India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
மக்களவைத் தேர்தலில் போட்டியிடவில்லை என மூத்த அரசியல் தலைவர் குலாம் நபி ஆசாத் தெரிவித்துள்ளார். ஜனநாயக முற்போக்கு ஆசாத் கட்சித் தலைவரான அவர், ஜம்மு-காஷ்மீர் அனந்த்நாக் மாவட்டத்தில் உள்ள ரஜோரி தொகுதியில் போட்டியிட மனுத்தாக்கல் செய்திருந்தார். இந்த நிலையில், திடீரென தனது முடிவிலிருந்து பின்வாங்கிய அவர், தனக்கு பதிலாக தனது வழக்கறிஞர் அந்தத் தொகுதியில் போட்டியிடுவார் என அறிவித்துள்ளார்.
ஜப்பானின் தென்மேற்கு பகுதிகளில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டதால் மக்களுக்கு எச்சரிக்கை அளிக்கப்பட்டுள்ளது. பூமிக்கு அடியில் 25 கிமீ ஆழத்தில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கம், ரிக்டர் அளவில் 6.3ஆக பதிவாகியிருக்கிறது. ஆனால், சுனாமி எச்சரிக்கை ஏதும் விடுக்கப்படவில்லை. இந்த நிலநடுக்கம் கியூஷு மற்றும் ஷிக்கோக்கு தீவுகளில் அதிக சேதத்தை ஏற்படுத்தியிருக்கலாம் என்று அஞ்சப்படுகிறது.
இந்தியாவின் கச்சா எண்ணெய் இறக்குமதி சார்பு 87.7% என்ற புதிய உச்சத்தை எட்டியுள்ளது. அதாவது, மொத்த தேவையில் 87.7% வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி ஆகிறது. இது அதற்கு முந்தைய நிதியாண்டில் 87.4%ஆக இருந்தது. அதே நேரம், கடந்த நிதியாண்டில் கச்சா எண்ணெய்க்கு செலவிட்ட தொகை 157.5 பில்லியன் டாலரில் இருந்து நடப்பு நிதியாண்டில் 132.4 பில்லியன் டாலராக குறைந்துள்ளது. மொத்த இறக்குமதி 232.5 மில்லியன் டன் ஆகும்.
நடிகர் சித்தார்த்தின் பிறந்த நாளை முன்னிட்டு இந்தியன்-2 படக்குழு சிறப்பு போஸ்டர் ஒன்றை வெளியிட்டு அவரை வாழ்த்தியுள்ளது. ஷங்கர் இயக்கத்தில் கமல் நடித்த இந்தியன் படம் 1996இல் வெளியாகி சக்கை போடு போட்டது. இதன் 2ஆவது பாகம் தற்போது உருவாகி வரும் சூழலில், சித்தார்த்தும் அதில் நடிக்கிறார். இந்த நிலையில், சித்தார்த் தொடர்பான போஸ்டரை வெளியிட்டுள்ள படக்குழு அவரை ஸ்பெஷலாக வாழ்த்தியுள்ளது.
மத்திய அரசு ஊழியர்களுக்கான அகவிலைப் படி கடந்த மாதம் 4% உயர்த்தப்பட்டது. இந்தத் தொகை, சில ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு மார்ச் மாத ஊதியத்துடன் வரவில்லை எனத் தகவல் வெளியானது. இந்த நிலையில், தற்போது திருத்தி அமைக்கப்பட்ட ஊதியத்தை ஏப்ரல் மாத சம்பளத்துடன் வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. அதன்படி 3 மாத நிலுவைத் தொகையுடன் ஊதியம் வழங்கப்பட உள்ளதாக அரசுத் தரப்பு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
டெல்லிக்கு 90 ரன்களை இலக்காக நிர்ணயித்தது குஜராத் அணி. அகமதாபாத்தில் நடைபெறும் போட்டியில் DC பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் GT வீரர்கள் அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர். இதனால், அந்த அணி 17.3 ஓவர்களில் 89 ரன்களில் ஆல் அவுட்டாகியதுடன் நடப்பு ஐபிஎல் போட்டியில் குறைவான ரன்களை எடுத்த அணி என்ற மோசமான சாதனையை படைத்தது. ரஷித் கான் மட்டும் 31 ரன்கள் எடுத்தார். DC தரப்பில் முகேஷ் குமார் 3 விக்கெட் வீழ்த்தினார்.
மோடியின் வாக்குறுதிகளை நம்பி கேரள மக்கள் வாக்களிக்க மாட்டார்கள் என முதல்வர் பினராயி விஜயன் தெரிவித்துள்ளார். பிரதமர் மோடி தேர்தல் பரப்புரையில் விதவிதமான வாக்குறுதிகளை அள்ளி வீசுகிறார். மக்கள் ஒருமுறை நம்புவார்கள், ஆனால் மீண்டும் மீண்டும் நம்ப மாட்டார்கள் என்று குறிப்பிட்டுள்ள அவர், மோடி ஆர்எஸ்எஸ் அமைப்பின் பிரதமர் என விமர்சித்தார். ஏப்ரல் 26ஆம் தேதி கேரளாவில் தேர்தல் நடைபெற உள்ளது.
உலக அளவில் இந்தியா 144.17 கோடி மக்கள் தொகையுடன் முதல் இடத்தில் இருப்பதாக ஐக்கிய நாடுகளின் மக்கள் தொகை நிதியம் அறிக்கை வெளியிட்டுள்ளது. அதன்படி, சீனா 142.5 கோடி மக்கள் தொகையுடன் 2ஆவது இடத்தில் உள்ளது. 2011ஆம் ஆண்டின் மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, இந்தியாவின் மக்கள் தொகை 121 கோடியாக இருந்தது. தற்போதைய மக்கள் தொகையில் 0 – 14 வயதுடையவர்கள் 24% பேர், 10 – 19 வயதுடையவர்கள் 17% ஆகும்.
பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளதால், வீட்டில் இருக்கும் குழந்தைகளை வெயில் நேரங்களில் பாதுகாப்பது அவசியம். குறிப்பாக 3 -12 வயதுள்ள குழந்தைகளை காலை 11 மணி முதல் மாலை 4 மணி வரை வெயிலில் விளையாட அனுமதிக்க வேண்டாம். கூல்டிரிங்ஸ், ஐஸ்கிரீம் தருவதற்கு பதிலாக மோர், இளநீர், பழச்சாறு, நுங்கு கொடுக்க வேண்டும். குழந்தைகளுக்கு அம்மை போன்ற பாதிப்புகள் தென்பட்டால் உடனடியாக மருத்துவரை அணுக வேண்டும்.
மத்திய அரசின் பல்வேறு துறைகள் மற்றும் நிறுவனங்களில் காலியாக உள்ள இளநிலை பொறியாளர் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க நாளை கடைசி நாளாகும். மத்திய பணியாளர் தேர்வு வாரியம் நடத்தும் தேர்வில் சிவில், மெக்கானிக்கல், எலக்ட்ரிக்கல் ஆகிய பிரிவுகளில் டிகிரி அல்லது டிப்ளமோ படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். சம்பளம்: ₹35,400 முதல் 1,12,400 வரை. ssc.gov.in என்ற இணையதளத்தில் நாளைக்குள் விண்ணப்பிக்கவும்.
Sorry, no posts matched your criteria.