news

News May 1, 2024

கீர்த்தி சுரேஷின் ரிவால்வர் ரீட்டா படப்பிடிப்பு நிறைவு

image

கீர்த்தி சுரேஷ் நடிப்பில் உருவாகி வந்த ரிவால்வர் ரீட்டா படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளது. பேஷன் ஸ்டுடியோஸ் தயாரிப்பில், இயக்குநர் சந்துரு இயக்கத்தில் படப்பிடிப்பு நடந்து வந்தது. இந்நிலையில் இப்படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது. மேலும், அதுதொடர்பான புகைப்படம், வீடியோவையும் படக்குழு எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்துள்ளது.

News May 1, 2024

பிட்-காயின் விலை மளமளவென சரிகிறது

image

டிஜிட்டல் கரன்சியான பிட்-காயின் கடந்த ஒரு மாதத்தில் ₹12 லட்சம் மதிப்பை இழந்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் அதன் மதிப்பு சுமார் ₹6 லட்சம் சரிந்துள்ளது. நேற்று மாலை ₹53.5 லட்சத்துக்கு வர்த்தம் ஆன ஒரு பிட்-காயின், தற்போது ₹47.5 லட்சத்துக்கு மட்டுமே வர்த்தகம் ஆகிறது. அமெரிக்க பொருளாதார முடிவுகள் பிட்-காயினின் விலையை பாதித்திருப்பதாக நிபுணர்கள் கூறுகின்றனர்.

News May 1, 2024

10ஆம் வகுப்பு தமிழ் புத்தகத்தில் கருணாநிதி பாடம்

image

வரும் கல்வியாண்டில் 10ஆம் வகுப்பு தமிழ் புத்தகத்தில் முன்னாள் முதல்வர் கருணாநிதி குறித்த பாடம் அறிமுகமாகிறது. ஏற்கெனவே, 9ஆம் வகுப்பு பாட புத்தகத்தில் அவரைப் பற்றிய பாடம் இடம்பெற்றுள்ளது. போராட்ட கலைஞர், பேச்சு கலைஞர், நாடக கலைஞர் என அவரின் சிறப்புகளை 11 தலைப்புகளில் உள்ளடக்கி பாடம் தயாரிக்கப்பட்டுள்ளது. அத்துடன், அவர் சிறந்து விளங்கிய துறைகள், அவரின் சாதனைகளும் அதில் இடம்பெற்றுள்ளது.

News May 1, 2024

70 கோடி மக்கள் வேலைவாய்ப்பில்லாமல் தவிப்பு

image

நாட்டில் 70 கோடி பேர் வேலை இல்லாமல் தவிப்பதாக பிரியங்கா காந்தி குற்றம்சாட்டியுள்ளார். அசாம் மாநிலம் துப்ரியில் நடந்த பிரசாரக் கூட்டத்தில் பேசிய அவர், மத்தியில் ஆட்சியில் உள்ள பாஜக அரசு, தனது சொந்த நலன்களை மனதில் வைத்து செயல்படுவதாகவும், மக்கள் பிரச்னைகள் குறித்து கவலைப்படவில்லை என்றும் விமர்சித்தார். நாட்டில் வேலையில்லாத் திண்டாட்டம் தற்போது உச்சத்தில் இருப்பதாகவும் அவர் கூறினார்.

News May 1, 2024

தேவைப்பட்டால் காவல்துறை உத்தரவில் மாற்றம்

image

தனி நபர்கள் வாகனத்தில் போலீஸ், ஊடகம் போன்ற ஸ்டிக்கர்களை பயன்படுத்த சமீபத்தில் போலீசார் தடை விதித்தனர். இதற்கு சிலர் ஆதரவும், சிலர் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில், குற்றவாளிகள் இதுபோன்ற ஸ்டிக்கர்களை ஒட்டி குற்றச்செயல்களில் ஈடுபடுவதை தடுக்கவே இந்த முடிவு எடுக்கப்பட்டது. தேவைப்பட்டால் அறிவிப்பில் மாற்றம் செய்வது குறித்து ஆலோசித்து வருவதாகவும் காவல்துறை தெரிவித்துள்ளது.

News May 1, 2024

சுவிட்சர்லாந்தில் ரகசிய AI ஆய்வு கூடம் அமைத்த ஆப்பிள்

image

சுவிட்சர்லாந்தின் ஜூரிச் நகரில் ரகசியமாக AI ஆய்வுக் கூடத்தை ஆப்பிள் நிறுவனம் அமைத்திருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. AI தொழில்நுட்பத்துக்கு முக்கியத்துவம் கொடுத்து புதிய தயாரிப்புகளை பல்வேறு நிறுவனங்களும் தயாரித்து வருகின்றன. இதற்கு ஆப்பிளும் விதிவிலக்கல்ல. கூகுளில் இருந்து 36 AI நிபுணர்களை பணியில் அமர்த்தி, ரகசிய ஆய்வு கூடம் மூலம் புதிய தயாரிப்புகளை ஆப்பிள் உருவாக்கி வருவதாகக் கூறப்படுகிறது.

News May 1, 2024

தண்ணீர் சூடாக வருகிறதா? அப்போ இதை ட்ரை பண்ணுங்க

image

கோடை காலத்தில் டேங்கில் இருந்து தண்ணீர் சூடாக வருவது பலருக்கு சிரமத்தை கொடுக்கும். இதனை போக்க, கோடையிலும் தண்ணீரை குளிர்ச்சியாக வைத்திருக்க வேண்டியது அவசியமாகிறது. குறிப்பாக, கறுப்பு நிறத்தை உடைய வாட்டர் டேங்குகள் சூரிய வெப்பத்தை தன்னகத்தே ஈர்த்துக்கொள்வதால் நீர் எளிதில் சூடாகிறது. இதனை தவிர்க்க, வெள்ளை டேங்குகளை பயன்படுத்தலாம்
அல்லது கருப்பு டேங்குகளுக்கு வெள்ளை வர்ணம் பூசி உபயோகிக்கலாம்.

News May 1, 2024

முன் ஜாமின் கோரி பிரஜ்வால் ரேவண்ணா மனுதாக்கல்

image

பாலியல் வழக்கில் முன் ஜாமின் கோரி பிரஜ்வால் ரேவண்ணா மனு தாக்கல் செய்துள்ளார். மதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சியின் எம்.பி பிரஜ்வால், பல பெண்களுடன் நெருக்கமாக இருந்த வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. இது தொடர்பாக அவர் மீது வழக்குப் பதியப்பட்டுள்ள நிலையில், தற்போது நீதிமன்றத்தை அவர் நாடியுள்ளார். கட்சியில் இருந்து சஸ்பெண்ட் செய்யப்பட்ட நிலையில், தற்போது அவர் வெளிநாட்டில் தலைமறைவாக உள்ளார்.

News May 1, 2024

ஒரே நாளில் 45.43 கோடி யூனிட் மின் நுகர்வு

image

தமிழகத்தின் மின் நுகர்வு இதுவரை இல்லாத வகையில் உச்சத்தை தொட்டுள்ளது. கோடை வெயிலால் வீட்டில் உள்ள மக்கள் ஏசி, ஃபேன் போன்றவற்றை அதிக அளவில் பயன்படுத்துகின்றனர். இதனால் நாள்தோறும் மின் நுகர்வு அதிகரித்து வரும் சூழலில், நேற்று ஒரே நாளில் 45.43 கோடி யூனிட் பதிவாகியுள்ளதாக தமிழ்நாடு மின்சார வாரியம் தெரிவித்துள்ளது. கோடைகாலம் முடியும் வரை மின் நுகர்வு அதிகரிக்கும் எனவும் மின்சார வாரியம் கூறியுள்ளது.

News May 1, 2024

கோவிஷீல்டு தடுப்பூசி நிறுவனத்துக்கு எதிராக வழக்கு

image

கோவிஷீல்டு தடுப்பூசி தொடர்பாக உச்சநீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. கோவிஷீல்டு தடுப்பூசி செலுத்தி உயிரிழந்தவர்களுக்கும், பாதிக்கப்பட்டவர்களுக்கும் உரிய இழப்பீட்டை வழங்க உத்தரவிடக்கோரி அந்த மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. முன்னதாக, கோவிஷீல்டு தடுப்பூசியால் பக்க விளைவுகள் ஏற்பட வாய்ப்பு இருப்பதாக, அந்த மருந்தை தயாரித்த ஆஸ்ட்ரஜெனக்கா நிறுவனம் ஒப்புக்கொண்டது குறிபிப்பிடத்தக்கது.

error: Content is protected !!