News April 11, 2024
இதை தமிழ்நாட்டு மக்கள் ஆதரிக்க மாட்டார்கள்

பாஜக தலைவர்கள் எத்தனை முறை தமிழ்நாடு வந்தாலும், அவர்களால் தேர்தலில் வெல்ல முடியாது என திருமாவளவன் தெரிவித்துள்ளார். இது குறித்து பேட்டி அளித்த அவர், மதவாத அரசியலை தமிழ்நாட்டு மக்கள் ஒருபோதும் ஆதரிக்க மாட்டார்கள் என்றார். பாஜக தமிழ்நாட்டில் காலூன்ற நினைக்கிறது. ஆனால், அதற்கான வாய்ப்பு இல்லை. இந்தியா கூட்டணி வெற்றி பெற்று மத்தியில் ஆட்சி அமைக்கும் என அவர் நம்பிக்கை தெரிவித்தார்.
Similar News
News November 12, 2025
ஒரு மாதம் முழுவதும் காய்கறிகள்.. டிரை பண்ணுங்க

நீங்கள் ஒரு மாதம் தொடர்ந்து காய்கறிகளை அதிகளவில் உணவில் சேர்த்து வந்தால், உங்கள் உடலில் என்னென்ன நடக்கும் என்று தெரியுமா? நீங்கள் நினைப்பதை விட அதிகளவிலான நன்மைகள் கிடைக்கும். அவை என்னென்ன என்று, மேலே போட்டோக்களாக பகிர்ந்துள்ளோம். அவற்றை ஒவ்வொன்றாக ஸ்வைப் செய்து பாருங்க. இதேபோன்று உங்களுக்கு தெரிந்த நன்மைகளை கமெண்ட்ல சொல்லுங்க.
News November 12, 2025
நீண்ட நாள்களுக்கு பிறகு மகிழ்ச்சி: அன்புமணி

சென்னையில் பாமக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் நடைபெற்று வருகிறது. அதில் பேசிய அன்புமணி, நீண்ட நாள்கள் கழித்து தற்போதுதான் நிம்மதியாகவும், தைரியமாகவும், மகிழ்ச்சியாகவும் இருக்கிறேன் என தெரிவித்துள்ளார். மேலும், கட்சிக்கும், ராமதாஸுக்கும் உண்மையாகத்தான் இருந்தேன்; இனிமேலும் உண்மையாகத்தான் இருப்பேன் எனக்கூறிய அவர், ராமதாஸுடன் இருப்பவர்கள் அவரது பெயரை கெடுத்து வருகின்றனர் என்றும் குற்றம் சாட்டினார்.
News November 12, 2025
BREAKING: முதல்முறையாக அரசு அறிவித்தது

டெல்லியில் நடந்தது பயங்கரவாத தாக்குதல் என மத்திய அரசு முதல்முறையாக அறிவித்துள்ளது. PM மோடி தலைமையில் நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்திற்கு பிறகு செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ், செங்கோட்டை அருகே நடந்தது கோழைத்தனமான சம்பவம் என்றும், சதித்திட்டம் தீட்டியவர்களுக்கு நீதியின் முன்பு நிச்சயம் தண்டனை கிடைக்கும் என்றும் சூளுரைத்தார்.


