News April 12, 2024
IPL: அடுத்த போட்டியில் மேக்ஸ்வெல் இல்லை

ஹைதராபாத்துக்கு எதிரான ஐபிஎல் போட்டியில், பெங்களூரு வீரர் மேக்ஸ்வெல் பங்கேற்க மாட்டார் என தகவல் வெளியாகியுள்ளது. மும்பைக்கு எதிரான நேற்றைய போட்டியில், மேக்ஸ்வெல்லுக்கு கை கட்டை விரலில் காயம் ஏற்பட்டது. இதனால் போட்டியில் இருந்து பாதியிலேயே வெளியேறிய அவருக்கு, அடுத்த போட்டியில் ஓய்வு வழங்கப்படவுள்ளது. SRH-RCB இடையேயான 30ஆவது ஐபிஎல் போட்டி, வரும் ஏப்.15ஆம் தேதி சின்னசாமி மைதானத்தில் நடைபெற உள்ளது.
Similar News
News November 14, 2025
விமானப்படையில் வேலை, டிகிரி போதும்: APPLY NOW

விமானப்படையில் Flying and Ground Duty பதவிகளில் 340 காலிப்பணியிடங்கள் உள்ளன. வயது வரம்பு: 20 – 26 வயது வரை. தகுதி: திருமணம் ஆகாதவர்களாக இருக்க வேண்டும். தொழில்நுப்ட பிரிவில் தரைத்தளப் பணிக்கு பொறியியல் பட்டப்படிப்பு முடித்திருக்க வேண்டும். தேர்வு: உடற்தகுதி, உளவியல் சோதனை, மருத்துவ பரிசோதனை. விண்ணப்பிக்கும் தேதி: நவ.17-டிச.14 வரை. விண்ணப்பிக்க இங்கே க்ளிக் செய்யவும். வேலை தேடுவோருக்கு SHARE IT.
News November 14, 2025
162 இடங்களில் NDA கூட்டணி முன்னிலை

பிஹார் தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணும் பணி மும்முரமாக நடைபெற்று வருகிறது. தற்போதைய நிலவரப்படி, NDA – 162 இடங்களில் முன்னிலை பெற்றுள்ளது. MGB – 76, ஜன் சுராஜ் – 3, மற்றவை – 2 இடங்களில் முன்னிலையில் உள்ளன. 243 தொகுதிகளுக்கு நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில், பெரும்பான்மைக்கு 122 இடங்கள் தேவை என்பது குறிப்பிடத்தக்கது.
News November 14, 2025
CM நிதிஷ்குமாரின் வருங்காலம் கேள்விக்குறி?

பிஹார் தேர்தல் வாக்கு எண்ணிக்கையில் ஜே.டி.யு கட்சியை விட அதிக இடங்களில் பாஜக முன்னிலையில் உள்ளது. காலை 9.30 மணி நிலவரப்படி, பாஜக 71 தொகுதியிலும், ஜே.டி.யு 58 தொகுதியிலும் முன்னிலையில் உள்ளன. ஏற்கனவே NDA கூட்டணியின் CM வேட்பாளர் யார் என முடிவு செய்யப்படாத நிலையில், ஜே.டி.யு நிதிஷ்குமார் இம்முறை CM வேட்பாளர் ஆவது சந்தேகம்தான் என அரசியல் விமர்சகர்கள் கூறிவருகின்றனர்.


