News April 16, 2024

ஹாட்ரிக் விக்கெட் + 100 ரன்கள் எடுத்த நரைன்

image

ராஜஸ்தான் அணிக்கு எதிரான இன்றைய போட்டியில் சத்தம் அடித்த சுனில் நரைன் ஐபிஎல்லில் ஒரு புதிய சாதனை படைத்துள்ளார். அதாவது ஹாட்ரிக் விக்கெட் + 100 ரன்கள் எடுத்த முன்றாவது வீரர் என்ற சாதனையை படைத்துள்ளார். முன்னதாக ரோஹித் ஷர்மா, வாட்சன் இந்த சாதனையை படைத்துள்ளனர். 2009இல் ஹைதராபாத் அணிக்காக விளையாடிய ரோஹித், மும்பை அணிக்கு எதிராக ஹாட்ரிக் விக்கெட்டுகளை வீழ்த்தியிருந்தார்.

Similar News

News November 10, 2025

டிரம்ப்பால் அடுத்தடுத்து விலகிய BBC நிர்வாகிகள்!

image

டிரம்ப் குறித்த ஒரு ஆவணப்படத்தால், BBC 2 உயர் அதிகாரிகளை இழந்துள்ளது. டிரம்ப் 2021-ல் ஆற்றிய உரை, கேபிடல் ஹில் கலவரத்தை தூண்டும் விதமாக இருந்ததாக BBC ஆவணப்படம் வெளியிட்டது. ஆனால், 2 உரைகளை எடிட் செய்து தவறான பிம்பத்தை ஏற்படுத்தியதாக டிரம்ப் குற்றம்சாட்டிய நிலையில் விசாரணையில் நிரூபணமானது. இதற்கு பொறுப்பேற்று BBC டைரக்டர் ஜெனரல் டிம் டேவி, செய்திப்பிரிவு தலைவர் டெபோரா டர்னஸ் ராஜினாமா செய்துள்ளனர்.

News November 10, 2025

ஹீரோ to விஜய் வில்லன் வரை! அபிநய்யின் திரை வாழ்க்கை

image

பிரபல நடிகர் <<18247739>>அபிநய் <<>>இன்று காலமானார். ‘துள்ளுவதோ இளமை’ படத்தில் அறிமுகமான அவர், ஜங்ஷன், சிங்காரச் சென்னை போன்ற படங்களில் ஹீரோவாக நடித்துள்ளார். பிறகு தாஸ், வல்லவனுக்கு புல்லும் ஆயுதம், என்றென்றும் புன்னகை போன்ற படங்களில் முக்கிய வேடத்தில் நடித்துள்ளார். ‘துப்பாக்கி’ படத்தில் வித்யூத் ஜம்வாலுக்கு பின்னணி குரலும் கொடுத்தார். பிரபலமான 3 Roses, Oreo விளம்பரங்களிலும் அபிநய் நடித்துள்ளார்.

News November 10, 2025

அதிமுகவுடன் கூட்டணி இல்லை.. அதிகாரப்பூர்வமாக அறிவித்தார்

image

அதிமுக தலைமை வகிக்கும் NDA கூட்டணியில் மீண்டும் இணையப்போவதில்லை என டிடிவி தினகரன் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். சென்னையில், செய்தியாளர்களை சந்தித்த அவர், ரோட்டில் கடை போட்டு கூவிக் கூவி அழைப்பது போல கூட்டணிக்கு அழைக்கும் நிலையில் EPS உள்ளதாக சாடினார். மேலும், விஜய்யை கூட்டணிக்கு வரவில்லை என்றால் கட்சி(தவெக) அழிந்துவிடும் என சிலர் மிரட்டும் தொனியில் பேசுவதாகவும் குற்றம்சாட்டியுள்ளார்.

error: Content is protected !!