news

News March 26, 2024

போபண்ணா ஜோடி காலிறுதிக்கு முன்னேற்றம்

image

மியாமி ஓபன் டென்னிஸ் போட்டியில், போபண்ணா ஜோடி அபார வெற்றி பெற்றுள்ளது. இன்று நடைபெற்ற ஆடவருக்கான இரட்டையர் பிரிவு போட்டியில், மொனாக்கோ நாட்டின் ஹியூகோ நைஸ் – ஜான் ஜீலின்ஸ்கி ஜோடியும், போபண்ணா – மேத்யூ எப்டன் ஜோடியும் மோதின. தொடக்கம் முதலே விறுவிறுப்பாக நடைபெற்ற இப்போட்டியில், 7-5, 7-6 என்ற நேர் செட் கணக்கில் போபண்ணா – மேத்யூ எப்டன் ஜோடி வெற்றி பெற்று, காலிறுத்திச் சுற்றுக்கு முன்னேறியது.

News March 26, 2024

திமுக கூட்டணிக்கு தவ்ஹீத் ஜமாஅத் முழு ஆதரவு

image

மக்களவைத் தேர்தலில் திமுக கூட்டணிக்கு முழு ஆதரவளிப்பதாக தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கட்சியின் தலைவர் எஸ்.எம் பாக்கர் அறிவித்துள்ளார். மேலும், தமிழ்நாடு முழுவதும் திமுக கூட்டணிக்காக வீடு, வீடாக தவ்ஹீத் ஜமாஅத் கட்சியினர் வாக்கு சேகரிப்பார்கள் என்றும், திராவிட அரசியலை பற்றி தெரிந்து வைத்து கொண்டு ஜிகினா காட்டி மக்களை அண்ணாமலை ஏமாற்றி வருவதாகவும் அவர் குற்றம்சாட்டியுள்ளார்.

News March 26, 2024

‘4 பாஜக எம்.எல்.ஏக்கள் அதிமுக போட்ட பிச்சை’

image

அதிமுக போட்ட பிச்சையால் பாஜகவில் நான்கு எம்.எல்.ஏ.,க்கள் இருக்கிறார்கள் என முன்னாள் அமைச்சரும், எம்.பியுமான சி.வி சண்முகம் விமர்சித்துள்ளார். விழுப்புரத்தில் நடந்த தேர்தல் பிரசார கூட்டத்தில் பங்கேற்று பேசிய அவர், “தமிழக பாஜக தலைவர் அண்ணாமலையின் யாத்திரைக்கு ஒரு கடைவிடாமல் வசூலித்தார்கள். மீண்டும் மோடி வேண்டாம் நமக்கு. மீண்டும் மோடி வந்துவிட்டால் ஜனநாயகத்திற்கு மிகப்பெரிய ஆபத்து” என்றார்.

News March 26, 2024

₹10 லட்சம் இல்லாததால் உயிரிழந்த நடிகர்

image

மாரடைப்பால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நடிகர் சேஷு, இன்று மதியம் உயிரிழந்தார். ₹10 லட்சம் இருந்தால் அவரை காப்பாற்றி விடலாம் என்று சொல்லப்பட்ட நிலையில் அறுவை சிகிச்சை செய்யாமலேயே சேஷுவின் உயிர் பிரிந்திருக்கிறது. அவருக்கு பணம் கொடுத்து உதவுங்கள் என்று பலர் கோரிக்கை வைத்தபோதும் போதுமான பண உதவி கிடைக்கவில்லை என்று தெரிகிறது. RIP

News March 26, 2024

IPL: சென்னை அணி பேட்டிங்

image

சென்னை-குஜராத் இடையேயான 7ஆவது ஐபிஎல் போட்டி, இன்னும் சற்றுநேரத்தில் தொடங்க உள்ளது. இதில் டாஸ் வென்ற GT அணி கேப்டன் கில் பந்துவீச்சை தேர்வு செய்தார். இரு அணிகளும் இதுவரை 5 முறை நேருக்கு நேர் மோதியதில், CSK -2, GT -3 போட்டிகளில் வெற்றி பெற்றுள்ளன. இரு அணிகளும் தங்கள் முதல் போட்டியில் வெற்றி பெற்றுள்ளதால், இன்றைய போட்டியில் வெற்றி பெரும் அணியே புள்ளிப் பட்டியலில் முதலிடத்தை பிடிக்கும்.

News March 26, 2024

காங்கிரஸ் எம்.பி. பாஜகவில் இணைந்தார்

image

பஞ்சாப் மாநிலத்தில் காங்கிரஸ் எம்.பி. ரன்வீத் சிங் பிட்டு சற்றுமுன் பாஜகவில் இணைந்தார். லூதியானா எம்.பியான இவர், அம்மாநில முன்னாள் முதல்வர் பியாந்த் சிங்கின் பேரன் ஆவார். காங்கிரஸ் கட்சியின் மக்களவைத் தலைவராக செயல்பட்டிருக்கும் பிட்டு, காங்கிரஸ் கட்சியின் முக்கிய நிர்வாகியாகவும் இருந்தார். இந்நிலையில், திடீரென அவர் பாஜகவுக்கு தாவியிருப்பது காங்கிரஸ் கட்சியினரை அதிர்ச்சியடையச் செய்துள்ளது.

News March 26, 2024

கள்ளக்கூட்டணி யார் என மக்களுக்கு தெரியும்

image

கள்ளக்கூட்டணி யார் வைத்துள்ளனர் என்பது மக்களுக்கு தெரியுமென அதிமுக பொதுச்செயலாளர் இபிஎஸ் தெரிவித்துள்ளார். தூத்துக்குடியில் மோடியுடன் ஸ்டாலின் இருக்கும் புகைப்படத்தை காட்டி பிரசாரம் மேற்கொண்ட இபிஎஸ், ‘திமுக ஆட்சியில் ஒரு புயலையே அவர்களால் தாக்குப்பிடிக்க முடியவில்லை. அதிமுக ஆட்சியில் பல புயல்களை எதிர்கொண்டோம். கனமழையால் தூத்துக்குடி மிதந்து கொண்டிருந்த போது டெல்லிக்கு சென்றவர் ஸ்டாலின்’ என்றார்.

News March 26, 2024

எல்.முருகனின் சொத்து மதிப்பு ரூ. 3.28 கோடி

image

மக்களவைத் தேர்தலில் நீலகிரி தொகுதியில் போட்டியிடும் பாஜக வேட்பாளர் எல்.முருகன் ரூ. 3.28 கோடிக்கு சொத்துக்கள் உள்ளதாக பிரமாணப் பாத்திரத்தில் தகவல் தெரிவித்துள்ளார். தங்கம் மற்றும் வைப்புத் தொகை என ரூ. 1.93 கோடிக்கு அசையும் சொத்துக்கள், ரூ. 2.35 கோடிக்கு அசையா சொத்துக்கள் இருப்பதாக அவர் தெரிவித்துள்ளார். முன்னதாக, தமிழிசையின் சொத்து மதிப்பு ரூ. 21.54 கோடி என தெரிவிக்கப்பட்டிருந்தது.

News March 26, 2024

CUET தேர்வுக்கு விண்ணப்பிக்க கூடுதல் அவகாசம்

image

CUET UG தேர்வுகளுக்கு விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி மார்ச் 31 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இன்றைக்குள் விண்ணப்பிக்க வேண்டும் என்று குறிப்பிடப்பட்டிருந்த நிலையில், 5 நாட்கள் கூடுதல் அவகாசம் வழங்கி அறிவிக்கப்பட்டுள்ளது. மத்திய பல்கலைக்கழகங்களில் பொறியியல் உள்ளிட்ட படிப்புகளில் சேர இந்த நுழைவுத் தேர்வு அவசியமாகும். CUET தேர்வுகளுக்கு விண்ணப்பிக்க இங்கே <>க்ளிக் <<>>செய்யவும்.

News March 26, 2024

17,633 பேர் தேர்வு எழுதவில்லை

image

தமிழகம் முழுவதும் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வுகள் இன்று தொடங்கி ஏப்ரல் 8ஆம் தேதி வரை நடைபெறுகிறது. மாநிலம் முழுவதும் சுமார் 9.3 லட்சம் மாணவர்கள் இந்தத் தேர்வுகளை எழுதுகின்றனர். தமிழகம் முழுவதும் சுமார் 4,107 மையங்களில் இத்தேர்வுகள் நடைபெறுகிறது. இதில் இன்று நடைபெற்ற தமிழ் மற்றும் இதர மொழி தேர்வை 17,633 பேர் எழுதவில்லை என அரசு தேர்வுகள் இயக்கம் தெரிவித்துள்ளது.

error: Content is protected !!