன் (82), ரியான் பராக் (43) ரன்களும், ட்ரெண்ட் பவுல்ட் 2 விக்கெட்டுகளை கைப்பற்றி அணியின் வெற்றிக்கு வித்திட்டனர்.

error: Content is protected !!