news

News April 16, 2024

அதிமுக அழுத்தம் அளித்ததால் தான் ₹1,000 வந்தது

image

அதிமுக அழுத்தம் கொடுத்ததால் தான் மகளிருக்கு ₹1,000 உரிமைத்தொகையை திமுக அரசு அளித்ததாக இபிஎஸ் தெரிவித்துள்ளார். சேலத்தில் பரப்புரை மேற்கொண்ட அவர், சட்டமன்றத்தில் தொடர்ந்து 3 முறை அனைத்து மகளிருக்கும் ₹1,000 உரிமைத்தொகை வழங்க வலியுறுத்தியதாகவும், தேர்தலுக்கு முன்னர் அனைவருக்கும் என கூறிய திமுக, ஆட்சிக்கு வந்து 27 மாதங்களுக்கு பிறகு தகுதி அடிப்படையில் ₹1,000 வழங்கியதாகவும் குற்றம்சாட்டியுள்ளார்.

News April 16, 2024

அங்கு ஒருவர் பிறந்தால், இருவர் இறக்கின்றனர்!

image

கிரேக்க நாட்டில் பிறப்பு விகிதத்தை விட இறப்பு விகிதம் அதிகரித்து வருகிறது. அங்கு தினமும் ஒருவர் பிறந்தால், 2 பேர் இறக்கின்றனர். 2011 இல் 1.14 கோடியாக இருந்த மக்கள் தொகை தற்போது 1.07 கோடியாக உள்ளது. 2050 இல் அங்கு மக்கள் தொகை 90 லட்சம் ஆக குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது. குழந்தைப் பெற்றுக் கொள்ள அரசு பல சலுகைகளை அளித்தாலும், அந்நாட்டு இளைஞர்கள் திருமணத்தில் ஆர்வமின்றி இருக்கின்றனர்.

News April 16, 2024

ஜூன் 7ல் INDIA கூட்டணி பிரதமர் வேட்பாளரை அறிவிப்போம்

image

INDIA கூட்டணியின் பிரதமர் வேட்பாளர் ஜூன் 7ஆம் தேதி அறிவிக்கப்படுவார் என மார்க்சிஸ்ட் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். மதுரை பிரசாரத்தில் பேசிய அவர், பாஜகவும், அதிமுகவும் நாணயத்தின் இரு பக்கங்கள் என்பதால் 2 கட்சிகளுக்கும் வாக்களிப்பது ஒன்றுதான் என விமர்சித்தார். மேலும், அதிமுகவில் ஆள் கிடைக்காததால் தான் மதுரை வேட்பாளராக சரவணன் நிறுத்தப்பட்டுள்ளதாக அவர் குற்றம்சாட்டினார்.

News April 16, 2024

ஹாட்ரிக் விக்கெட் + 100 ரன்கள் எடுத்த நரைன்

image

ராஜஸ்தான் அணிக்கு எதிரான இன்றைய போட்டியில் சத்தம் அடித்த சுனில் நரைன் ஐபிஎல்லில் ஒரு புதிய சாதனை படைத்துள்ளார். அதாவது ஹாட்ரிக் விக்கெட் + 100 ரன்கள் எடுத்த முன்றாவது வீரர் என்ற சாதனையை படைத்துள்ளார். முன்னதாக ரோஹித் ஷர்மா, வாட்சன் இந்த சாதனையை படைத்துள்ளனர். 2009இல் ஹைதராபாத் அணிக்காக விளையாடிய ரோஹித், மும்பை அணிக்கு எதிராக ஹாட்ரிக் விக்கெட்டுகளை வீழ்த்தியிருந்தார்.

News April 16, 2024

வியாழக்கிழமை முதல் வெப்பம் அதிகரிக்கும்

image

தமிழ்நாட்டில் வியாழக்கிழமை (18.04.2024) முதல் வெப்ப அலை வீசும் என்று தனியார் வானிலை ஆய்வாளர் ப்ரதீப் தெரிவித்துள்ளார். கடந்த சில நாள்களாக மழை பெய்துவரும் நிலையில், வெயிலின் தாக்கம் மீண்டும் அதிகரிக்கவுள்ளது. சென்னை உள்ளிட்ட கடலோர மாவட்டங்களில் வெப்பம் 40 டிகிரி செல்சியஸை தாண்டும் என்றும் உள் மாவட்டங்களில் 42 டிகிரி செல்சியஸை தாண்டும் என்றும் ப்ரதீப் கூறியுள்ளார். தயாராக இருங்கள் மக்களே.

News April 16, 2024

223 ரன்கள் குவித்தது கொல்கத்தா

image

ராஜஸ்தான் அணிக்கு எதிரான ஐபிஎல் போட்டியில் கொல்கத்தா அணி 6 விக்கெட்டுகள் இழப்பிற்கு 223 ரன்கள் குவித்துள்ளது. அதிரடியாக ஆடிய சுனில் நரைன் ஐபிஎல்லில் தனது முதல் சதத்தை (109) பூர்த்தி செய்தார். ரகுவன்ஷி 30, ரிங்கு சிங் 20* ரன்கள் எடுத்தனர். இதையடுத்து RR அணிக்கு 224 ரன்கள் இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. RR தரப்பில் சிறப்பாக பந்துவீசிய குல்தீப் சென், ஆவேஷ் கான் தலா 2 விக்கெட்டுகள் வீழ்த்தினர்.

News April 16, 2024

குழந்தையை கொன்று தாய் தற்கொலை

image

ஈரோடு மாவட்டத்தில் 3 வயது குழந்தையை கொன்றுவிட்டு தாய் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திருச்செங்கோட்டைச் சேர்ந்த கோகிலவாணியின் (25) கணவர் சசிதரன் கடந்த ஆண்டு விபத்தில் சிக்கி உயிரிழந்திருக்கிறார். தனிமையை தாங்கிக் கொள்ள முடியாத கோகிலவாணி, பவானியில் லாட்ஜ் எடுத்து தங்கி தற்கொலை செய்திருக்கிறார். இந்த விபரீத முடிவுக்கு முன் குழந்தையையும் கொலை செய்திருக்கிறார்.

News April 16, 2024

மலையாள பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு தடை ?

image

மலையாள பிக் பாஸ் நிகழ்ச்சி விதிமுறைகளை மீறுவதாக கண்டறியப்பட்டால், நிகழ்ச்சியை ஒளிபரப்புவதை தவிர்க்க வேண்டுமென மத்திய அரசுக்கு கேரள உயர்நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது. மோகன் லால் தொகுத்து வழங்கும் பிக் பாஸ் நிகழ்ச்சியில், சமீபத்தில் போட்டியாளர்கள் இருவர் அடிதடியில் ஈடுபட்டனர். ஒளிபரப்பு விதிமுறைகளை மீறி உடல் ரீதியான தாக்குதல் காட்சிகளை ஒளிபரப்பியதற்கு எதிராக ஆதர்ஷ் என்பவர் வழக்கு தொடர்ந்திருந்தார்.

News April 16, 2024

“சதி செய்கிறார் பிரதமர் மோடி”

image

பிரதமர் மோடி மாநிலங்களை ஒழித்துக்கட்ட மிகப்பெரிய சதி செய்வதாக முதல்வர் மு.க.ஸ்டாலின் குற்றம்சாட்டியிருக்கிறார். பிரதமரானதும் மாநிலங்களுக்கு செல்லும் நிதியை எப்படி குறைக்கலாம் என்று மோடி சதி செய்ததாக ஸ்டாலின் பேசியுள்ளார். ED, CBIஐ வைத்து கட்சிகளை உடைப்பது, எம்.எல்.ஏக்களை விலைக்கு வாங்குவது, முதல்வர்களை கைது செய்வது ஆகியவைதான் மோடியின் செயல்கள் என்று முதல்வர் காட்டமாக பேசியிருக்கிறார்.

News April 16, 2024

சதம் அடித்தார் சுனில் நரைன்

image

கொல்கத்தாவில் நடைபெற்று வரும் போட்டியில் அதிரடியாக ஆடி வரும் KKR வீரர் சுனில் நரைன் 49 பந்துகளில் சதம் அடித்துள்ளார். இது ஐபிஎல்லில் இவர் அடிக்கும் முதல் சதமாகும். இவரது அதிரடியால் KKR 16 ஓவரில் 184/3 ரன்கள் எடுத்துள்ளது. இன்றைய போட்டியில் மட்டும் நரைன் 11 பவுண்டரிகள், 6 சிக்ஸர்கள் பறக்கவிட்டுள்ளார். இந்த சதத்தின் மூலம் KKR அணிக்காக விளையாடி சதம் அடித்த 3ஆவது வீரர் என்ற பெருமையைப் பெற்றுள்ளார்.

error: Content is protected !!