India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
தேனி மக்களவைத் தொகுதியில் அமமுக சார்பில் போட்டியிடும் டிடிவி தினகரனின் வேட்புமனு ஏற்கப்பட்டது. முன்னதாக வேட்புமனு பரிசீலனையின் போது, அவரது சிங்கப்பூர் குடியுரிமை மற்றும் ஃபெரா வழக்கு தொடர்பான விவரங்கள் வேட்புமனுவில் இல்லாததால், வேட்புமனுவை ஏற்க அதிமுக, திமுக எதிர்ப்பு தெரிவித்தன. இதனால் வேட்புமனு பரிசீலனை நிறுத்தி வைக்கப்பட்ட நிலையில், தினகரன் உரிய ஆவணங்களை அளித்த பின்னர் ஏற்கப்பட்டது.
தமிழ்நாட்டில் அங்கீகரிக்கப்பட்ட மாநிலக் கட்சிகளுக்கு சின்னங்களை ஒதுக்கி அறிவித்திருக்கிறது தேர்தல் ஆணையம். அதன்படி, திமுகவுக்கு உதய சூரியன், அதிமுகவுக்கு இரட்டை இலை, தேமுதிகவுக்கு முரசு சின்னம், இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு கதிர் அரிவாள் சின்னம் ஆகியவை ஒதுக்கப்பட்டுள்ளன. மற்ற கட்சிகள் தேர்தல் ஆணையம் அளிக்கும் சின்னத்தில் போட்டியிட வேண்டும்.
நடிகர் கிஷன் தாஸ், தனது நீண்ட நாள் காதலியை திருமணம் செய்யப் போவதாக அறிவித்துள்ளார். நேர்கொண்ட பார்வை படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமான இவர், முதல் நீ முடிவும் நீ படத்தின் மூலம் ரசிகர்களின் மனதை கவர்ந்தார். இந்நிலையில், தனது நீண்ட நாள் தோழியும், காதலியுமான சுசித்ராவை குடும்பத்தார் முன்னிலையில் மோதிரம் மாற்றி நிச்சயம் செய்து கொண்டார். இதுதொடர்பான புகைப்படங்களை இணையத்தில் பகிர்ந்துள்ளார்.
இரண்டு நாட்களாக தமிழ்நாட்டின் தென் மாவட்டங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது. இந்நிலையில் அடுத்த 3 மணி நேரத்திற்கு (மாலை 7 மணி வரை) தென்காசி, தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் லேசான அல்லது மிதமான மழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. கோவையில் லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளது.
டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலின் அமலாக்கத்துறை காவலை ஏப்.1 வரை நீட்டித்து டெல்லி ரோஸ் அவென்யூ நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. டெல்லி மதுபானக் கொள்கை முறைகேடு வழக்கில் மார்ச் 21ஆம் தேதி அமலாக்கத்துறையால் கெஜ்ரிவால் கைது செய்யப்பட்டார். ஆத் ஆத்மியை அமலாக்கத்துறை அழிக்க முயற்சிப்பதாக நீதிமன்றத்தில் குற்றம்சாட்டிய கெஜ்ரிவால், அமலாக்கத்துறை காவல் நீட்டிப்புக்கு எந்த எதிர்ப்பும் தெரிவிக்கவில்லை.
பிரதமர் மோடியின் பாதுகாப்பு வாகனங்களில் இருந்து 3 முக்கிய வாகனங்களை நீக்க தேசிய பசுமைத் தீர்ப்பாயம் உத்தரவிட்டுள்ளது. 2014ஆம் ஆண்டு முதல் பிரதமரின் வாகன வரிசையில் பங்கேற்றிருக்கும் இந்த வாகனங்கள், டீசலில் இயங்குவன. அந்த வாகனங்கள் BS3 தரச் சான்றிதழ் மட்டுமே பெற்றிருப்பதால் சுற்றுச் சூழலுக்கு அச்சுறுத்தலாக இருப்பதாக பசுமைத் தீர்ப்பாயம் தெரிவித்துள்ளது.
இந்த ஆண்டின் கோடை காலம் மிகவும் கடுமையானதாக இருக்கும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரித்திருக்கிறது. ஏப்ரல் முதல் ஜூன் மாதம் வரை வெப்ப அலை அதிகம் வீசும் என்றும் இயல்பை விட வெப்பம் 2 அல்லது 3 டிகிரி அதிகமாக உணரப்படும் என்றும் வானிலை அய்வு மையம் கணித்திருக்கிறது. ஆகையால், வீட்டை விட்டு வெளியே செல்வோர் போதுமான முன்னெச்சரிக்கையை எடுக்கவும்.
100 நாள் வேலைத்திட்டத்திற்கான தினசரி ஊதியத்தை மத்திய அரசு ரூ.7 உயர்த்தியுள்ளது. இது குறித்து காங்., எம்.பி ராகுல் தனது X பக்கத்தில், ‘வாழ்த்துகள் MNREGA தொழிலாளர்களே. பிரதமர் உங்களின் சம்பளத்தை ரூ.7 உயர்த்தியுள்ளார். இவ்வளவு பெரிய தொகையை வைத்து என்ன செய்ய போகிறீர் என பிரதமர் உங்களை கேட்கலாம். மேலும் ரூ.700 கோடி செலவில் உங்கள் சார்பில் ‘மோடிக்கு நன்றி’ விளம்பரத்தை அவர்கள் துவங்குவார்கள்’ என்றார்.
நடிகர் சித்தார்த் தனது நீண்ட நாள் காதலியான நடிகை அதிதியை நிச்சயம் செய்து கொண்டார். நீண்ட நாள்களாக காதலித்து வந்த இருவரும், நிகழ்ச்சிகளுக்கு ஒன்றாக செல்வதுண்டு. ஆனால், தங்கள் காதல் உறவை குறித்து எங்குமே உறுதிபடுத்தவில்லை. இதனிடையே, நேற்று இருவருக்கும் திருமணம் ஆகிவிட்டதாக இணையத்தில் தகவல் பரவி வந்த நிலையில், இன்று தாங்கள் நிச்சயம் செய்து கொண்டதாக இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளனர்.
சேலம் தொகுதி திமுக வேட்பாளர் செல்வ கணபதியின் வேட்புமனு நீண்ட இழுபறிக்கு பின்னர் ஏற்கப்பட்டது. 2 தொகுதிகளில் அவருக்கு வாக்குரிமை இருப்பதாகவும், வழக்கு தொடர்பான விவரங்களை அவர் தனது வேட்பு மனுவில் குறிப்பிடவில்லை எனவும் புகார் எழுந்தது. இது தொடர்பாக பரிசீலனை செய்த தேர்தல் அலுவலரும், சேலம் ஆட்சியருமான பிருந்தா தேவி, புகாரில் முகாந்திரம் இல்லை எனக் கூறியதுடன் அவரது வேட்பு மனுவை ஏற்பதாக அறிவித்தார்.
Sorry, no posts matched your criteria.