India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
நாட்டில் எந்தக் கட்சி ஆட்சிக்கு வந்தாலும், வேலையில்லா திண்டாட்டம், பணவீக்கம், ஏழ்மை மிகப்பெரிய பிரச்னையாக இருப்பதாக குலாம் நபி ஆசாத் தெரிவித்துள்ளார். சில சமயங்களில் பாஜகவுடன் காங்கிரஸ் கூட்டணி வைத்துள்ளதா? எனச் சந்தேகிக்கத் தோன்றுகிறது என்றார். காங்கிரஸ் கட்சியில் 50 ஆண்டுகளுக்கு மேல் பயணித்த குலாம் நபி ஆசாத், ஜனநாயக முற்போக்கு ஆசாத் என்ற தனிக்கட்சி தொடங்கியது குறிப்பிடத்தக்கது.
தேர்தல் பரப்புரைக்காக நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரம் வந்தடைந்தார் பிரதமர் மோடி. கேரளாவில் பிரசாரத்தை முடித்தபின் ஹெலிகாப்டரில் நெல்லை வந்த அவரை பாஜக தொண்டர்கள் உற்சாகமாக வரவேற்றனர். காரில் நின்றபடியே சாலையின் இருபுறமும் நின்ற மக்களைப் பார்த்து கையசைத்தவாறு சென்றார். இன்று நெல்லை, தென்காசி, குமரி, விருதுநகர், தூத்துக்குடி, விளவங்கோடு வேட்பாளர்களை ஆதரித்து பிரசாரம் செய்கிறார்.
தமிழகத்தை உலுக்கிய வழக்கில் 4 பேருக்கு ஆயுள் தண்டனை விதித்து திருப்பூர் மாவட்ட நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. 2023 செப்.3ஆம் தேதி பல்லடத்தில் மது அருந்தியதைத் தட்டிக்கேட்டதால் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டனர். இந்த வழக்கில் செல்லமுத்து, வெங்கடேஷ், சோனை முத்தையா, அய்யப்பனுக்கு ஆயுள் தண்டனையும், செல்வம் என்பவருக்கு 6 ஆண்டு சிறைத்தண்டனையும் விதிக்கப்பட்டுள்ளது.
சுற்றுச்சூழல் பாதுகாப்பில் பங்களிப்பை வழங்கி வரும் தனிநபர்கள் மற்றும் நிறுவனங்களுக்கு ஆண்டுதோறும் தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியம் சார்பில் “பசுமை சாம்பியன்” விருது வழங்கப்பட்டு வருகிறது. இவ்விருதுக்கு தேர்வாகும் 100 பேருக்கு தலா ₹1 லட்சம் பரிசாக வழங்கப்படுகிறது. இந்த விருதுக்கு விண்ணப்பிக்க இன்றே (ஏப்ரல் 15) கடைசி நாளாகும். இதற்கு www.tnpcb.gov.in என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம்.
பாலிவுட் நடிகை ஜான்வி கபூர், ராஜ்குமார் ராவ் நடித்துள்ள புதிய படம் ‘மிஸ்டர் அண்ட் மிஸஸ் மஹி’. தோனியின் பெயரை கொண்டு உருவாகியுள்ள இப்படம் மே 31இல் வெளியாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஜான்வி கபூர், ராஜ்குமார் ராவ் இருவரும் 7ஆம் நம்பர் கொண்ட இந்திய கிரிக்கெட் அணியின் ஜெர்சியில் இருக்கும் படத்தை படக்குழு பகிர்ந்துள்ளது. இப்படத்திற்கும், தோனிக்கும் சம்பந்தம் இருக்கிறதா என பொறுத்திருந்து பார்க்கலாம்.
பாஜக ஆட்சி தொடர்ந்தால் உலக தரம் வாய்ந்த உள்கட்டமைப்பின் மையமாக இந்தியா மாறும் என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். கேரளாவின் திருவனந்தபுரத்தில் பிரசாரம் செய்த அவர், பாஜகவின் தேர்தல் அறிக்கையை விவரித்தார். பாஜகவின் ஆட்சி தொடர்ந்தால் விண்வெளித் துறையில் இந்தியா பல்வேறு சாதனைகளை நிகழ்த்தும். விவசாயிகளின் வங்கிக் கணக்கில் கிசான் நிதி தொடர்ந்து வரும். முதியவர்கள் இலவச சிகிச்சை பெறலாம் என்றார்.
ஒவ்வொரு வகையான உணவும் செரிமானத்திற்கு குறிப்பிட்ட கால அளவை எடுத்துக் கொள்ளும். உணவியல் நிபுணர்களின் கருத்துப்படி, பழச்சாறு – 15 நிமிடங்கள், மீன்கள், நீர் சத்து மிகுந்த பழங்கள், காய்கறிகள் – 30 நிமிடங்கள், நீர் சத்து குறைந்த பழங்கள், காய்கறிகள் – 40 நிமிடங்கள், தானியங்கள் – 90 நிமிடங்கள், பருப்பு வகைகள் – 2 முதல் 3 மணி நேரம், இறைச்சி – 3 முதல் 4 மணி நேரம் வரை செரிமானத்திற்கு எடுத்துக் கொள்ளும்.
நாட்டின் சுதந்திரத்தை பாதுகாக்க பாஜக அரசை ஆட்சியில் இருந்து அகற்ற வேண்டுமென மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார். மேற்கு வங்கத்தில் பிரசாரம் செய்த அவர், பாஜக மீண்டும் ஆட்சி அமைத்தால் எதிர்காலத்தில் இந்தியாவில் தேர்தலே நடக்காது என்றார். பாஜக அரசு ஒரு எதேச்சதிகார அரசு. ஒரே நாடு, ஒரே தேர்தல், ஒரே மொழி, ஒரே உணவு என்பதுதான் அவர்களது கொள்கை என்றார்.
நாக் அஸ்வின் இயக்கி பிரபாஸ் நடிப்பில் தயாராகி வரும் திரைப்படம் ‘கல்கி 2898 ஏடி’. அமிதாப் பச்சன், கமல்ஹாசன், ராணா, துல்கர் சல்மான் என நட்சத்திர பட்டாளங்கள் நடித்து வரும் இப்படம் ஜூன் 4ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டது. இந்நிலையில், VFX பணிகள் நிறைவடையாததால் ஜூன் 20ஆம் தேதிக்கு ரிலீஸை தள்ளிவைக்க படக்குழு திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனால், பிரபாஸ் ரசிகர்கள் வருத்தமடைந்துள்ளனர்.
அமைச்சர் பொன்முடி மீதான செம்மண் குவாரி வழக்கில் மேலும் ஒருவர் பிறழ்சாட்சியம் அளித்திருக்கிறார். ஓய்வுபெற்ற கிராம நிர்வாக அலுவலர் சின்னசாமி இன்று விழுப்புரம் நீதிமன்றத்தில் ஆஜராகி பிறழ்சாட்சியம் அளித்தார். டிஜிபி அலுவலகத்தில் வைத்து தன்னிடம் கையெழுத்து பெறப்பட்டதாகவும், வழக்கு குறித்து தனக்கு எதுவும் தெரியாது என்றும் சின்னசாமி தெரிவித்துள்ளார். இதனால் வழக்கு, பொன்முடிக்கு சாதகமாக மாறுகிறது.
Sorry, no posts matched your criteria.