News April 17, 2024

ஜப்பானில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்

image

ஜப்பானின் தென்மேற்கு பகுதிகளில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டதால் மக்களுக்கு எச்சரிக்கை அளிக்கப்பட்டுள்ளது. பூமிக்கு அடியில் 25 கிமீ ஆழத்தில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கம், ரிக்டர் அளவில் 6.3ஆக பதிவாகியிருக்கிறது. ஆனால், சுனாமி எச்சரிக்கை ஏதும் விடுக்கப்படவில்லை. இந்த நிலநடுக்கம் கியூஷு மற்றும் ஷிக்கோக்கு தீவுகளில் அதிக சேதத்தை ஏற்படுத்தியிருக்கலாம் என்று அஞ்சப்படுகிறது.

Similar News

News November 10, 2025

பிரபல நடிகர் மரணம்… இதயத்தை நொறுக்கும் PHOTO

image

பார்க்க சாதாரணமாக தெரியும் இந்த போட்டோ, உங்களின் இதயத்தை ஒரு கணம் நொறுக்கலாம். மறைந்த நடிகர் அபிநய், தனது அம்மாவுடன் இருக்கும் போட்டோ இது. SM-ல் வைரலாகிவரும் இந்த போட்டோதான், அபிநய்யின் வாட்ஸ்ஆப் DP. மேலும், சில நாள்களுக்கு முன் “SLOWLY BUT SURELY” என ஸ்டேட்டஸ் வைத்திருந்துள்ளார். மறைந்த தாயிடம் செல்லப்போவதையே அவர் இப்படி பதிவிட்டிருக்கிறார் என பலரும் வேதனையை பகிர்ந்து வருகின்றனர். RIP

News November 10, 2025

மலச்சிக்கலுக்கு நிவாரணம் தரும் பானங்கள்

image

குறைவான உடல் உழைப்பு, மன அழுத்தம், நீர்ச்சத்து குறைபாடு, உணவுப் பழக்கம் ஆகியவை மலச்சிக்கலுக்கான முக்கிய காரணங்கள். இது பெரியவர்களைவிட குழந்தைகளை அதிகமாக பாதிப்பதாக ஆய்வுகள் குறிப்பிடுகின்றன. சில பானங்களை அருந்துவதன் மூலம் மலச்சிக்கலில் இருந்து தப்பிக்கலாம். மேலே கொடுக்கப்பட்டுள்ள அந்த பானங்களின் லிஸ்ட்டை ஒவ்வொன்றாக SWIPE செய்து பாருங்கள்.

News November 10, 2025

டெல்லி செங்கோட்டையில் தீவிரவாத சதிச்செயலா?

image

டெல்லி செங்கோட்டை அருகே காரில் ஏற்பட்ட வெடி விபத்து பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கடந்த 2 நாள்களில் பயங்கரவாத அமைப்புகளை சேர்ந்த 7 பேர் கைது செய்யப்பட்டனர். விசாரணையில் கிடைத்த தகவலின் அடிப்படையில் ஹரியானாவின் ஃபரிதாபாத்தில் இன்று 2 இடங்களில் 2900 கிலோ வெடி பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டது. இந்நிலையில் செங்கோட்டையில் நடத்த கார் வெடி விபத்து தீவிரவாத சதிச்செயலா என்ற கேள்வி எழுந்துள்ளது.

error: Content is protected !!