News May 1, 2024

வன்கொடுமை குற்றவாளிக்கு மோடி பாதுகாப்பு அளிக்கிறார்

image

கர்நாடக பெண்களுக்கு எதிரான கொடூரமான குற்றங்கள் குறித்து பிரதமர் மோடி மௌனம் காப்பது வெட்கக்கேடானது என ராகுல் காந்தி கண்டித்துள்ளார். பாஜக கூட்டணியில் உள்ள JDS கட்சியின் வேட்பாளர் பிரஜ்வால் நாட்டை விட்டு எப்படி வெளியேறினார் என கேள்வி எழுப்பிய ராகுல், எல்லாம் தெரிந்திருந்தும் வாக்குக்காக கைசர்கஞ்ச் முதல் கர்நாடகா வரையில் உள்ள, வன்கொடுமை குற்றவாளிகளுக்கு மோடி பாதுகாப்பு அளிக்கிறார் எனச் சாடினார்

Similar News

News December 14, 2025

இந்தியாவில் மெஸ்ஸி PHOTOS

image

கால்பந்தாட்டத்தின் மிகச்சிறந்த வீரர்களில் ஒருவரான லியோனல் மெஸ்ஸி, நேற்று இந்தியா வந்தடைந்தார். காலை கொல்கத்தாவிலும், மாலை ஹைதராபாத்திலும் ரசிகர்களை சந்தித்தார். கொல்கத்தாவில், நடிகர் ஷாருக்கான் அவரை நேரில் சென்று சந்தித்தார். ஹைதராபாத்தில், காங். தலைவர் ராகுல் காந்தி, தெலங்கானா CM ரேவந்த் ரெட்டி ஆகியோர் சந்தித்தனர். மெஸ்ஸியின் இந்திய வருகை தொடர்பான போட்டோக்களை மேலே பகிர்ந்துள்ளோம். SHARE.

News December 14, 2025

செங்கோட்டையனுக்கு அதிர்ச்சி.. பரபரப்பு குற்றச்சாட்டு

image

அதிமுகவில் மீண்டும் இணைந்த கே.கே.செல்வம், அவரது சித்தப்பாவான செங்கோட்டையனுக்கு எதிராக பரபரப்பு புகார் தெரிவித்துள்ளார். செங்கோட்டையன் பலரிடம் பணம் பெற்றுக் கொண்டு தற்போதுவரை கொடுக்கவில்லை எனவும், அவர் கடன் வாங்கியவர்களின் பட்டியலை சில நாள்களில் வெளியிட இருப்பதாகவும் கே.கே.செல்வம் குண்டை தூக்கி போட்டுள்ளார். 2026 தேர்தலில் செங்கோட்டையனை தோற்கடிப்பேன் என்றும் அவர் சூளுரைத்துள்ளார்.

News December 14, 2025

BREAKING: ஈரோடு விஜய் பரப்புரைக்கு அனுமதி

image

ஈரோட்டில் டிச.18-ம் தேதி விஜய் பரப்புரை செய்ய போலீஸ் அனுமதி அளித்துள்ளது. பெருந்துறை விஜயமங்கலம் அருகே பரப்புரை நடத்த நிபந்தனைகளுடன் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இந்த இடம் அறநிலையத்துறைக்கு சொந்தமானது என்பதால், தவெக தரப்பில் ₹50,000 கட்டணம், ₹50,000 டெபாசிட் செய்யப்பட்டுள்ளது. இதன் பிறகே அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. காலை 11 முதல் மதியம் 1 மணி வரை பரப்புரை நடத்தலாம் என்றும் போலீஸ் தெரிவித்துள்ளது.

error: Content is protected !!