India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
தமிழகத்தில் அடுத்த 3 மணி நேரத்திற்கு (இரவு 10 மணி வரை) மழை பெய்யக் கூடிய மாவட்டங்களின் பட்டியலை சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ளது. அதன்படி, பெரம்பலூர், திருச்சி, கரூர், நாமக்கல், ஈரோடு, திருப்பூர், தேனி, திண்டுக்கல், கன்னியாகுமரி, திருநெல்வேலி, தென்காசி ஆகிய மாவட்டங்களில் இடி மற்றும் மின்னலுடன் கூடிய மழை பெய்யும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
CUET PG தேர்வு முடிவுகளை தேசிய தேர்வுகள் முகமை இன்றிரவு வெளியிட இருப்பதாக யு.ஜி.சி தலைவர் ஜெகதீஷ் குமார் தெரிவித்துள்ளார். நாடு முழுவதும் உள்ள மத்திய பல்கலைக்கழகங்களில் சேர்வதற்கு நடத்தப்படும் CUET PG தேர்வு மார்ச் 11 முதல் மார்ச் 18 ஆம் தேதி வரை நடைபெற்றது. ஏப்.5 ஆம் தேதி மாதிரி விடைத்தாள் வெளியான நிலையில், இன்று <
பிரதமர் மோடியால் மட்டுமல்ல, உலகின் எந்த சக்தியாலும் தமிழர்களை வீழ்த்த முடியாதென ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். நெல்லையில் I.N.D.I.A கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து நடைபெற்ற பிரசாரக் கூட்டத்தில் பேசிய அவர், “சமூகநீதியின் பாதையில் எப்படி நடப்பது என்பதை நாட்டுக்கே தமிழ்நாட்டு மக்கள் தான் தெரியப்படுத்தியுள்ளீர்கள். இதனால் தான் இந்திய ஒற்றுமை பயணத்தை தமிழ்நாட்டில் இருந்து தொடங்கினேன்” என்றார்.
லக்னோவில் இன்று நடைபெறும் ஐபிஎல் போட்டியில் லக்னோ, டெல்லி அணிகள் மோதுகின்றன. இதில் டாஸ் வென்றுள்ள லக்னோ அணி கேப்டன் கே.எல்.ராகுல் பேட்டிங் தேர்வு செய்துள்ளார். இதையடுத்து இன்னும் சற்று நேரத்தில் DC அணி பவுலிங் செய்ய உள்ளது. இதுவரை ஆடிய போட்டிகளில் 3 வெற்றியுடன் LSG 3ஆவது இடத்திலும், DC 1 வெற்றியுடன் கடைசி இடத்திலும் உள்ளது. இன்று எந்த அணி வெற்றிபெறும்?
மார்ச் மாத சில்லறை பணவீக்கம் (CPI) 4.85 சதவீதமாக குறைந்திருப்பதாக மத்திய அரசு அறிவித்துள்ளது. பிப்ரவரியில் 5.09 சதவீதமாக இருந்த CPI, தற்போது கணிசமாக குறைந்துள்ளது. கடந்த ஆண்டு மார்ச் மாதத்தில் CPI 5.66 சதவீதமாக இருந்தது. பணவீக்கம் குறைந்துள்ளதால் ரிசர்வ் வங்கி, ரெபோ வட்டி விகிதத்தை குறைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அப்படி குறையும்பட்சத்தில் வீட்டுக் கடன் ஆகியவற்றின் வட்டி குறையும்.
அடுத்த 7 நாட்களுக்கு செல் ஃபோனில் ‘ஹலோ’ என்று சொல்லாமல் ‘தாமரை வணக்கம்’ என்று சொல்லுமாறு பாஜகவினருக்கு மாநிலத் தலைவர் அண்ணாமலை வேண்டுகோள் விடுத்துள்ளார். ஏப்ரல் 19ஆம் தேதி தமிழ்நாட்டில் வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. இதற்காக கோவை பாஜக வேட்பாளரான அண்ணாமலை தீவிர பிரசாரம் செய்து வருகிறார். அதன் ஒரு பகுதியாக பாஜக தொண்டர்களுக்கு அவர் இந்த் வேண்டுகோளை விடுத்திருக்கிறார்.
மோடி மீண்டும் ஆட்சி அமைத்தால் அரசியலமைப்பிற்கு பாதிப்பு ஏற்படும் என்ற எதிர்க்கட்சிகளின் கருத்துக்கு பிரதமர் மோடி கண்டனம் தெரிவித்துள்ளார். இது குறித்து பேசிய அவர், அரசியலமைப்பை உருவாக்கிய அம்பேத்கரே திரும்ப வந்தாலும் அரசியலமைப்பை அழிக்க முடியாது என்றார். எமர்ஜென்சி காலத்தில்தான் அரசியலமைப்பு ஆபத்தில் இருந்ததாக குறிப்பிட்ட அவர், 370 பிரிவை நீக்கியதற்காக அம்பேத்கர் தன்னை ஆசீர்வதிப்பார் என்றார்.
‘கனா’ படத்தில் நடித்து பிரபலமானவர் தர்ஷன், நடிகை அஞ்சு குரியனை ரகசிய திருமணம் செய்து கொண்டதாக தகவல் பரவி வருகிறது. அவர்கள் திருமணம் செய்தது மாதிரியான புகைப்படங்களும் இணையத்தில் வலம் வரத் தொடங்கியுள்ளன. ஆனால், அது நகை விளம்பரத்திற்காக எடுக்கப்பட்ட புகைப்படம் எனவும் கூறப்படுகிறது. இருவரும் காதலிப்பதாக கூறப்படும் நிலையில், திருமணம் குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு எதுவும் வெளிவரவில்லை.
கோவை தொகுதியில் அண்ணாமலைக்கு பிரசாரம் செய்ய முடியாது என்று பாமக அறிவித்துள்ளது. அதற்கு காரணங்களாக (1) வேட்பாளர் பாமக அலுவலகத்திற்கு வரவில்லை (2) வேட்பாளர் அறிமுக கூட்டத்துக்கு பாமகவை அழைக்கவில்லை (3) வேட்புமனு தாக்கலுக்கு பாமகவை அழைக்கவில்லை (4) பாஜக பிரசாரங்களுக்கு பாமகவுக்கு அழைப்பு இல்லை (5) பாஜக பொறுப்பாளர் கூட்டணி தலைவர்களை மதிப்பதில்லை என்று பாமக பட்டியலிட்டுள்ளது.
2013ஆம் ஆண்டைப் போன்று, டெல்லியில் குடியரசுத் தலைவர் ஆட்சியை அமல்படுத்த பாஜக முயற்சித்து வருவதாக ஆம் ஆத்மி அமைச்சர் செளரப் பரத்வாஜ் குற்றம்சாட்டியுள்ளார். டெல்லியில் செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர், “டெல்லியில் கடந்த 25 ஆண்டுகளில் பாஜக ஆட்சியில் இல்லை. ஒரு தேர்தலில் கூட பாஜக வென்றதில்லை. இப்போது தேர்தல் நடந்தாலும் அரவிந்த் கெஜ்ரிவால் தான் வெற்றி பெறுவார் என அவர்களுக்கு தெரியும்” என்றார்.
Sorry, no posts matched your criteria.