news

News April 13, 2024

ஏப்.15 முதல் தடை: வங்கிக் கணக்கில் ₹5000 செலுத்தப்படும்

image

ஏப்.15ஆம் தேதி முதல் ஜூன் 14ஆம் தேதி வரை மீன்பிடித் தடைக்காலம் அமல்படுத்தப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. தமிழக கடல் பகுதியில் 60 நாட்களுக்கு மீன்களின் இனப்பெருக்க காலமாக அமல்படுத்தப்படுவதால், மீன்பிடிக்க தடைவிதிக்கப்பட்டுள்ளது. இதனால், மீனவர்கள் தங்களது குடும்பத்தை சிரமமின்றி நடத்த, குடும்பம் ஒன்றுக்கு தலா ₹5000 வழங்கப்படும். இந்த நிதி விரைவில் மீனவர்களின் வங்கிக் கணக்கில் செலுத்தப்படும்.

News April 13, 2024

நடித்த முதல் 2 படங்களும் ₹2,900 கோடி வசூல்

image

காஷ்மீரை சேர்ந்த ஜாய்ரா வாசிம், நடித்த முதல் 2 படங்களுமே ₹2,900 கோடி வசூல் செய்து சாதனை படைத்துள்ளன. தனது 15 வயதில் அமீர்கானுடன் முதலில் அவர் நடித்த தங்கல் படம், ₹2,070 கோடி வசூலித்தது. இதில் நடித்ததற்கு அவருக்கு தேசிய விருது கிடைத்தது. அமீர்கானுடன் 2வதாக நடித்த தி சீக்ரட் சூப்பர் ஸ்டார் படம் ₹912 கோடி வசூலித்தது. 3வது படமான தி ஸ்கை இஸ் பிங்க் தோல்வியடையவே, நடிப்பதை அவர் நிறுத்தி கொண்டார்.

News April 13, 2024

2024 தேர்தல்: பாஜக Vs பாஜக (1)

image

மக்களவைத் தேர்தலில் போட்டியிட வாய்ப்பு அளிக்கப்படாததால் அதிருப்தியடைந்து, பாஜக வேட்பாளர்களை எதிர்த்து அக்கட்சியினரே பல இடங்களில் போட்டியிடுகின்றனர். கர்நாடக முன்னாள் முதல்வரும், பாஜக மூத்த தலைவருமான ஈஸ்வரப்பா, தேர்தலில் போட்டியிட தனது மகனுக்கு சீட் தரப்படாததால், சிவமொக்கா தொகுதியில் பாஜக வேட்பாளரான எடியூரப்பாவின் மகன் ராகவேந்திராவை எதிர்த்து சுயேச்சையாக போட்டியிடுகிறார்.

News April 13, 2024

2024 தேர்தல்: பாஜக Vs பாஜக (2)

image

உத்தர பிரதேச மாநிலம் பைரேலி தொகுதி எம்பியான சந்தோஷ் கங்க்வாருக்கு, மக்களவைத் தேர்தலில் போட்டியிட பாஜக வாய்ப்பு வழங்கவில்லை. இதனால் அதிருப்தியடைந்த அவர், மத்திய தொழிலாளர் துறை அமைச்சர் பதவியை அண்மையில் ராஜினாமா செய்தார். அவரது ஆதரவாளர்கள், உத்தர பிரதேச மாநில பாஜக தலைவர் பூபேந்திர சவுத்ரி வீட்டின் முன்பு போராட்டத்திலும் ஈடுபட்டனர்.

News April 13, 2024

2024 தேர்தல்: பாஜக Vs பாஜக (3)

image

2024 தேர்தலில், முன்னாள் ராணுவ தளபதியும், எம்பியுமான வி.கே. சிங்கிற்கு மீண்டும் பாஜக வாய்ப்பு வழங்கவில்லை. மேனகா காந்தி மகன் வருண் காந்திக்கும் அக்கட்சி வாய்ப்பு அளிக்கவில்லை. இதனால் அவர்களின் ஆதரவாளர்களும் அதிருப்தியில் உள்ளனர். காஜியாபாத்தில் வி.கே. சிங்கிற்கு பதிலாக அதுல் குமார் கார்க் வேட்பாளராக நிறுத்தப்பட்டதற்கு ராஜபுத்திர சமூகத்தினரின் மகாபஞ்சாயத்தில் அதிருப்தி தெரிவிக்கப்பட்டது.

News April 13, 2024

2024 தேர்தல்: பாஜக Vs பாஜக (4)

image

ஹரியானா மாநிலம் ஹிசார் தொகுதி எம்பியான பிரிஜேந்திர சிங் அதிருப்தியால், பாஜகவில் இருந்து விலகி காங்கிரசில் சேர்ந்தார். அவரது தந்தையும், முன்னாள் மத்திய அமைச்சருமான பிரேந்தர் சிங்கும் காங்கிரசில் சேர்ந்தார். ஜாட் சமூகத்தினரான பிரேந்தர் சிங், மத்தியில் மோடி தலைமையில் முதல் அரசு அமைந்தபோது காங்கிரசில் இருந்து விலகி பாஜகவில் சேர்ந்தவர். மேலும் இவர், ஜாட் சமூகத் தலைவர் சோட்டு ராமின் பேரனும் ஆவார்.

News April 13, 2024

நடிகர் மரணம்: இபிஎஸ் உருக்கமாக இரங்கல்

image

நடிகரும், அதிமுகவின் நட்சத்திர பேச்சாளருமான அருள்மணி மறைவிற்கு இபிஎஸ் உருக்கமாக இரங்கல் தெரிவித்துள்ளார். கட்சி மீதும், கட்சி தலைமை மீதும் விசுவாசம் கொண்டு, கட்சி கொள்கைகளை பொதுக்கூட்டங்கள் வாயிலாக மக்களுக்கு எடுத்துரைத்தவர் அருள்மணி. அவரது மறைவு அதிமுகவிற்கு பெரும் இழப்பு. அவர் ஆன்மா இறைவன் திருவடி நிழலில் அமைதிபெற எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திக்கிறேன் என்று இரங்கல் தெரிவித்துள்ளார்.

News April 13, 2024

சென்னை செல்வதாக கூறிய தீவிரவாதிகள்

image

பெங்களூரு குண்டுவெடிப்பு வழக்கில் கைதான 2 தீவிரவாதிகளும், கொல்கத்தா லாட்ஜில் சென்னைக்கு செல்வதாக கூறி தங்கியது விசாரணையில் தெரிய வந்துள்ளது. கொல்கத்தா லாட்ஜில் தீவிரவாதிகள் அப்துல், முசாவீர் நேற்று கைது செய்யப்பட்டனர். விசாரணையில், குண்டுவெடிப்பு நடந்து 12 நாள்கள் கழித்து, அங்கு வந்ததும், டார்ஜிலிங்கில் இருந்து வருவதாகவும், சென்னைக்கு சென்று கொண்டிருப்பதாக கூறி தங்கியதும் தெரிய வந்துள்ளது.

News April 13, 2024

IPL: குல்தீப் யாதவுக்கு ஆட்டநாயகன் விருது

image

லக்னோ அணிக்கு எதிரான ஐபிஎல் போட்டியில், டெல்லி வீரர் குல்தீப் யாதவுக்கு ஆட்டநாயகன் விருது வழங்கப்பட்டுள்ளது. அபாரமாக பந்துவீசிய அவர், 4 ஓவர்களில் 20 ரன்கள் மட்டும் கொடுத்து கே.எல்.ராகுல், மார்க்கஸ் ஸ்டாய்னிஸ், நிக்கோலஸ் பூரன் ஆகிய 3 முக்கிய விக்கெட்டுகளை கைப்பற்றினார். CSK, KKR, MI அணிகளுக்கு எதிரான போட்டிகளில் காயம் காரணமாக பங்கேற்காத அவர், அணிக்கு திரும்பிய உடன் வெற்றியைத் தேடித் தந்துள்ளார்.

News April 13, 2024

வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்த வெற்றிமாறன்

image

‘வாடிவாசல்’ படம் கைவிடப்பட்டதாக வதந்திகள் பரவி வந்த நிலையில், இயக்குநர் வெற்றிமாறன் அதற்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார். நிகழ்ச்சி ஒன்றில் பேசிய அவர், “விடுதலை 2 படத்தின் ரிலீஸ் தேதியே எனக்குத் தெரியாது. அது முடிந்த பிறகு, வாடிவாசல் பட வேலைகள் இருக்கிறது. அதன் பிறகு தான், அடுத்து எந்தப் படம் என்பது எனக்குத் தெரியும். அதனால், ‘வடசென்னை 2’ எடுப்பேனா? இல்லையா? என்பது எனக்குத் தெரியாது” எனக் கூறினார்.

error: Content is protected !!