India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்ற ஈரோடு எம்.பி. கணேச மூர்த்தியின் உடல்நிலை தொடர்ந்து கவலைக்கிடமாக இருப்பதாக மருத்துவமனை தெரிவித்துள்ளது. மதிமுக தொடங்கிய நாளில் இருந்து வைகோவுக்கு பக்க பலமாக இருந்த கணேச மூர்த்தி, 3 முறை எம்.பியாக தேர்வு செய்யப்பட்டிருக்கிறார். தற்போது விஷமுறிவு சிகிச்சை எடுத்து வரும் அவரது உடல்நிலை குறித்து 48 மணி நேரத்திற்கு பிறகே கூற முடியும் என்று மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்
காங்கிரஸ் சார்பாக மயிலாடுதுறை தொகுதியில் வழக்கறிஞர் ஆர். சுதா போட்டியிடுவார் என்று கட்சித் தலைமை அறிவித்துள்ளது. சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கறிஞராக பணியாற்றி வரும் இவர், காங்கிரஸ் கட்சியின் மகளிர் அணி நிர்வாகியாகவும் இருக்கிறார். காங்கிரஸ் கட்சி மற்ற அனைத்து தொகுதிகளுக்கான வேட்பாளர்களையும் ஏற்கெனவே அறிவித்துவிட்ட நிலையில் கடைசியாக மயிலாடுதுறை தொகுதியையும் அறிவித்துள்ளது.
மோசடி பத்திரப்பதிவை ரத்து செய்யும் அதிகாரத்தை மாவட்ட பதிவாளருக்கு அளிக்கும் சட்டத்திருத்தத்தை நிறுத்தி வைக்க தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. முறையாக விசாரணை நடத்தாமல் மாவட்ட பதிவாளர்கள் பத்திரத்தை ரத்து செய்வதால் பாதிக்கப்படுவதாக புதிய மனு தாக்கல் செய்யப்பட்டது. இதனை விசாரித்த உயர் நீதிமன்றம், தமிழக அரசு பதிலளிக்க உத்தரவிட்டு, வழக்கை ஏப்.4ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.
திமுக மீது விமர்சனம் வைக்க முடியாமல் அவதூறுகளை பரப்புகின்றனர் என திமுக தலைவர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். தூத்துக்குடியில் பிரசார பொதுக்கூட்டத்தில் பேசிய அவர், ‘தூத்துக்குடி துப்பாக்கிச்சூட்டை ஊடகங்களில் பார்த்துத் தெரிந்து கொண்டதாக கூறியவர் இபிஎஸ். ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூடியது திமுக. திமுக ஆட்சியின் சாதனைகளையும், அதிமுக ஆட்சியின் அவலங்களையும் எடை போட்டு மக்கள் தீர்ப்பளிப்பார்கள்’ என்றார்.
பாஜக அரசு மதத்தின் பெயரால் பிரிவினையை ஏற்படுத்தி வருகிறது என அதிமுக எம்.பி. சி.வி.சண்முகம் விமர்சித்துள்ளார். பாஜக குறித்து பேசிய அவர், “அமலாக்கத்துறையை வைத்து மிரட்டி பாஜக அரசு நாடு முழுவதும் வசூல் செய்கிறது. இரட்டை இலை சின்னத்தை முடக்க பாஜக அரசு முயற்சித்தது. ஆனால், அது முடியவில்லை. கடந்த 10 ஆண்டுகளில் அவர்கள் தமிழ்நாட்டுக்கு ஒன்றும் செய்யவில்லை” என கூறியுள்ளார்.
ESI மருத்துவமனைகளில் காலியாக உள்ள செவிலியர் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க நாளை (மார்ச் 27) கடைசி நாளாகும். B.Sc செவிலியர் படிப்புடன், ஓராண்டு பணி அனுபவம் உடைய, இந்திய செவிலியர் கவுன்சிலில் பதிவு செய்தவர்கள் இதற்கு விண்ணப்பிக்கலாம். எழுத்துத்தேர்வு மற்றும் மதிப்பெண்கள் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள். வயது 18 – 30. இணையதளம்: <
காமராஜரைப் போல முதல்வர் ஸ்டாலின் புகழடைந்துள்ளதாக முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் புகழாரம் சூட்டியுள்ளார். சிவகங்கையில் பத்திரிகையாளர்களிடையே பேசிய அவர், “மதிய உணவுத் திட்டத்தைப் போல, காலை சிற்றுண்டித் திட்டமும் நாடு முழுவதும் பரவியுள்ளது. மதிய உணவுத் திட்டத்தால் காமராஜர் புகழடைந்தது போல், சிற்றுண்டித் திட்டத்தால் முதல்வர் ஸ்டாலின் புகழடைந்துள்ளார்” என புகழ்ந்து பேசியுள்ளார்.
பாகிஸ்தானின் கைபர் பக்துன்க்வா மாகாணத்தில் நிகழ்ந்த தற்கொலைப்படை தாக்குதலில் 5 சீனர்கள் உள்பட 6 பேர் கொல்லப்பட்டனர். இஸ்லாமாபாத்திலிருந்து தாசு நோக்கிச் சென்று கொண்டிருந்த சீன கட்டுமான நிறுவனத்தைச் சேர்ந்தவர்கள் மீது வெடிபொருள் நிரப்பப்பட்ட வாகனத்தில் வந்த மர்மநபர் மோதி குண்டுகளை வெடிக்கச் செய்தார். இந்த தற்கொலைப்படை தாக்குதலுக்கு பாகிஸ்தான் அதிபர் ஆசிஃப் அலி சர்தாரி கண்டனம் தெரிவித்துள்ளார்.
குஜராத் அணிக்கு எதிரான ஐபிஎல் போட்டியில் அதிரடியாக ஆடிவந்த CSK வீரர் ரச்சின் ரவீந்திரா அரைசதம் அடிக்கும் வாய்ப்பை தவறவிட்டுள்ளார். 20 பந்துகளில் 6 பவுண்டரி, 3 சிக்ஸர்களுடன் 46 ரன்கள் அடித்த அவர், ரஷித் கான் பந்தில் ஸ்டம்பிங் முறையில் ஆட்டமிழந்துள்ளார். தற்போது CSK அணி 6 ஓவரில் 69/1 ரன்கள் குவித்துள்ளது. தொடக்க ஆட்டக்காரர் ருதுராஜ் 18*, ரஹானே 2* ரன்களுடனும் களத்தில் உள்ளனர்.
வாக்குச்சாவடி மையங்களுக்கு வாக்களிக்க செல்லும்போது செல்போன் எடுத்துச் செல்ல அனுமதி இல்லை என தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு தெரிவித்துள்ளார். ஜனநாயக கடமையை தவற விடாமல் வாக்காளர்கள் அனைவரும் வாக்களிக்க வேண்டும் என்றும் அவர் வேண்டுகோள் விடுத்தார். மேலும், தேர்தல் நடத்தை விதிகளை அமல்படுத்தி வருவதில் உறுதியாக உள்ளதாக கூறிய அவர், பணப்பட்டுவாடாவை தடுத்து வருவதாகவும் தெரிவித்தார்.
Sorry, no posts matched your criteria.